இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label தெய்வ நம்பிக்கை. Show all posts
Showing posts with label தெய்வ நம்பிக்கை. Show all posts

Monday, 20 April 2015

Message of the Day - Faith first, knowledge afterwards - அறிவு பெரியதா? நம்பிக்கை பெரியதா?




  • Faith is a certitude which is not necessarily based on experience and knowledge.
  • True faith does not depend on circumstances.

  • Faith in spiritual power must not depend on circumstances.

    A faith based on material proofs is not faith—it is a bargaining.

  • Faith first, knowledge afterwards.

- Words from the Mother

இன்றைய செய்தியை திரு. கர்மயோகி அவர்களின், உதாரணத்துடன் கூடிய விளக்க்கத்தின் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஆன்மீக ஞானம் புத்தியில் பிரதிபலிப்பதால் ஏற்படும் உணர்வை நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்கிறார் பகவான். புத்தியில் தெளிவாக இல்லாத ஒன்று, ஆன்மாவில் இருந்து அதன் பிரதிபலிப்பு புத்தியில் ஏற்பட்டால், அதன் விளைவான உணர்வை நம்பிக்கை என்று குறிப்பிடுகிறார்.

ஓர் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் செய்கிறார் ஒருவர். 12 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். M.A. பட்டத்தில் I Class வாங்கி விண்ணப்பித்துள்ளார். இன்டர்வியூவுக்குச் சென்றபொழுது 12 பேரைப் பார்க்கிறார். அவர்களில் M.A I Class பலர், II Class சிலர், M.Litt. ஒருவர், Ph.D. ஒருவர்.

இந்த உத்தியோகம் தனக்கில்லை என்று அறிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் உணர்வு மாறாக இருக்கிறது.

இன்டர்வியூ முடிந்தபொழுது Ph.D. வாங்கியவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அறிவு தான் பெற்ற ஜெயத்தைப் பறைசாற்றுகிறது. எனினும் உணர்வு அசையாமல் அறிவிக்கப்பட்டது முடிவானதில்லை என்று நினைக்கிறது. உணர்வின் நிலையை வெளியே சொல்லக் கூச்சமாயிருக்கிறது.

கல்லூரி வாயிலைக் கடக்கும்பொழுதும் உணர்வு தெளிவாக பழைய நிலையையே வற்புறுத்துகிறது. அறிவு அதை மூடநம்பிக்கை எனக் கேலி செய்கிறது.

 வெளியே வரும்பொழுது தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினால் புரொபஸர் கூப்பிடுவதாகச் சொல்கிறார். அங்குச் சென்றால், "ஒருவரே தேவை. Ph.D. உள்ளவரை நியமித்துவிட்டோம். உங்கள் பதில் சிறப்பானதால் வேறோர் இடத்தை ஏற்படுத்தி உங்களையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்று புரொபஸர் சொல்வதை அறிவு நம்புவதில்லை; உணர்வு பலித்து விட்டது. இதுவே நம்பிக்கை எனப்படுவது.

அறிவுக்குப் புலப்படாத ஒன்றை (தெளிவாக இல்லை என்று அறிவுக்குப் புலப்படுவதை) ஆன்ம ஞானம் புரிந்துகொண்டு, புத்தியின் வழியாக அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு என்று சொல்வதை நம்பிக்கை உணர்வு என்கிறோம். நம்பினோர் கைவிடப்படார் என்பதும் இதுவே.


-கர்மயோகி அவர்களின் தெய்வ நம்பிக்கை என்ற கட்டுரையில் இருந்து ..

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.