இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label அரவிந்தர் பாண்டிசேரி அன்னை. Show all posts
Showing posts with label அரவிந்தர் பாண்டிசேரி அன்னை. Show all posts

Thursday, 12 June 2014

அன்னையின் பாதையில் : இறைவனின் விருப்பமே வாழ்வில் செயல்படும்



Michel Montecrossa and The Chosen Few
Image Courtesy :                                     www.Mirapuri-Enterprises.com
நமது  சிந்தனைக்கு :

அன்னையின் வாழ்வில் நாம் வரும்  போது  அல்லது வர  முயற்சிக்கும் போது, நமது வாழ்வில்  மாற்றங்கள் என்பது மாறாமல் வரும். திருவுருமாற்றம் நிகழ, நாம் அன்னையை சரணாகதி அடையும் அதே வேளையில், நமது எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும், உணர்விலும்  நாம் எத்தகைய மாற்றங்களைக் கொள்ள வேண்டும் என்பதற்கு, நம்மைப்பற்றி நாமே அறிவது உதவி செய்யும். அதற்கான பகுதியே இந்த நமது சிந்தனைப் பகுதி.

வாழ்வில் நமக்கு பல வகையிலும் ஆசைகளும், விருப்பு வெறுப்புகளும் மற்றும் Choices உள்ளன. நாம் விருப்பம் கொண்ட ஒரு செயல் நமக்கு நன்மைதான் தரும் என்பதனையும், நமக்கு வெறுப்பைத் தரும் ஒன்று, நமக்கு தீமை மட்டுமே செய்யும் என்பதனையும் கூற முடியாது. ஏனெனில், இவையாவும், மனிதனின் அறிவால் மட்டும் அளக்கப்படுவன ஆகும். அவனது ego செயல்படும் போது, செய்யும் செயலின் நன்மை தீமையை பொருத்து கர்மம் அவனை ஆட்கொள்கிறது.

நமது விருப்பங்கள் அல்லது தேவைகளை, அவற்றின் விளைவுகளைப் பற்றி கூட எண்ணாமல், நமது சக்தியை பயன்படுத்தியோ அல்லது பிரார்த்தனையின் மூலமோ மக்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் இல்லையா?  இத்தனை பிரார்த்தனைகளை வாழ்வு முழுது செய்யும் நாம், இது இறைவனின் விருப்பத்திற்கு உட்பட்டதா என்பதை அறிய முயல்கிறோமா என்பதே இன்றைய சிந்தனை. அன்னையின் வாழ்வில் உள்ள ஒருவர், இறைவனின் விருப்பத்தினை நாடும் போது, செயலில் வெற்றி கிடைப்பதோடு, அவர் விருப்பு, வெறுப்பு அற்ற வாழ்வைப் பெறுவதோடு, கர்மத்தில் இருந்து விடுதலை பெறுவதோடு, இறைவனின் விருப்பத்தினை நிறைவேற்றும் ஒரு கருவியும் ஆகிறார். அத்தகைய உன்னதமான நிலையிலைப் பெற, நம் விருபத்தினை தவிர்த்து, இறைவனின் நோக்கம் என்ன என்பதனை அறிய நாம் முற்படவேண்டும்.

ஸ்ரீ அன்னையின் பாதையில்:

அன்னை இதுபற்றி கூறும் விளக்கத்தினைக் காண்போம்.

Question: How can we know what the divine Will is?
 இறைவனின் விருப்பத்தை நாம் எப்படி அறியமுடியும் என்ற கேள்விக்கு அன்னையின் பதில்.
One does not know it, one feels it. And in order to feel it one must will with such an intensity, such sincerity, that every obstacle disappears. As long as you have a preference, a desire, an attraction, a liking, all these veil the Truth from you. Hence,
the first thing to do is to try to master, govern, correct all the movements of your consciousness and eliminate those which cannot be changed until all becomes a perfect and permanent expression of the Truth.
 இறைவனின் விருப்பத்தை நாம் அறிய முடியாது, உணரவே முடியும் என்கிறார் அன்னை. அதனை உணர, நாம் அவ்வளவு உண்மையுடன் இருந்து, அதற்குண்டான அத்தனை தடைகளும் மறையும் வரை முயல வேண்டும். நமக்கு சொந்த விருப்பங்களும், ஆசைகளும், பற்றும் இருக்கும் வரை உண்மை அல்லது சத்தியத்தில் இருந்து விலகுகிறோம். அதனால், இறைவனை அறிய, நமது உணர்வு நிலையை consciousness-அதன் இயக்கங்களை, அது உண்மையின் பாதையை விட்டு விலகாமல், அது எப்போது உண்மையின் முழு பிரதிபலிப்பாக முழுமையாக ஆகிறதோ, அதுவரையிலும், நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

And even towill this is not enough, for very often one forgets to will it. What is necessary is an aspiration which burns in the being like a constant fire, and every time you have a desire, a preference, an attraction it must be thrown into this fire. If you do this persistently, you will see that a little gleam of true consciousness begins to dawn in your ordinary consciousness.
 உண்மையைப் பின்பற்ற, விருப்பம் மட்டும் போதாது. உண்மையைப் பற்ற வேண்டும் என்ற ஆசையானது, aspiration, நம் மனதில் அணையாத தீயினைப் போல இருக்கவேண்டும். எந்த ஆசை வந்தாலும், விருப்பம் எழுந்தாலும், பற்று வந்தாலும், இத்தீயிடம் நாம் அவற்றைச் சேர்த்துவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்யும் பொது, நமது சாதாரண மனிதனுக்குரிய உணர்வு நிலை, உண்மைக்குரிய உணர்வு நிலையை எட்டும் என்கிறார் அன்னை.
At first it will be faint, very far behind all the din of desires, preferences, attractions, likings. But you must go behind all this and find that true consciousness, all calm, tranquil, almost silent.
Those who are in contact with the true consciousness see all the possibilities at the same time and may deliberately choose even the most unfavourable, if necessary. But to reach this point,
you must go a long way.
உண்மை, சத்தியம் என்ற உணர்வு நிலையை consciousness நாம் பெறும்போது, ஒரு செயல் நடக்க எல்லாவிதமான, சாதகமான சூழலும் உருவாவதோடு, இதுநாள் வரை நாம் வெறுத்த அல்லது விரும்பாத  வழியினைக் கூட தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையும் வரலாம். ஏனெனில் அதுவே இறைவனின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த நிலையை அடைய, இன்னும் அன்னையின் சத்திய வழியில் தொலை தூரம் பயணிக்கக் வேண்டும்.


அன்னையின் வழி செல்வோம். சத்தியத்தின்உணர்வைப்பெறுவோம்.அன்னையின் திருப்பாதங்களே சரணம் !

 Ref: Questions and Answers - 1950 - The Mother

Thursday, 20 March 2014

அன்னையின் பாதையில்: இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார்

நமது சிந்தனைக்கு:

அகங்காரம் அல்லது ego நம்மை சூழ்ந்திருக்கும் போது நாம், வாழ்வில் துன்பங்கள் நேரும்போது, அது நமது அகந்தையால் நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று என்பதை உணராமல், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று வருந்துகிறோம். அதே சமயத்தில், நாமே எதிர்பாராமல், அதிர்ஷ்டம் அல்லது பெறற்கரிய வாய்ப்பு நம்மை தேடி வரும்போது, சந்தோஷத்தில் திளைக்கும் நம்மில் எத்தனை பேர், அதனை இறைவனின் அருள் என்பதை உணர்ந்து அதற்கு நன்றி கூறுகிறோம்? உண்மை எதுவெனில் நம்முடைய இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் நம்மை மறப்பதே இல்லை. நாம்தான்,   நமது இன்ப, துன்ப உணர்வுகளில் சிக்கி இறைவனை மறந்துவிடுகிறோம்.

அன்னையின் பாதையில் :

நமக்கு நெருக்கடியான காலகட்டத்திலும் இறைவன் நம்மோடு இருக்கிறார். நம்மால்தான்  உணர முடிவதில்லை. நாம் இறைவனை பற்றி அறிய முயலும் போது, நம்மால் அவனை உணரவும் முடியும். ஸ்ரீ அன்னை, அரவிந்தர் எழுதிய புத்தகங்களின் மூலம் நாம் நம் மனதில் இறைவனைப் பற்றி எழும் பல சந்தேகங்களுக்கு விடை காண முடியும், இறைவனின் முழு ரூபத்தையும் அறிய முடியும், அவனது Presence ஐ வாழ்வில் உணர முடியும்.

நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்போதும் மறக்காதீர்கள். இறைவனின்  உதவியும், வழிகாட்டுதலும் எப்போதும் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஆறுதலாக, துணையாக உங்களுடன் இருக்கும் ஒரே நண்பன் இறைவனே என்கிறார் ஸ்ரீ அன்னை. இறைவனின் மீது நம்பிக்கை வைத்தால், அவன் உங்களுக்கு எதையும் செய்யக் காத்திருக்கிறான் என்கிறான் ஸ்ரீ அன்னை.

Never forget that you are not alone. The Divine is with you helping and guiding you. He is the companion who never fails, the friend whose love comforts and strengthens. Have faith and He will do everything for you. The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence. Have faith and He will do everything for you.
-The Mother

ஸ்ரீ அன்னை இறைவனை பற்றிக் கூறிய மற்றும் சில கருத்துக்கள் -
  • Whatever you do, always remember the Divine. 
  • The Divine manifests upon earth whenever and wherever it is possible. 
  • In each heart, the Divine’s Presence is the promise of future and possible perfections.
  •  It is only in the Divine that we can find perfect peace and total satisfaction.
  -The Mother

கடவுள் நம்மிடம் கோபம் கொள்வாரா? நாம் துன்பப்படும் போது நமக்காக கண்ணீர் சிந்துவாரா, கடவுள் நம்மை தண்டிப்பாரா என்று அன்னையிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அன்னையின் பதில்களைக் காணுங்கள்.

Q:  Does God ever become angry with us? If yes, when? 
Mother's Answer : When you believe He is angry. 

Q: If we shed tears for God, does He ever shed a tear for us?
Mother's Answer: Surely He has deep compassion for you, but His eyes are not of the kind that shed tears.

Q: Mother, Does the Divine punish injustice? Is it possible at all for Him to punish anybody?

Mother's Answer: The Divine does not see things as men do and has no need to punish or reward. Each and every action carries in itself its fruit and its consequences. According to the nature of the action, it brings you near to the Divine or takes you away from Him, and that is the supreme consequence.
                   (இறைவன் உலகில் நடக்கும் எந்தச்  செயலையும், மனிதனின் செயலாக பார்ப்பதில்லை, அதனால், மனிதனை அவர் தண்டிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு செயலும் அதற்கான பலனையும், விளைவுகளையும் கொண்டுள்ளது. அந்த செயலின் இயல்பிற்கேற்ப, அது உங்களை இறைவனின் அருகிலோ அல்லது இறைவனைனிடம் இருந்து உங்களை விலகியோ உங்களை அழைத்துச் செல்கிறது என்கிறார் அன்னை.)

இறைவனை நாம், எவ்வளவு தூரம் அறிய முயல்கிறோமோ, அவ்வளவு தூரம் அவனது அருகாமையையும், நம்முடன் அவன் இருப்பதையும் (presence) உணர முடியும்.





Wednesday, 8 January 2014

சத்திய சிந்தனை



அன்னையிருக்கிறார் என்றறிவது ஞானம்.

அன்னையிருப்பதை நினைக்காமலே உணர்வது தைரியம்.

இடைவிடாது அவரை அழைப்பது பாதுகாப்பு.

எனக்கு அழைக்கவே தோன்றவில்லை எனற நிதானம் அன்னையின் ஜீவியம் நம்முள் இருபதாகும்.





  • - திரு. கர்மயோகி அவர்கள் 
    Ref: Malarntha Jeeviyam, Jan 2014

    Tuesday, 7 January 2014

    மலரும் அது கூறும் செய்தியும் - 4


    Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
     When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
    -  The Mother

     அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

    இன்றைய மலர்   :

    Tube Rose -  சம்பங்கி ,
    New Creation
    புதிய சிருஷ்டி   

    Rajanigandha
    Image Courtesy: Flowersofindia.net

    ஆரஞ்சு செம்பருத்தி - புதிய சிருஷ்டியின் பலவகையான சக்தி   Manifold power of the new creation: 
    the new creation will be rich in possibilities.

    Hawaiian hibiscus (Bright Orange or Bright red flowers)

    Sea Hibiscus



    இன்றைய செய்தி/ Message of the Day :
       ............Sweet Mother, You write: “Each one here represents an impossibility to be solved.” Could You explain to me what this means exactly?
     It is an ironic way of saying that the most difficult cases, from the stand point of transformation, are gathered here to concretise and synthesise the work of transforming the earth in order to prepare the new creation.

    ------------------------

    Sri Aurobindo came upon earth to announce the manifestation of the supramental world. And not only did he announce this manifestation but he also embodied in part the supramental force and gave us the example of what we must do to prepare ourselves for this manifestation. The best thing we can do is to study all he has told us, strive to follow his example and prepare ourselves for the new manifestation. This gives life its true meaning and will help us to overcome all obstacles. Let us live for the new creation and we shall grow stronger and stronger while remaining young and progressive.

    ----------------------------------

    Money is not meant to make money, money is meant to make the earth ready for the advent of the new creation.

    -------------------------------

    - Book : Question and Answers ; Words of the Mother by The Mother


    வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமானால், வீட்டில் உபயோகப்படக்கூடிய பொருள்களுக்குத் தகுந்த உபயோகம் ஏற்படுத்துவது நல்லது. யாரும் கவனிக்காத பொருள்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பங்கள், கருத்துகளை இப்பொழுது பொருட்படுத்தி அவை பயன்படும் ஒரு வாய்ப்பை முயன்று உற்பத்தி செய்தால், புதிய வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்..

    - திரு. கர்மயோகி.
     


    Tags:

    Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Tube Rose -  சம்பங்கி ,


    About this Blog

    My photo
    A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.