அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன? அது எப்பொழுது வெளிப்படும்?
வாழத் தேவையான சக்தி (energy for survival) நம்முடைய சக்தி. சமூகத்தில் நம் நிலை தொடர்ந்து உயரத் தேவையான சக்தி (social energy) சமூகத்தின் சக்தி. பொய்யான வாழ்வில் அடிப்படையை நம்பாமல், மெய்யான அன்னை வாழ்வின் அடிப்படையை மட்டும் நம்பி வாழ்ந்து, வளர உதவும் சக்தி அன்னை சக்தி. இதை பரிணாம சக்தி (evolutionary energy) எனவும், சத்திய ஜீவிய சக்தி எனவும், ஆன்மிகச் சக்தி எனவும் கூறினால் ஓரளவு பொருந்தும். பயத்தை, தைரியமாக மாற்றும் சக்தி உலகில் உண்டு என்றால் அது 1956க்குப் பின் பூமியின் சூழலில் வந்துள்ள அன்னை சக்தியேயாகும். மரணத்தை அமரவாழ்வாக மாற்றுவதும் வலியை ஆனந்தமாக மாற்றுவதும், சோர்வைத் தெம்பாக மாற்றுவதும், சந்தேகத்தை நம்பிக்கையாகவும், வேதனையை இன்பமாகவும், இருளை ஒளியாகவும், அறியாமையை அறிவாகவும் அன்னை சக்தி மாற்றவல்லது. நான் சொல்லும் (shift) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது இது. இந்தச் சக்தியை எப்படி உள்ளே எழுப்புவது? அதனால் இம்மாற்றத்தை எப்படிப் பெற்று நிரந்தரமாக்குவது? அன்னையை அழைத்தால் அன்னை சக்தி நம்முள் எழும். அன்னையை நினைத்தாலும் இச்சக்தி நம் உள்ளேயிருந்து புறப்படும் என்பது உண்மை. நாம் எப்பொழுதோ ஒரு முறை அன்னையை நினைக்கிறோம். பிரச்சினை வந்தால், அன்னையை அழைக்கிறோம். பிரச்சினை தீருகிறது. அவை ஓரிழை இம்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. மாற்றம் நிரந்தரமாக எப்படி ஏற்படும்? நினைவையும், அழைப்பையும் நிரந்தரமாக்கினால் மாற்றம் நிரந்தரமாக ஏற்படும். . |
- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..
- The Mother
No comments:
Post a Comment