- Words from the Mother இன்றைய செய்தியை திரு. கர்மயோகி அவர்களின், உதாரணத்துடன் கூடிய விளக்க்கத்தின் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். ஆன்மீக ஞானம் புத்தியில் பிரதிபலிப்பதால் ஏற்படும் உணர்வை நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்கிறார் பகவான். புத்தியில் தெளிவாக இல்லாத ஒன்று, ஆன்மாவில் இருந்து அதன் பிரதிபலிப்பு புத்தியில் ஏற்பட்டால், அதன் விளைவான உணர்வை நம்பிக்கை என்று குறிப்பிடுகிறார். ஓர் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் செய்கிறார் ஒருவர். 12 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். M.A. பட்டத்தில் I Class வாங்கி விண்ணப்பித்துள்ளார். இன்டர்வியூவுக்குச் சென்றபொழுது 12 பேரைப் பார்க்கிறார். அவர்களில் M.A I Class பலர், II Class சிலர், M.Litt. ஒருவர், Ph.D. ஒருவர். இந்த உத்தியோகம் தனக்கில்லை என்று அறிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் உணர்வு மாறாக இருக்கிறது. இன்டர்வியூ முடிந்தபொழுது Ph.D. வாங்கியவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அறிவு தான் பெற்ற ஜெயத்தைப் பறைசாற்றுகிறது. எனினும் உணர்வு அசையாமல் அறிவிக்கப்பட்டது முடிவானதில்லை என்று நினைக்கிறது. உணர்வின் நிலையை வெளியே சொல்லக் கூச்சமாயிருக்கிறது. கல்லூரி வாயிலைக் கடக்கும்பொழுதும் உணர்வு தெளிவாக பழைய நிலையையே வற்புறுத்துகிறது. அறிவு அதை மூடநம்பிக்கை எனக் கேலி செய்கிறது. வெளியே வரும்பொழுது தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினால் புரொபஸர் கூப்பிடுவதாகச் சொல்கிறார். அங்குச் சென்றால், "ஒருவரே தேவை. Ph.D. உள்ளவரை நியமித்துவிட்டோம். உங்கள் பதில் சிறப்பானதால் வேறோர் இடத்தை ஏற்படுத்தி உங்களையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்று புரொபஸர் சொல்வதை அறிவு நம்புவதில்லை; உணர்வு பலித்து விட்டது. இதுவே நம்பிக்கை எனப்படுவது. அறிவுக்குப் புலப்படாத ஒன்றை (தெளிவாக இல்லை என்று அறிவுக்குப் புலப்படுவதை) ஆன்ம ஞானம் புரிந்துகொண்டு, புத்தியின் வழியாக அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு என்று சொல்வதை நம்பிக்கை உணர்வு என்கிறோம். நம்பினோர் கைவிடப்படார் என்பதும் இதுவே. -கர்மயோகி அவர்களின் தெய்வ நம்பிக்கை என்ற கட்டுரையில் இருந்து .. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Showing posts with label நம்பிக்கை. Show all posts
Monday, 20 April 2015
Message of the Day - Faith first, knowledge afterwards - அறிவு பெரியதா? நம்பிக்கை பெரியதா?
Tuesday, 26 August 2014
மலரும், அது கூறும் செய்தியும் - இறைவனின் மீதான நம்பிக்கை
Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
- The Mother
அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட அடுக்குச் செம்பருத்திப் பூ
Hibiscus rosa-sinensis - Chinese hibiscus, Hawaiian hibiscus, Rose- of-China
மலரின் பலன் :
Faith - நம்பிக்கை
Image Courtesy : http://www.backyardnature.net, |
இன்றைய செய்தி/ Message of the Day :
"Answers from Mother" என்ற நூலில் இருந்து ஒரு சிறிய பகுதி.
I repeat: having faith in yourself cannot take you very far and it is certain that sooner or later you will feel a reaction and be obliged to stop.
First establish the true attitude, which is to find your base, your support and your help in the Divine alone—then all possibility of fatigue will disappear. Until then it is better to let the
servant do at least part of the work, which you can supervise if you like.
(Summary or related thought - Not the Translation )
நாம், நம்மீது மட்டும் நம்பிக்கை வைத்து செய்யும், எந்த செயலும் நம்மை (வாழ்வில் ) வெகு தூரத்திற்கு அழைத்துச் செல்லாது. விரைவிலேயே அதற்கான பலனை நீங்கள் உணர்ந்து, அதனை நிறுத்த வேண்டிய கட்டாயம் வரலாம்.
செய்யும் எந்த செயலிலும், இறைவனை மட்டுமே துணையாக, உதவியாக, அடிப்படையாகக் கொள்ளும் உண்மையான மனப்பாங்கினை நாம் கொண்டால், எந்த செயலினை செய்யும் போது, அதில் ஏற்படும் சோர்வும், களைப்பும் மற்றும் பிரச்சனைகள் நீங்குககின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Sunflower
Subscribe to:
Posts (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.