இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 16 December 2014

Message of the Day: விபத்தை விலக்கும் அருளின் சூழல்



Image courtesy Digitalfrescos.com              Protection Flower, Bougainvillea
Sri Mother says:
Accidents are due to many things; in fact they are the result of a conflict of the forces in Nature, a conflict between the forces of growth and progress and the forces of destruction. When there is an accident, an accident that has lasting results, it is always the result of a more or less partial victory of the adverse forces, that is, of the forces of disintegration, disorganisation. It depends.                  

We know that fear always brings what one fears. If you fear an accident, this acts like a magnet drawing the accident towards you. In this sense, it may be said that it is the result of character. And the same thing holds for illness. There are people who can move about among the sick and in places where there are epidemics and never catch a disease. There are others—it is enough for them to spend an hour with a sick person, they catch the illness. That too depends on what they are within themselves.


(Ref: Question and Answers 1954- The Mother)


விபத்தை விலக்கும் அருளின் சூழல்.
அருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன? அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி
நினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக, வேண்டியவை, நூறு அம்சங்கள். ரோட்டிலும், டிரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்திச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.
  நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது.  நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.அவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.


அன்பர் அறிவில்லாமல் செயல்பட்டு ஆபத்தை அறைகூவி அழைக்கும் பொழுதெல்லாம் அன்னை அடுத்தவர் மூலம் ஆபத்தை விலக்குகிறார். நிலைமையை மாற்றி ஆபத்தை வாய்ப்பாக மாற்றுகிறார், சட்டத்தை மாற்றி நிலைமையைக் காப்பாற்றுகிறார்.

- கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்
 என்ற கட்டுரையில் இருந்து..

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.