இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 8 December 2014

Message of the Day : விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது





Mother says: You must choose; there is no “force like that” which chooses for you, or chance or luck or fate—this is not true. Your will is free, it is deliberately left free and you have to choose. It is you who decide whether to seek the Light or not, whether to be the servitor of the Truth or not—it is you. Or whether to have an aspiration or not, it is you who choose. And even when you are told, “Make your surrender total and the work will be done for you”, it is quite all right, but to make your surrender total, every day and at every moment you must choose to make your surrender total, otherwise you will not do it, it will not get done by itself. It is you who must want to do it. When it is done, all goes well, when you have the Knowledge also, all goes
well, and when you are identified with the Divine, all goes even better, but till then you must will, choose and decide.

- From Question and Answers by Mother.


தவறு செய்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள், "என்ன செய்வது?  என் நேரம்.  நேரத்திற்கேற்ப புத்தி. அதனால் நான் இந்தத் தவற்றைச்  செய்துவிட்டேன்.
இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்'  என்பார்கள்.

லோக சஞ்சாரம் செய்துகொண்டிருந்த மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் தம் பக்தனான ஓர் ஏழைக்கு உதவ முன்வந்து,  அவன் நடந்து வந்துகொண்டிருந்த பாதையில் ஒரு  தங்கக்கட்டியைப்  போட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஏழைக்கு ஒரு விசித்திர  எண்ணம் தோன்றியது. "குருடன் எப்படி நடப்பான் என்று  பார்க்கலாமா?"என்று எண்ணி, கண்களை மூடிக்கொண்டு நடக்க  ஆரம்பித்தான்.  அதனால் பாதையில் கிடந்த தங்கக்கட்டியை அவனால்  பார்க்க முடியாது போயிற்று.  கடவுள் கொடுக்கத் தயாராக  இருந்தாலும், விதி அவனை அனுபவிக்க விடவில்லை. விதி  வலிது. அவதாரப் புருஷனான இராமனின் முன் மாயமான்  தோன்ற, சீதை அதைப்  பார்த்து ஆசைப்பட, விதி அவர்களைக்  கொண்டே தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது.


விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய  ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது. அன்னை அப்படிப்பட்ட  நேரங்களில் தம் பக்தனுக்குத் துணை செய்கின்றார். ஆனால்,  அவனுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அன்னையால் செயல்பட  முடியாது. பக்தன் பண்பட்ட பாத்திரமாக இருந்து, அன்னையின்  அருள் செயல்படுவதற்கு முழுமையாக உதவ வேண்டும்.
- கர்மயோகி அவர்களின் அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்
என்ற கட்டுரையில் இருந்து..

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.