இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 22 December 2014

Message of the Day : Mother's Blessings : அன்னை விருப்பம் நிறைவேறட்டும்.






Sri Mother says:

Every day, at each moment, my blessings are with you.
*(ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது ஆசிகள் உன்னுடன் இருக்கிறது)


My child,
My blessings are with you to widen and purify your consciousness so that peace may always be within you.


My love and blessings are with you. Understand that blessings
are for the best spiritual result, not necessarily according to
human wishes.


(எனது அன்பும் ஆசிகளும்  உங்களுக்கு எப்போதும் உண்டு. எனது ஆசிகள், உங்களது ஆன்மீக பலனிற்கு உரியது. அதன் மூலம் மனிதனின் ஆசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை.


My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for... or, well, I will put it in a mystic way: It is for the Will of the Lord to be done, with full force and power.


(தனது ஆசிகள் அனைத்துமே, இறைவனின் விருப்பம் நிறைவேறுவதற்காகவே என்கிறார் ஸ்ரீ அன்னை .

ஆகையால், அதன் பலன் உங்களுக்குத் வெற்றியாக மட்டுமே அமைய வேண்டும் என்பது இல்லை. ஏனெனில், அந்தத் தோல்வியே,  இறைவனின் விருப்பமாக இருக்கலாம். அதனால், எது நடக்கிறதோ, அதுவே மிகச் சிறந்ததாகும் என்கிறார் ஸ்ரீ அன்னை .

 So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And theWill is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best.
(Ref: Question and Answers 1954- The Mother)

*************************

அன்னை விருப்பம் நிறைவேறட்டும்' என்பது  (Let Thy will be done, Not Mine!)  மந்திரம். சக்தி வாய்ந்தது. செயல்படும் பலன் தரும். ஆனால் மனித சுபாவம் அதனினும் வலுவுடையது. அதனால் மனிதனே என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டாம்" என்று கூறுவது அன்னை விருப்பம் நிறைவேற உதவும். இவற்றிற்குத் துணையாக மனதால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாய் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார் அன்னை.     

தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும்.

நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு.

மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.



 

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.