இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

Thursday, 29 May 2014

கதையும், கருத்தும் - 1



  • “There is no more benumbing error than to mistake a stage for the goal or to linger too long in a resting place.”

- Sri Aurobindo from Thoughts and Aphorisms.

  நமது சாதாரண வாழ்வில் ஒய்வு என்பதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு. ஒய்வு என்பது உழைக்கும் ஒவ்வொரு  மனிதருக்கும் தேவையான  ஒன்று என்றாலும், அது எப்போது, எவ்வளவு என்பதில் மனிதர்கள் மாறுபடுகின்றனர். அன்னையும், சாதாரண மனிதர்களின் ஒய்வு பற்றி குறிப்பிடுகிறார்.

In ordinary life, already, this happens so much. Indeed, this is the bourgeois ideal, which has deadened mankind and made man into what he is now: “Work while you are young, accumulate wealth, honour, position; be provident, have a little foresight, put something by, lay up a capital, become an official —so that later when you are forty you “can sit down”, enjoy your income and later your pension and, as they say, enjoy a well-earned rest."

இங்கே அன்னை கூறுவது போல, இளமையில் உழைத்து சம்பாதித்து, செல்வமும், பதவியும், செல்வாக்கும் பெற்று, நிறைய சேமிப்பையும் பெற்று, பிற்காலத்தில் சேர்த்து வைத்த அனைத்து வசதிகளையும் செல்வங்களையும் உட்கார்ந்து அனுபவிப்பது என்பதுதான் சாதாரண மனிதனின் வாழ்வின் குறிகோளாக இருக்கிறது என்கிறார் அன்னை.

வேடிக்கையாக கூறுவது எனில், எங்கையோ கேட்ட கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

சோம்பேறி இளைஞன் ஒருவன், எந்த வேலையும் செய்யாமல், தன்  பெற்றோரின் உழைப்பிலேயே வாழ்ந்து வந்தான். அவனுக்கு அறிவுரை கூறும் எண்ணத்துடன் ஒரு பெரியவர் வந்தார்.

"மகனே! உழைக்கும் வயதில், இப்படி வேலையே செய்யாமல் உண்டும் உறங்கியுமே காலத்தைக் கழிக்கிறாயே? உனக்கு பொறுப்பில்லையா?: என்றார்.

அதற்கு அவன், "சரி. நீங்கள் இளம் வயதில் என்ன செய்தீர்கள்? "

"மிகக் கடினமாக உழைத்தேன். நிறைய பொருள் சேர்த்தேன் "

"பின்பு?"

"நல்ல மனைவி மக்களைப் பெற்றேன். உழைப்பினால், செல்வாக்கும், பல வசதி வாய்ப்புக்களைப் பெற்றேன் "

"... ம்.. அதன் பின்பு... "

"பின்பு முதுமை அடைந்தேன். பெற்ற செல்வம்  அனைத்தையும் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, மீதியிருக்கும் நாட்களை உண்டும் உறங்கியும் ஓய்வாகக் கழிக்கிறேன் ."

"அப்படிஎன்றால் நீங்கள் வேலை செய்யாமல் ஓய்வாக உங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறீர்கள் , இல்லையா?"

"ஆம்."

"நீங்கள் இத்தனை வருடங்கள் கழித்துச் செய்வதை நான் இப்போதே செய்கிறேன். இதில் என்ன தவறு?  போய், உங்கள் வேலையைப் பாருங்கள்!" என்றான்.

அறிவுரை கூற வந்தவர், வேறு ஒன்றும் பேச முடியாமல் சென்று விட்டாராம்.

 ஆக, சாதாரண மனிதனின் வாழ்வு இது போல்தான் உள்ளது.


அன்னை  அரவிந்தரின் சிந்தனையைக் காண்போமா?
.........Sri Aurobindo says here is aimed at fighting against human nature with its inertia, its heaviness, laziness, easy satisfactions, hostility to all effort.
ஸ்ரீ அரவிந்தர் மனிதனின் இயற்கையான சுபாவங்களான மந்தத்தனம், சோம்பேறித்தனம், தாழ்ந்த ஆசைகள், முயற்சிகளுக்கு எதிரான தவறான எண்ணங்கள் என பலவற்றையும் எதிர்த்து, நாம் போராட வேண்டும் என்கிறார்.

Mother says......  
The minute one stops going forward, one falls back. The moment one is satisfied and no longer aspires, one begins to die.
 எப்பொழுது நாம் முன்னேறுவதை நிறுத்துகிறோமோ, அப்பொழுதே நாம் வாழ்வில் பின்னடைவை அடைகிறோம்.
Life is movement, it is effort, it is a march forward, the scaling of a mountain, the climb towards new revelations, towards future
realisations.
வாழ்க்கை என்பது ஒரு இயக்கம். அது மலை ஏறுவதைப் போல, உயர்ந்த இலட்சியங்களை அடைய அன்றும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
Nothing is more dangerous than wanting to rest. It
is in action, in effort, in the march forward that repose must be found, the true repose of complete trust in the divine Grace, of the absence of desires, of victory over egoism.
 (Ref. from Questions and Answers 1957-58)

 ஒய்வு எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை போல, ஆபத்தானது ஒன்று கிடையாது. மனிதனின்  வாழ்க்கையானது  இறைவனின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு, ஆசைகள் அற்று, அகந்தையை வெல்வதை, இறைவனை நோக்கி செல்வதையே, தனது முயற்சியாகக் கொள்ளவேண்டும் என்கிறார் அன்னை.

அது மட்டும் அல்ல. முதியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, உங்கள் கடந்த வாழ்வை திரும்பிப் பார்த்தால், நீங்கள் இறைவனை நோக்கி செல்ல எவ்வளவு முயற்சி எடுத்து உள்ளீர்கள், அதில் எவ்வளவு வெற்றி பெற்று உள்ளீர்கள் என்பது மட்டுமே உங்கள் வாழ்நாளின் சாதனையாக கொள்ளப்படும் என்று கூறுகிறார்.

நமது உண்மையான குறிக்கோள் இறைவனை அடைவதே. இதில் நமக்கு ஒய்வு என்பதும் இல்லை.

நன்றி.
















Thursday, 24 April 2014

Message of the Day - Tamil / English






         Message  of the Day  / இன்றைய சிந்தனைத் துளிகள்


In a general and almost absolute way anything that shocks you in other people is the very thing you carry in yourself in a more or less veiled, more or less hidden form, though perhaps
in a slightly different guise which allows you to delude yourself. And what in yourself seems inoffensive enough, becomes monstrous as soon as you see it in others.

Try to experience this; it will greatly help you to change yourselves. At the same time it will bring a sunny tolerance to your relationships with others, the goodwill which comes from understanding, and it will very often put an end to these completely useless quarrels.

-Sri Aurobindo from On Thoughts and Aphorisms


************************************************


அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள்

நம் கையால் செய்யும் காரியங்கள் பூரணம் பெற வேண்டும். முழுமையான நாணயம்;
மனித உறவுகள் அனைத்தும் இனிமையாகவும், இசைவாகவும் இருக்க வேண்டும்.
காரியங்களில் குறையிருந்தால், ‘நமக்கு மட்டுமே பொறுப்பு' என்ற மனநிலை வேண்டும்.
மற்றவர் குறைகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் தெளிவு வேண்டும்.
அதிகப்பட்ச அறிவுடன் செய்யும் காரியங்களில் 100% அறியாமை கலந்திருப்பது தெரிய வேண்டும்.
பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, குறையில்லை என்றுணர வேண்டும்.
பிறர் செய்யும் காரியங்களில் தெரியும் குறை, நிறை என்ற அறிவு வேண்டும்.
முழுத் தவறு, பாவம், குற்றம் என்ற அளவில் கண்ணால் கண்ட நிகழ்ச்சி, காதால் கேட்ட சொல், தீர்க்கமாக விசாரித்து முடிவு செய்தது, இவை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அதனுள் முழு உயர்வு, புண்ணியம், சேவை நிரம்பியுள்ளன என்று அறிவு உணர வேண்டும்.
அறிவு உணர்ந்ததை நம்முள் அனைத்தும் யோக ஞானமாக விரும்பி, விழைந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம் -
அன்னைக்கு சேவை செய்ய உதவும் மனப்பக்குவங்கள் - திரு. கர்மயோகி அவர்கள்


  
                                                         

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.