Mother says:
|
Image Courtesy: FlowersofIndia.net |
It is good health, a solid body, well poised; when one does not have the nerves of a little girl that are shaken by the least thing; when one sleeps well, eats well.... When one is quite calm, well balanced, very quiet, one has a solid basis and can receive a large number of forces. If anyone among you has received spiritual forces, forces of the Divine Ananda, for example, he knows from experience that unless he is in good health he cannot contain them, keep them. He begins to weep and cry, gets restless to expend what he has received. He must laugh and talk and gesticulate, otherwise he cannot keep them, he feels stifled. And so by laughing, weeping, moving about he throws out what he has received. To be well balanced, to be able to absorb what one receives, one must be very quiet, very calm. One must have a solid basis, good health. One must have a very solid basis. That is very important. (Ref: Question and Answers 1953- The Mother)
உடல் நலம் : நாடித் துடிப்பு 72, டெம்பரேச்சர் 98.6°, சர்க்கரை 110, இ.ட. 90/110, எடை உயரத்திற்குத் தகுந்தாற்போருக்க வேண்டும் என்பதை இன்று பலரும் அறிவர். உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியின் செயலுக்கும், இருக்க வேண்டிய அளவை நிர்ணயித்துள்ளனர்.
• இவை எல்லாம் சரி.
• இவற்றிற்கு மேற்பட்ட உண்மையும் உண்டு.
• அது நிதானம் (inner balance).
• அந்த நிதானமிருந்தால் 5 அடி உயரமுள்ள பெண் 270 பவுண்டு எடையுடன் 87 வயது வாழ்வதும் உண்மையாக இருக்கும். இதுவும் அன்னை வாழ்வில் நடந்ததேயாகும்.
• அதையும் கடந்த உண்மையும் உண்டு.
எந்தச் சட்டம் மாறினாலும் அருள் செயல்
படுவதால் நிதானம் ஏற்பட்டு சட்டத்தைப்
புறக்கணித்து உடல் நலம் பெறும் என்பது
உண்மையானாலும் சட்டத்தை அவசியமாகப்
பின்பற்ற வேண்டும்.
• அன்னையின் ஆன்மீக அருள் தரும் நிதானத்தின் முழுப் பலன் பெற நாம் மருத்துவத் துறைக்குரிய (norms) சட்டத்தை மயிரிழை வழுவாமல் பின்பற்றுதல் அன்னைக்குகந்தது.
• இந்த நிதானமிருப்பதற்கு அடையாளம் சந்தோஷம்.
• சந்தோஷம் தானே உள்ளிருந்து எழுந்து வருமானால், மருத்துவத் துறையின் சட்டங்களைக் கடந்த ஆரோக்கியம் மனிதனுக்குண்டு.
அன்னையை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு சுருக்கமான வழியைச் சொல்லலாம். உடல் அன்னையை நினைவில்
வைத்துக்கொண்டால் உடல் நலம் பெருகி, உடல் வெண்கலம் போல் அமையும். உடல்
அன்னையை நினைப்பது என்றால் என்ன என்று கேள்வி எழும். அப்பைய தீக்ஷிதர்
தமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்திலும் சிவனை நினைக்க வேண்டும் என்று
விரும்பினார் என்று ஒரு செய்தியுண்டு. நமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்தில்
நினைவு இருந்தால், அது உடல் நினைவு வைத்திருப்பதாக அர்த்தம்.
குளிர்காலத்தில் பக்கத்தில் போர்வையை வைத்துவிட்டுப் தூங்கப்போனால் இரவில்
குளிர் அதிகமாகும் நேரம் போர்வையை எடுத்து நாம் போர்த்திக்கொள்கிறோம்.
காலையில் பார்த்தால் போர்த்தியிருப்பது தெரியும். எப்பொழுது
போர்த்திக்கொண்டோம் என்றுத் தெரியாது. உடலே தன் தேவையை உணர்ந்து, நமக்குத்
தெரியாமல் செய்த செயல் அது. உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை
நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல்,
அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.
- கர்மயோகி அவர்களின்
அருளமுதம் என்ற கட்டுரையில் இருந்து..
|
No comments:
Post a Comment