இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget
Showing posts with label Protection Flower. Show all posts
Showing posts with label Protection Flower. Show all posts

Thursday, 25 June 2015

Message of the day - Protection - அன்னை தரும் பாதுகாப்பு

“My children, if you are doing something difficult, call me, call me.”
Image courtesy : digitalfrescos.com
No, not in order to come first or gain a victory, but so that
nothing unpleasant happens to you. Call me so that things may go as well as possible, not for showing off but for the joy of doing well. And you may also call in order to do the thing as an offering, and then it becomes very good.

Question : Sweet Mother, isn’t there another way of calling, rather than drawing?
 Yes, my child, but that’s much more difficult. Yes, there is
another way. There is a true way... it is more difficult.
But this one is all right, I have nothing to say against it, it
is all right. I prefer this to having the experience, when looking at people, of seeing a little black cloud turning around their head, of feeling that there’s going to be an accident, something that’s going to happen, and trying to break through that to give protection, and finding myself before someone who is absolutely closed up, unconscious and convinced that he alone is capable of protecting himself and... not being able to avoid the accident!
That has happened! This is much more unpleasant for me.
I prefer to be called....



- Questions and Answers - The Mother

அன்னையின் பாதுகாப்பு: "எல்லாம்வல்ல அன்னையின் சக்தி உலகெங்கும், பிரபஞ்சமெங்கும் பரவியுள்ள ஆன்மீக சூட்சும ஸ்தாபனம். அந்த ஸ்தாபனத்தின் கிளை நம்முள் உள்ள ஆன்மா என்ற உருவில் இருப்பதால் நாம் எந்த நேரமும் நம் உள்ளுறை ஆபீஸிலிருந்து அன்னையின் சக்தி என்ற ஸ்தாபனத்தோடு தொடர்புகொள்ளலாம்'' - அப்போது அன்னையின் பாதுகாப்பு தவறாமல் கிடைக்கும் என்று பாதுகாக்கப்பட்டவர்களும், பாதுகாப்பு தேவையானவர்களும் அறிய வேண்டும். நம் விருப்பம் அன்னையை நாம் அறிய விரும்பும் விருப்பமாக இருக்க வேண்டும். விரும்பியபிறகு அன்னையை அழைத்துச் செயல்பட வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் நமக்கு வரும் ஆபத்து, கஷ்டங்கள், நஷ்டங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். பாதுகாப்பு என்ற காகிதப்பூக்களை பிரசாதமாக நம்முடன் வைத்திருந்தாலும் பாதுகாப்பு கிடைக்கும். அன்னையின் சூழலிலிருந்தால் பாதுகாப்போடு அதிர்ஷ்டமும் நம்மை வந்து அடையும்.

வேளாங்கண்ணி டூர்: டிசம்பர் 26ஆம் தேதி விடுமுறையில் தம் நான்கு நண்பர்களுடன் வேளாங்கண்ணிக்கு டூர் சென்றார். அவரும் நான்கு நண்பர்களும் வேளாங்கண்ணிக் கடற்கரையில் சுனாமி பேரலைகளால் பிரிந்தனர். ஒருவர் மட்டும் பேரலையால் ஒரு மேட்டிற்குத் தூக்கி எறியப்பட்டார். கண் விழித்துப் பார்க்கையில் நண்பர்களைக் காணவில்லை. அவர் மட்டும் காப்பாற்றப்பட்டதற்கு ஏதோ ஒரு விசேஷம் இருக்கவேண்டும் அல்லவா? அவர் அன்னை அன்பர் தோட்டத்தில் வேலை செய்பவர். அன்பருக்காக அன்னைக்கு வேண்டிய மலர்களை அவர் தோட்டத்திலிருந்து பறித்துக் கொடுப்பவர். அவர் அறியாமல் செய்தது அன்னைக்கு மலர்ச் சேவை. அன்பர் தோட்டத்தில் வேலை செய்வது, அன்னையின் சூழலில் தங்கியிருப்பது, அவர் அன்னையை அறியாவிட்டாலும் அன்னையின் சூழல் அருளாக வந்து காப்பாற்றியது.

மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2007 - சுனாமி - பறவைகளின் நுண்ணறிவு

Tuesday, 16 December 2014

Message of the Day: விபத்தை விலக்கும் அருளின் சூழல்



Image courtesy Digitalfrescos.com              Protection Flower, Bougainvillea
Sri Mother says:
Accidents are due to many things; in fact they are the result of a conflict of the forces in Nature, a conflict between the forces of growth and progress and the forces of destruction. When there is an accident, an accident that has lasting results, it is always the result of a more or less partial victory of the adverse forces, that is, of the forces of disintegration, disorganisation. It depends.                  

We know that fear always brings what one fears. If you fear an accident, this acts like a magnet drawing the accident towards you. In this sense, it may be said that it is the result of character. And the same thing holds for illness. There are people who can move about among the sick and in places where there are epidemics and never catch a disease. There are others—it is enough for them to spend an hour with a sick person, they catch the illness. That too depends on what they are within themselves.


(Ref: Question and Answers 1954- The Mother)


விபத்தை விலக்கும் அருளின் சூழல்.
அருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன? அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி
நினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக, வேண்டியவை, நூறு அம்சங்கள். ரோட்டிலும், டிரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்திச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.
  நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது.  நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.அவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.


அன்பர் அறிவில்லாமல் செயல்பட்டு ஆபத்தை அறைகூவி அழைக்கும் பொழுதெல்லாம் அன்னை அடுத்தவர் மூலம் ஆபத்தை விலக்குகிறார். நிலைமையை மாற்றி ஆபத்தை வாய்ப்பாக மாற்றுகிறார், சட்டத்தை மாற்றி நிலைமையைக் காப்பாற்றுகிறார்.

- கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்
 என்ற கட்டுரையில் இருந்து..

Thursday, 23 January 2014

அன்னையின் பாதையில்: அன்னை வழங்கும் பூரண பாதுகாப்பை பெறுவது எப்படி?



நமது சிந்தனைக்கு:

தம்மை நாடி வரும் ஒவ்வொருவருக்கும், அவர்களின் நம்பிக்கையின் அளவைப் பொறுத்தே, அன்னையின் கருணை செயல்படுகிறது. நமது செயல்களின் வெற்றிகளும் தோல்விகளும், நமது எண்ணங்களையும், நாம் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையையும் பொறுத்தே அமைகின்றன. சிலர் ஏதேனும் செயல் தோல்வி அடையும் போது அல்லது எதிர்பாரதவிதமான விபத்துக்களைச் சந்திக்கும் போது, இறைவனின் பாதுகாப்பு நமக்கு ஏன் அப்போது இல்லை என்று சிந்திப்பதில்லை. மாறாக, இறைவனை குற்றம் சாட்டுகின்றனர்.

இறைவனின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும்,  சில சமயங்களில் செய்யும் மிகப் பெரிய தவறு இது. இறை நம்பிக்கை என்பது அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். கஷ்டங்கள் நேரும்போது, கவலைகள் சூழும் போது அல்லது உடல் நலன் பாதிக்கப்படும் போது, நாம் சிந்தித்துப் பார்த்தால், நாம் அந்த சமயம் இறைவனின் மீதான நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம், பயம் நம்மை சூழ்ந்து இருக்கலாம் அல்லது அன்னையின் பாதுகாப்பை விட்டு அகலுப்படியான செயல்களைச் நாம் செய்திருக்கலாம்.

அன்னையின் வழியில்:

அன்னையின் பாதுகாப்பு எப்போது நமக்குப் பூரணமாகக் கிடைகிறது, என்பதனையும் இங்கு காணலாம்.

ஒவ்வொரு இடத்திலும் அதற்கே உரிய சட்டங்கள் உள்ளன. சமூகத்திற்கு என்று ஒரு சட்டம். தனிமனித ஒழுக்கத்திற்கு என்று ஒரு சட்டம். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு சட்டம் என்று சட்டங்கள் வேறுபடுகின்றன.

நாம், எங்கு இருக்கிறோமோ, அந்த சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், இல்லையா? அதுபோல, அன்னையின் சட்டங்களும், சமூகத்தின் சட்டங்களில் இருந்து வேறுபடுகின்றன. உதாரணமாக, ஒரு தவறான முறையை அல்லது குறுக்கு வழியை கடைப்பிடித்து ஒருவன் பணக்காரனாகிரான் என்று கொண்டால், சிலர் அவனது திறமையை புகழ்கின்றனர். இப்படி செய்தால்தான், அவன் பிழைக்கத் தெரிந்தவன் என்றும் சிலர் கருதுகின்றனர். இந்தக் கலிகாலத்தில் இப்படி செய்தால்தான் முன்னேற முடியும், நேர்மைக்கு ஏது இடம் என்றும் சிலர் எண்ணுகின்றனர். ஆனால், எந்த உண்மைக்கு புறம்பான முறையும், அன்னைக்கு ஏற்புடையதன்று. அன்னையின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லை.அவர்களின் உலகத்தில் நுழைந்த நாம், உண்மையின் வழி சென்றால் மட்டுமே அவர் தரும் பாதுகாப்பு நமக்கு கிடைக்கிறது.

உடல் நலன் ஏன் பாதிக்கப்படுகிறது அல்லது எதிர்பாராத விபத்துக்களை நாம் ஏன் சந்திக்கின்றோம் என்பற்கான அன்னையின் விளக்கங்களைக் காண்போம்.

There are two factors that have to be considered in the matter [the causes of illness]. There is what comes from outside and there is what comes from your inner condition. Your inner condition becomes a cause of illness when there is a resistance or revolt in it or when there is some part in you that does not respond to the protection; or even there may be something there that almost willingly and wilfully calls in the adverse forces. It is enough if there is a slight movement of this kind in you; the hostile forces are at once upon you and their attack takes often the form of illness.”
 -The Mother, Questions and Answers 1929–1931 (19 May 1929)
நமக்குள், இருக்கும் ஏதோ ஒன்று, அன்னையின் பாதுகாப்பை ஏற்க மறுக்கும் போது, நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார் ஸ்ரீ அன்னை.

--------- You understand very well, don’t you, what “being under protection” means? You understand also “going out of the protection”? If you do some- thing contrary, for example, if you are under the protection of the Divine and for a moment you have a thought of doubt or ill-will or revolt, immediately you go out of the protection. 

-The Mother, Questions and Answer. 1953

இறை அருளை நாம் சந்தேகிக்கும் அல்லது நம்பிக்கை குறையும் மற்றும் தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் அந்த நொடியில், நாம் இறைவனின்  பாதுகாப்பில் இருந்து விலகுகிறோம்.



----------There was cholera in the next house and he got so frightened that he caught the illness and without any other reason, there was no other reason for his catching it: it was through sheer fright. And it is a very common thing; in an epidemic, it is so in the majority of cases. It is through fear that the door is opened and you catch the illness. Those who have no fear can go about freely and generally they catch nothing.
-The Mother, Questions and Answer. 1953

பயம் என்ற உணர்வுதான், உடலில் நோய் வர காரணம் என்கிறார் அன்னை. பக்கத்து வீட்டுகாரருக்கு நோய் வந்ததால், தனக்கும்  வந்து விடுமோ என்ற பயத்தால் மட்டுமே ஒருவருக்கு நோய் வந்தது என்கிறார். பயம் என்ற உணர்வு நோயின் நுழைவாயில். பயம் கொள்ளாதவருக்கு, எந்த நோயும் வருவதில்லை என்றும் கூறுகிறார் அன்னை.

........... So the protection acts around you to prevent adverse forces from coming upon you or an accident from happening, that is to say, even if you lose consciousness, because of the protection even your lack of consciousness will not produce a bad result immediately. But if you go out of the protection and are not all the time vigilant, then either you will be attacked by the adverse forces or an accident will happen.

நமக்கு அன்னை மீது அளவு கடந்த நம்பிக்கை உள்ளபோது, நாம் உணர்ந்தாலும், உணராவிட்டாலும் அன்னையின் கருணை நம்மை பல விபத்துகளில் இருந்தும், ஆபத்துகளில் இருந்தும் காக்கிறது. ஆபத்துக் காலங்களில், நமக்கு அன்னையின் நினைவு (Consciousnes) அல்லது விழிப்பு - உணர்வு இல்லாத போது கூட, அவருடைய கருணை செயல்பட்டு நம்மை மிகப் பெரிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

அதே சமயம், நாம் அருளைச் சந்தேகிக்கும் போது அல்லது நம்பிக்கை குறையும் போது, மனதில் தவறான அல்லது Negative எண்ணங்களைக் கொள்ளும் பொது, அன்னையின் பாதுகாப்பை நாமே முனைந்து விலக்குகிறோம். அப்போது, நாம் மிக ஜாக்கிரதையாக செயல்பட்டாலும், விபத்துக்கள் நேரிடலாம்.

முழு நம்பிக்கையை, அன்னையின் மீது கொள்வது ஒன்றே, அன்னையின் பாதுகாப்பை பூரணமாகப் பெற சிறந்த வழி.

அன்னையின் பாதுகாப்பைப்  பெற ஸ்ரீ அன்னையே எழுதியுள்ள மந்திரம்/ Prayer


Protection Flower  
commons.wikimedia.org 
In the name of the Mother,
For the sake of the Mother,
By the power of the Mother,
With the strength of the Mother,
To all adverse harmful being or force
I order to quit this place,
At once and forever.



அன்னையின் அருளால் பயத்தை விலக்குவோம். அன்னையின் பாதுகாப்புடன் வாழ்வோம். நன்றி.





About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.