Mother says:
Instead of letting oneself go in the stream of one’s nature,of one’s mood, one must constantly keep in mind this kind of feeling that one is a representative of the Supreme Knowledge, the Supreme Truth, the Supreme Law, and that one must apply it in the most honest, the most sincere way one can; then one makes great progress oneself and can make others also progress.
|
நாம் பலவகையான பொய்களைச் சொல்கிறோம்.
1. எவருக்கும் தீங்கிழைக்காத, யோசனையற்ற பொய்.
2. வெட்கப்படக்கூடியதை மறைக்கச் சொல்லும் பொய்.
3. நல்ல பெயர் வாங்கச் சொல்வது.
4. நஷ்டத்தைத் தவிர்க்கச் சொல்வது.
5. இலாபம் கருதிச் சொல்லும் பொய்.
6. தொழில் சம்பந்தமாகச் சொல்லும் ஏராளமான பொய்கள்.
7. யோசனையின்றி சொல்லும் பொய்யால் பிறருக்கு ஏற்படும் தீங்கு.
8. வேண்டுமென்றே பொய் சொல்லிபிறரை நஷ்டப்படுத்துவது.
9. பிறருக்குக் கெட்ட பெயர் வரவேண்டுமென பொய் சொல்வது.
10. வக்கிர புத்தியால் புனைந்துரைப்பது.
11. பிறரைத் தொந்தரவுபடுத்த புனைந்துரைத்த வக்கிரம்.
12. பிறருக்கு ஊறுசெய்து தான் பலன் பெற சொன்ன பொய்.
13. கடமை, நன்றியிலிருந்து புனைந்துரைப்பிக்கச் சொல்லும் பொய்.
14. பெரும் குற்றங்களைச் செய்யச் சொல்லும் பொய்.
நாம் ஏற்றுக்கொண்ட மெய், பொய் பல நிலைகளில் செயல்படும். நம்முடைய மெய்யின்
வலிமை எந்த அளவிலிருக்கிறது. பொய் நம்மில் எந்த அளவிலிருக்கிறது, நமக்குத்
தெரிந்தது எது தெரியாமல் செயல்படுபவை எவை என அறிந்துகொள்வது சற்று சிரமம்.
அது தெரிந்தால், மனம் அதை அதனடிப்படையில் செயல்படுவது கடினம். இவை
இரண்டையும் செய்ய முடிந்தால், நாம் மேலும் சத்தியத்தின் ஆட்சிக்குள்
வருகிறோம்
.
- பொய்யை விலக்குவது கடினம்.
- நம் பொய்யை விலக்குவது அவசியம், அது முடியும்.
- பிறர் பொய் நம்மிடம் கூறுவதை விலக்கப் பிறரை விலக்க வேண்டும்.
- உலக வாழ்வில் அது எளிமையாகச் செய்ய முடியாது.
- உடன் பிறந்தவர், பிள்ளைகள், பெற்றோர் நம்மிடம் பொய் சொல்வதால் அவர்களை எப்படி விலக்குவது?
- பிறர் பொய் நம் பொய்யின் பிரதிபலிப்பு.
- ஆழத்தில் நம் பொய்யை விலக்கினால் அவர்களால் நம்மிடம் பொய் சொல்ல முடியாது.
|
- கர்மயோகி அவர்களின்
சத்தியம், பூரண யோக வாயில்கள் ஆகிய
கட்டுரைகளில் இருந்து..
No comments:
Post a Comment