Mother says: Try this little exercise: at the beginning of the day, say: “I won’t speak without thinking of what I say.”
You believe, don’t you, that you think all that you say! It is not at all true, you will see that so many times the word you do not want to say is ready to come out, and that you are compelled to make a conscious effort to stop it from coming out.
I have known people who were very scrupulous about not telling lies, but all of a sudden, when together in a group, instead of speaking the truth they would spontaneously tell a lie; they did not have the intention of doing so, they did not think of it a minute before doing it, but it came “like that”.Why?—because they were in the company of liars; there was an atmosphere of falsehood and they had quite simply caught the malady!
It is thus that gradually, slowly, with perseverance, first of all with great care and much attention, one becomes conscious, learns to know oneself and then to become master of oneself.
- From Question and Answers by Mother.
'(Men, countries, continents, Truth or abyss) தேசங்களும், கண்டங்களும், மனித குலமும் சத்தியத்தைத் தழுவ வேண்டும். இன்றேல் பாதாளத்தில் தள்ளப்படும்' என்ற புது வருஷச் செய்தியை அன்னை நெடுநாளைக்கு முன் அளித்தார்கள். எந்த வகையாகப் பார்த்தாலும், ஓரளவு பொய்யை நாம் ஏற்றுக்கொள்கிறோம், பயன்படுத்துகிறோம். அன்னையிடம் முழுப்பயனடைய பொய் அறவே உதவாது. யோகத்தை மேற்கொண்டு பல கட்டங்களைத் தாண்டியபின், ஒரே ஒரு பொய் சொன்னால், அதுவரை பெற்ற யோகப் பலன் கம்ப்யூட்டர் திரையில் எழுத்து மறைவதைப் போல் கணப்பொழுதில் அழிந்துவிடும்.
நாம் பலவகையான பொய்யைச் சொல்கிறோம். பொய்யை பல நிலைகளில் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- யோசனையின்றி பொய் பேசுவது,
- பொய்யை நம்புவது,
- பொய்யை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது,
- வாழ்க்கையைப் பொய்யின் அடிப்படையில் அமைத்துக் கொள்வது,
இப்படியெல்லாம் செய்யும் பொழுது ஜீவன் பொய்யால் பல்வேறு அளவில் மறைக்கப்படுகிறது. பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும், முழு ஜீவனும் பொய்யால் ஆட்கொள்ளப்படாததால், அன்னை மேலும் நம்முள் செயல்படுகிறார்கள். இதன் உண்மையை அறியவேண்டுமானால், ஒரு பொய்யும் சொல்வதில்லை என்று முடிவு செய்து அதனடிப்படையில் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அன்னை செயல்படும் வேகம், மெய்யின் திறத்தை வெளிப்படுத்தும்.
சத்தியம்என்ற கட்டுரையில் இருந்து..
No comments:
Post a Comment