What Sri Aurobindos' represents in the worlds' history is not a teaching, not even a revelation; it is a decisive action direct from the Supreme . - The Mother அன்னை அரவிந்தர் நூல்களும் ஒருவகையில் “அன்னை”யேயாகும். நம் வீட்டில் அவை இருப்பது அன்னையிருப்பது போலாகும். போட்டோவில், “நான் உயிருடன் இருக்கின்றேன்” என்று அன்னை கூறுவது போல், இந்த நூல்களில் அன்னை உயிருடன் இருக்கின்றார். படிப்பவர்க்கு அவர்கள் படிக்கும் முறைக்கேற்ப அன்னை தம்மை அளிக்கின்றார். எதுவும் முடியாதவரும் இந்நூல்களை வாங்கி வந்துவிட்டால், அடிக்கடி அவற்றை எடுத்து இரண்டு நிமிஷம் பார்ப்பதால் அதனுடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பேற்படும். மனதில் ஓர் எண்ணம் ஏற்பட்டால், உடனே ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்தால், நம் கருத்துக்குரிய விளக்கமோ, தெளிவோ ஏற்படும். ஒரு செல்வர் மனை வாங்கினார். அதைத் தொடர்ந்து மற்றொரு மனை விலைக்கு வந்தது. புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். முதல் சொல் “Go ahead”, “ஏற்றுக்கொள்” என்ற கருத்தில் இருந்தது; ஏற்றுக்கொண்டார்; பெரும் பலன் விளைந்தது. தினமும் 4, 5 முறை இப்பழக்கத்தைக் கைக்கொண்டால் புத்தகத்துடன் ஏற்படும் தொடர்பு அன்னையுடன் ஏற்படும் தொடர்பாக மாறும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒட்டியும், மனதில் எழும் எண்ணங்களை ஒட்டியும் புத்தகத்தைப் பார்க்கும் பழக்கம், நமக்கும் புத்தகத்திற்கும் தொடர்பேற்படுத்தி, ஒரு வகையில் படிக்கும் பலனை அளிக்கும். .....ஸ்ரீ அரவிந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் குறிப்பான சிறப்பு உண்டு. (Blessing Packet) அன்னையின் பிரசாதம் சக்தி வாய்ந்தது. மகளுக்குப் பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் ஆப்பரேஷன் தியேட்டரில் சிக்கலான நேரம். டாக்டர்கள் முயன்று பார்த்து, “இனி முடியாது. பிரசவம் தானே நடைபெறாது. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்தபொழுது, பெண்ணின் தாயார் கையில் பிரசாதமில்லாமல் தவித்துப்போனார். பிரசாதம் இல்லாவிட்டாலும் அன்னையைப் பற்றிய புத்தகம் வைத்திருந்தார். பெண்ணின் மார்பில் புத்தகத்தை வைத்துப் பிரார்த்தனை செய்தார். வெளியில் போய் ஆப்பரேஷனுக்குத் தயாராக டாக்டர்கள் திரும்பி வருவதற்குள் பிரசவம் ஆகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தர், அன்னை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.- - கர்மயோகி அவர்களின் கட்டுரைகளில் இருந்து |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label Mother Aurobindo Books. Show all posts
Showing posts with label Mother Aurobindo Books. Show all posts
Tuesday, 10 March 2015
Message of the Day - அன்னை அரவிந்தர் புத்தகங்களைப் படிப்பதன் பலன்கள்
Thursday, 10 April 2014
அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.
அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.
நமது சிந்தனைக்கு:
நாம் எல்லோருமே ஏதோ ஒரு வழியில் இறைவனை பற்றி சிந்திக்கிறோம். ஆன்மீகம் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், தம் வாழ்வில் அவற்றை செயல்படுத்த எவ்வளவு தூரம் முயல்கிறார் என்பது கேள்விக்குரியதே. தம்மிடம் உள்ள குறைகளை, பிரச்சனைகளை, குணக்குறைகளால் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தம்மை தாமே சுத்தி செய்து கொள்ள நம்மில் எவ்வளவு பேர் தயாராக உள்ளோம் என்பதும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. நான் அப்படிதான் இருப்பேன், இதுதான் என் குணம் என்று கூறும் கடுமையான குணம் கொண்ட ஒருவர், எத்தனை ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீக முறைகளை பின்பற்றினாலும், ஆன்மீகத்தின் உண்மையை அவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
நம்மை நாம் முழுமையாக அறிவது என்பது நமது குறைகளை விலக்கி, பொய்யை அழித்து இறைவனிடம் நம்மை முழுமையாக நெருங்கச் செய்யும் வழியாகும். இது இறைவனை பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளும் வழியுமாகும்.
அன்னையின் பாதையில்:
அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.
"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.
அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.
ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின் விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.
எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.
Questions and Answers1929-31

-The Mother" A single day spent in contemplation of the supreme Truth is worth more than a hundred years lived in ignorance of the supreme Truth. "
அன்னையின் பாதையில்:
அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.
You believe you are so good, so kind, so well disposed and always full of good feelings. You wish no harm to anybody, you wish only good—all that you tell yourself complacently. But if you look at yourself sincerely as you are thinking, you notice that you have in your head a collection of thoughts which are sometimes frightful and of which you were not at all aware.
- ஸ்ரீ அன்னைFor example, your reactions when something has not pleased you: how eager you are to send your friends, relatives, acquaintances, everyone, to the devil! How you wish them all kinds of unpleasant things, without even being aware of it! And how you say, “Ah, that will teach him to be like that!” And when you criticise, you say, “He must be made aware of his faults.” And when someone has not acted according to your ideas, you say, “He will be punished for it!” and so on. You do not know it because you do not look at yourself in the act of thinking.
"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.
அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
Sometimes you know it, when it becomes a little too strong. But when the thing simply passes through, you hardly notice it—it comes, it enters, it leaves. Then you find out that if you truly want to be pure and wholly on the side of the Truth, then that requires a vigilance, a sincerity, a selfobservation, a self-control which are not common.
இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.
You begin to realise that it is difficult to be truly sincere. You flatter yourself that you have nothing but good feelings and good intentions and that whatever you do, you do for the sake of what is good—yes, so long as you are conscious and have control, but the moment you are not very attentive, all kinds of things happen within you of which you are not at all conscious and which are not very pretty.
ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின் விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.
எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.
Ref:If you want to clean your house thoroughly, you must be vigilant for a long time, for a very long time and especially not believe that you have reached the goal, like that, at one stroke, because one day you happened to decide that you would be on the right side. That is of course a very essential and important point, but it must be followed by a good many other days when you have to keep a strict guard on yourself so as not to belie your resolution.
Questions and Answers1929-31
Monday, 10 March 2014
Audio - English : One of the qualities of Sri Aurobindo that we should follow in our lives
அனைவருக்கும் இது ஒரு நல்ல வாரமாக அமைய வாழ்த்துகள்.
அன்பர்கள் தங்களின் கருத்துக்களை Comments பகுதியிலோ அல்லது
satyajeeviyam at yahoo. com என்ற முகவரிக்கோ அனுப்பி பகிர்ந்து கொள்ளலாம்.
Audio Topic : One of the qualities of Sri Aurobindo that we should have in our lives - An incident from Sri Aurobindo's Life
Play this following audio control to listen to the speech presented by Mrs. Janaki.
Click this link to play the audio
Thursday, 6 February 2014
அன்னையின் பாதையில்... பிறருடைய அபிப்பிராயங்களுக்காக மட்டுமே நாம் நம்மை நல்லவராக காட்டிக் கொள்ளலாமா ?
அன்னையின் பாதையில்...
பிறருடைய அபிப்பிராயங்களுக்காக மட்டுமே நாம் நம்மை நல்லவராக காட்டிக் கொள்ளலாமா ?
நமது சிந்தனைக்கு:
நாம் நல்லவர்தானா? அல்லது பிறர் குறை கூறுவார்கள் என்பதற்காக நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் செயல்களைச் செய்கிறோமா? அன்னையை ஏற்ற ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி இது. முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று மட்டுமே ஒரு தொழிலாளி தரும் கூடுதல் உழைப்பு, தனக்குப் பிடித்த ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க மட்டுமே முயற்சி செய்யும் ஒரு மாணவன், இனிக்க இனிக்கப் பேசும் மனிதர்கள் என சில உதாரணங்களைக் கூறலாம். அந்தத தொழிலாளி இயல்பாக, வீட்டில் சோம்பேறித்தனம் உள்ளவராக இருக்கலாம். அந்த மாணவன் படிப்பில் ஈடுபாடு இல்லாதவனாக கூட இருக்கலாம். பிறரிடம் நல்ல பெயர் வாங்க மட்டுமே இனிமையாக பேசுபவர்கள், வீட்டில் கடுமையை காட்டலாம். இல்லையா? இவ்வாறு நாம் செய்யும் பல செயல்களில் போலித்தனம், பொய்யும் நாம் அறிந்தோ, அறியாமலோ கலந்து விடுகிறது.
நமக்கு பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ, பிறரை திருப்தி செய்யும் பொருட்டோ அல்லது நாம் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளும் பொருட்டோ, நாம் சில நல்ல செயல்களைச் செய்கிறோம். எப்படி பார்த்தாலும், நமது இயற்கையான குணத்திற்கு அல்லது மனநிலைக்கு மாறாக போலித்தனமாக நாம் செய்யும் எந்த செயலும் உண்மைக்கு புறம்பானதுதானே?
அன்னையின் வாழ்வில் செல்வோருக்கு, பொய்யும் போலித்தனமும் என்றும் உதவாது என்பதை நாம் அறிவோம். மேற்கூறியது போல், பிறரின் நல்ல அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக மட்டுமே நாம் செய்யும் செயல்கள், நமது Weakness ஐ பலவீனத்தைக் குறிக்கிறது. அன்னை இதுபற்றி என்ன கூறுகிறார் என்று காண்போம்.
....................Oh, Lord!... To appear good in others’ eyes, to have public approval? Is that it?
First, the best way is to ask oneself why one values others’ approval. For what particular reason, because there are many reasons.... If you have a career and your career depends on the good opinion others have of you, then that’s a utilitarian reason. If you have a little, or much, vanity and like compliments, that’s another reason. If you attach great value to others’ opinion of you because you feel they are wiser or more enlightened or have more knowledge, that’s yet another reason. There are many others still, but these are the three chief reasons: utility, vanity —usually this is the strongest—and progress....................
.............
Finally, if one is sincere one desires no other approval except that of one’s teacher or one’s guru or of the Divine Himself. And that’s the first step towards a total cure of this little weakness of wishing to make a good impression on people........நம்முடைய, இந்த சிறுமையில் இருந்து நாம் அகல, நம்முடைய குரு அல்லது இறைவனின் நல்ல அபிப்பிராயங்களைப் பெறுவது மட்டுமே, ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். இறைவன் நம் மேல் வைத்திருக்கும் அபிப்பிராயமும், அவன் தரும் அங்கீகாரமும் மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும் . மற்றவர்களின் அபிப்பிராயங்களை, அவை நல்லதோ கெட்டதோ, அவைகளை சட்டை செயாமல் இருப்பதே நல்லது என்றும் கூறுகிறார்.
............Indeed, it is better not to care at all about what others think of you, whether it is good or bad.
But in any case, before reaching this stage, it would be less ridiculous to try to find out the impression you make on others simply by taking them as a mirror in which you see your reflection more exactly than in your own consciousness which is always over-indulgent to all your weakness, blindness, passions, ignorance.ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதல்ல. மற்றவர்களை, நமது குணங்களைக் காட்டும் கண்ணாடியாகக் கொள்வது, இந்த மனநிலையை அடைய உதவி செய்யும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் நமது அறியாமை, Weakness அல்லது பலவீனங்கள், நம்முடைய விருப்பு வெறுப்பு என எல்லாவற்றையும் அவர்களது செயல்பாடுகளின் மூலம் அறியலாம் என்கிறார் அன்னை.
.....when you have the chance of getting information that’s a little more trustworthy and reliable about the condition you are in, it is better not to ask the opinion of others, but only to refer all to the vision of the guru.
Subscribe to:
Posts (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.