கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.
ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும். இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.
- மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
- திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
- சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
- அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும்.
திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும்.
சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும்.
அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும்.
- பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
- அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
- பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
- அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.
- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..
- The Mother
No comments:
Post a Comment