Flowers are extremely receptive. All
the flowers to which I have given a significance receive exactly the
force I put into them and transmit it.
When
I give them, I give you states of consciousness; the flowers are the
mediums and it all depends on your receptivity whether they are
effective or not.
- The Mother
அன்னை
பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை ,
அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக்
கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய
செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Common name: Zephyr flower, Fairy lily, Rain lily
மலரின் பலன் : Prayer - பிரார்த்தனை பலிக்க உதவும் மலர்
 |
Image Copyright : www.digitalfrescos.com |
இன்றைய செய்தி/ Message of the Day :
Sri Mother's Prayer to the DIVINE
இறைவனிடம் ஸ்ரீ அன்னையின் பிரார்த்தனை
LIKE a flame that burns in silence, like a perfume that rises straight upward without wavering, my love goes to Thee; and like the child who does not reason and has no care, I trust myself to Thee that Thy Will may be done, that Thy Light may manifest, Thy Peace radiate, Thy Love cover the world. When Thou willest I shall be in Thee,Thyself, and there shall be no more any distinction; I await that blessed hour without impatience of any kind, letting myself flow irresistibly toward it as a peaceful stream flows toward the boundless ocean. Thy Peace is in me, and in that Peace I see Thee alone present in everything, with the calm of Eternity.
(Summary - Not the translation )
இறைவனே ! அமைதியாக எரியும் தீபம் போல, அசையாமல் மேலெழும்பிச் செல்லும் ஊதுபத்தியின் புகையினைப் போல போல, உன் மீது மாறாத அன்பு செலுத்துகிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் ஒரு குழந்தையினைப் போல, இறைவனின் எண்ணமே நிறைவேறும், இறைவனின் ஒளியே எங்கும் எழும், இறைவனின் அமைதியும், அன்பும் உலகை ஆட்கொள்ளும் என்ற மாறாத நம்பிக்கையோடு இருக்கிறேன். அமைதியான ஓடை, கடலில் கலப்பதைப் போல, இறைவனை அடையும் தருணத்தினை பொறுமையுடன் எதிர் நோக்குகிறேன். உன்னுடைய அமைதி என்னுள் உள்ளது, அந்த அமைதியில் நீ மட்டுமே, முடிவில்லாமல் எங்கும் உள்ளதை நான் காண்கிறேன்.
REF : -Prayers and Meditations - The Mother,
-------- |
|
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags: