Sri Mother says:
DEVOTION
Devotion: modest and fragrant, it gives itself without seeking
for anything in return.
உண்மையான பக்தி , பிரதிபலனை எதிர்பார்பதில்லை.*
Devotional attitude: moderate and self-effacing, it gives remarkable fruit.
A devotion that keeps concentrated and silent in the depths of the heart but manifests in acts of service and obedience, is more powerful, more true, more divine, than any shouting and
weeping devotion.
ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் இதயத்தின் ஆழத்தில் அமைதியை உடைய, சேவையிலும், கீழ்ப்படிதலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பக்தியானது, கூச்சல்களுடன், அழுது கண்ணீர்விட்டு உணர்ச்சி பெருக்கில் வெளிப்படுத்தப்படும் பக்தியினை விட சக்தி வாய்ந்தது, உண்மையானது மற்றும் இறைத்தன்மை உடையது.
Sincere devotion is much more effective than the Ganges water.
உண்மையான பக்தி, கங்கை நீரினை விடப் புனிதம் வாய்ந்தது.
WORSHIP
Worship: the form or outer expression of your devotion.
உங்களது பக்தியின் வெளிப்பாடே, வழிபாடு.
True worship: total and constant without demand or exigence.
உண்மையான வழிபாட்டில் கோரிக்கைகளுக்கும், அவசரத் தேவைகளுக்கும் இடமில்லை.
OFFERING
Life must blossom like a flower offering itself to the Divine.
நமது வாழ்வே மலர் போன்று மலர்ந்து, தன்னை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சமர்ப்பணம்.
Offering: the placing of your entire being, with all its movements true and false, good and bad, right and wrong, before the Divine for transformation.
இறைவனிடம், நாம் திருவுருமாறுவதர்காக, நம்மிடம் இருக்கும் அனைத்தையும், அவற்றின் உண்மை மற்றும் பொய், நன்மை மற்றும் தீமை, சரி -தவறு என அனைத்தையும் சமர்ப்பிபதே உண்மையான சமர்ப்பணம்.
(From Words of the Mother)
*************************
பக்தி உண்மையானது. வழிபாடு பக்தியை வெளிப்படுத்தும் முறை.நம்பிக்கை, வழிபாடு, பணிவு பக்தி, அர்ப்பணம், ஆனந்தம் அன்பு, பூரிப்பு, சரணாகதி - இவை பூர்த்தியடைந்து நிறைவு எழுகிறது. - ------- கர்மயோகி.
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 30 December 2014
Message of the Day: உண்மையான பக்தி , வழிபாடு, சமர்ப்பணம்
Monday, 29 December 2014
Message of the Day : வீண் பேச்சுகள் ஆற்றலை வீணடிக்கும்
Sri Mother says:
- Do not read stories to console the vital.
- Do not speak unnecessarily to satisfy or please the vital.
- Do not waste time reading frivolous and unwholesome things.
- Do not waste your energy in idle small talk.
Question to the Mother: The Divine is the true supreme goal of our life. We must fulfil the divine will. But who is the Divine, and what is the divine will?
Mother's Answer:
.(From More Answers from the Mother)
- These are things one cannot speak about; they have to be discovered through personal experience.
*************************
வீண்பேச்சு என்று எடுத்துக் கொண்டால் ஆன்மீகத்தில் வீண்பேச்சு கிடையாது என்ற கட்டாயம் இல்லை. மற்ற subjectக்களை போலவே ஆன்மீகத் துறையிலும் வீண் பேச்சு பேசலாம். புதிதாக ஆன்மீகத் துறைக்கு வருபவர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாகத் தாம் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஐந்து நிமிடம் அர்த்தமுள்ளதாகப் பேசவேண்டும் என்றாலும் கூட பல மணி நேரம் concentration தேவைப்படுகிறது என்பதை இப்படிப்பட்டவர்கள் நாளடைவில்தான் தெரிந்து கொள்கிறார்கள். குருவாக ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களிடம் நமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக அனுபவங்களைப் பற்றிப் பேசவே கூடாது என்பது ஆன்மீகத் துறையில் ஓர் அடிப்படையான கட்டுப்பாடு ஆகும். நமக்குக் கிடைக்கின்ற அனுபவம் நம் பர்சனாலிட்டியில் நிலை பெறும்வரை அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்காமல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால் அனுபவம் நிலைபெறாமல் மறைந்துவிடும். ஒரு தீக்குச்சியைக் கொளுத்தும் பொழுது அது அணையாமல் இருப்பதற்குக் கையால் அதை மூடிக் கொள்கிறோம். கொளுத்திய தீக்குச்சி மேல் காற்றுப்பட அனுமதித்தால் உடனே அது அணைந்து விடுகிறது. இம்மாதிரி நம் அனுபவத்தை நான்கு பேருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது இந்த அனுபவத்தில் இருக்கின்ற எனர்ஜி விரயமாகின்றது..
Thursday, 25 December 2014
Message of the Day : Sri Mother's prayer to the DIVINE
Sri Mother's prayer to the DIVINE:
O Divine Master, grant that today may bring to us a completer consecration to Thy Will, a more integral gift of ourselves to Thy work, a more total forgetfulness
of self, a greater illumination, a purer love.
Grant that in a communion growing ever deeper, more constant and entire, we may be united always more and more closely to
Thee and become Thy servitors worthy of Thee.
Remove from us all egoism, root out all petty vanity, greed and obscurity.
May we be all ablaze with Thy divine Love;
make us Thy torches in the world.
A silent hymn of praise rises from my heart like the white smoke of incense of the perfumes of the East. And in the serenity of a perfect surrender, I bow to Thee in the light of the rising day.
.(From Prayers and Meditations The Mother)
*************************
அமைதி, சாந்தி என்பவற்றை பகவான் calm, quiet, stillness, silence என வேறுபடுத்திக் கூறுகிறார். ஓடும் எண்ணம் ஓடுவதை நிறுத்துவது, ஓட்டம் நிற்பது, stillness எண்ணங்கள் மனத்திலிருந்து ஓடாமலிருப்பது நிதானம், quiet. அவை ஓடும் திறமையை இழப்பது அமைதி, calm கீழிருந்து எழுபவை இது. இவை மேலிருந்து வருவது மௌனம் Silence. சமர்ப்பணம் பூர்த்தியாகி, சரணாகதி எழுந்து, அதுவும் பூர்த்தியாக எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது போல் உணர்ச்சியும், சூட்சும உணர்ச்சியும் சமர்ப்பணமாக வேண்டும். முடிவாக உடல் என்பதில் சரணாகதி முடியும். உடலுக்கு உணர்வுண்டு; சூட்சுமம் உண்டு. அவைகளும் சமர்ப்பணமாக வேண்டும். சமர்ப்பணத்தில் யோகம் ஆரம்பித்து சரணாகதியில் முடியும். இவை யோக நிலைகளானால், நம்மால் முடிந்ததை முழுவதும் சமர்ப்பணம் செய்வது என்றால் என்ன? அதற்குரிய பலன் என்ன? அவை வாழ்வில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவற்றிற்கு,
- . குறைந்தபட்ச நிலையுண்டு.
- . அதிகபட்ச நிலையுண்டு.
- அவற்றைக் கடந்த நிலைகளும் உள்ளன.
- . குறைந்தபட்சம் என்பது முடிந்ததை முழுமையாகச் செய்து முடிப்பது.
- இதற்குரியது யோகப் பலன்.
- இதற்கடுத்தக்கட்ட யோகப் பயிற்சி நமக்குப் பலிக்கும் நிலை ஏற்படுவது அதற்குரிய வாழ்க்கைப் பலன்.
- இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் மறையும்.
- இன்று எழக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் எழும்.
- எழும் வாய்ப்புகளில் நாம் மறுக்காதது, ஒதுக்காதது, வெறுக்காதவை,அத்தனையும் பலிக்கும்.
- . அதிகபட்சம் என்பது உடலுக்குரிய சூட்சும உணர்வு சமர்ப்பணமாகி சரணாகதியாகப் பலிப்பது.
- அது நடைபெற்றதற்கு அடையாளம் உடல் நன்றியறிதலால் புல்லரிப்பது.
- நம் சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அது அடையாளம்.
- அது நடந்தபின் நமக்குத் தேவையானதுஎன்று ஒன்றில்லை.
- அதன்பின் நடப்பவை அன்னைச் செயல்என்பதால் நாம் பேசவோ,நினைக்கவோ எதுவுமில்லை.
- கர்மயோகி அவர்களின் மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2007 » 06.முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை என்ற கட்டுரையில் இருந்து..
Tuesday, 23 December 2014
Message of the Day: அமைதியும், மௌனமும்
Sri Mother's prayer to the DIVINE:
IN Peace and Silence the Eternal (முடிவற்ற) manifests; allow nothing to disturb you and the Eternal will manifest; have
perfect equality in face of all and the Eternal will be there. . . . Yes, we should not put too much intensity, too much effort into our seeking for Thee; the effort and intensity become a veil in front of Thee; we must not desire to see Thee, for that is still a mental agitation which obscures Thy Eternal Presence; it is in the most complete Peace, Serenity and Equality that all is Thou even as Thou art all, and the least vibration in this perfectly pure and calm atmosphere is an obstacle to Thy manifestation. No haste, no inquietude, no tension, Thou, nothing but Thou, without any analysis or any objectivising, and
Thou art there without a possible doubt, for all becomes a Holy Peace and a Sacred Silence. And that is better than all the meditations in the world.
.(From Prayers and Meditations The Mother)
*************************
அமைதி, சாந்தி என்பவற்றை பகவான் calm, quiet, stillness, silence என வேறுபடுத்திக் கூறுகிறார். ஓடும் எண்ணம் ஓடுவதை நிறுத்துவது, ஓட்டம் நிற்பது, stillness எண்ணங்கள் மனத்திலிருந்து ஓடாமலிருப்பது நிதானம், quiet. அவை ஓடும் திறமையை இழப்பது அமைதி, calm கீழிருந்து எழுபவை இது. இவை மேலிருந்து வருவது மௌனம் Silence. சமர்ப்பணம் பூர்த்தியாகி, சரணாகதி எழுந்து, அதுவும் பூர்த்தியாக எண்ணமும், சூட்சும எண்ணமும் சமர்ப்பணம் செய்யப்பட்டது போல் உணர்ச்சியும், சூட்சும உணர்ச்சியும் சமர்ப்பணமாக வேண்டும். முடிவாக உடல் என்பதில் சரணாகதி முடியும். உடலுக்கு உணர்வுண்டு; சூட்சுமம் உண்டு. அவைகளும் சமர்ப்பணமாக வேண்டும். சமர்ப்பணத்தில் யோகம் ஆரம்பித்து சரணாகதியில் முடியும். இவை யோக நிலைகளானால், நம்மால் முடிந்ததை முழுவதும் சமர்ப்பணம் செய்வது என்றால் என்ன? அதற்குரிய பலன் என்ன? அவை வாழ்வில் எப்படி பிரதிபலிக்கும் என்ற கேள்விகள் நமக்கு எழுகின்றன. இவற்றிற்கு,
- . குறைந்தபட்ச நிலையுண்டு.
- . அதிகபட்ச நிலையுண்டு.
- அவற்றைக் கடந்த நிலைகளும் உள்ளன.
- . குறைந்தபட்சம் என்பது முடிந்ததை முழுமையாகச் செய்து முடிப்பது.
- இதற்குரியது யோகப் பலன்.
- இதற்கடுத்தக்கட்ட யோகப் பயிற்சி நமக்குப் பலிக்கும் நிலை ஏற்படுவது அதற்குரிய வாழ்க்கைப் பலன்.
- இன்றுள்ள எல்லாப் பிரச்சினைகளும் மறையும்.
- இன்று எழக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் எழும்.
- எழும் வாய்ப்புகளில் நாம் மறுக்காதது, ஒதுக்காதது, வெறுக்காதவை,அத்தனையும் பலிக்கும்.
- . அதிகபட்சம் என்பது உடலுக்குரிய சூட்சும உணர்வு சமர்ப்பணமாகி சரணாகதியாகப் பலிப்பது.
- அது நடைபெற்றதற்கு அடையாளம் உடல் நன்றியறிதலால் புல்லரிப்பது.
- நம் சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அது அடையாளம்.
- அது நடந்தபின் நமக்குத் தேவையானதுஎன்று ஒன்றில்லை.
- அதன்பின் நடப்பவை அன்னைச் செயல்என்பதால் நாம் பேசவோ,நினைக்கவோ எதுவுமில்லை.
- கர்மயோகி அவர்களின் மலர்ந்த ஜீவியம் - டிசம்பர் 2007 » 06.முடிந்ததை முழுமையாக முடிப்பது முக்கியமான முறை என்ற கட்டுரையில் இருந்து..
Monday, 22 December 2014
Message of the Day : Mother's Blessings : அன்னை விருப்பம் நிறைவேறட்டும்.
Sri Mother says:
Every day, at each moment, my blessings are with you.
*(ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், எனது ஆசிகள் உன்னுடன் இருக்கிறது)
My child,
My blessings are with you to widen and purify your consciousness so that peace may always be within you.
My love and blessings are with you. Understand that blessings
are for the best spiritual result, not necessarily according to
human wishes.
(எனது அன்பும் ஆசிகளும் உங்களுக்கு எப்போதும் உண்டு. எனது ஆசிகள், உங்களது ஆன்மீக பலனிற்கு உரியது. அதன் மூலம் மனிதனின் ஆசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்ற அவசியம் இல்லை.
My blessings are very dangerous. They cannot be for this one or for that one or against this person or against that thing. It is for... or, well, I will put it in a mystic way: It is for the Will of the Lord to be done, with full force and power.
(தனது ஆசிகள் அனைத்துமே, இறைவனின் விருப்பம் நிறைவேறுவதற்காகவே என்கிறார் ஸ்ரீ அன்னை .
ஆகையால், அதன் பலன் உங்களுக்குத் வெற்றியாக மட்டுமே அமைய வேண்டும் என்பது இல்லை. ஏனெனில், அந்தத் தோல்வியே, இறைவனின் விருப்பமாக இருக்கலாம். அதனால், எது நடக்கிறதோ, அதுவே மிகச் சிறந்ததாகும் என்கிறார் ஸ்ரீ அன்னை .
So it is not necessary that there should always be a success. There might be a failure also, if such is the Will of the Lord. And theWill is for the progress, I mean the inner progress. So whatever will happen will be for the best.(Ref: Question and Answers 1954- The Mother)
*************************
‘அன்னை விருப்பம் நிறைவேறட்டும்' என்பது (Let Thy will be done, Not Mine!) மந்திரம். சக்தி வாய்ந்தது. செயல்படும் பலன் தரும். ஆனால் மனித சுபாவம் அதனினும் வலுவுடையது. அதனால் மனிதனே என்னுடைய விருப்பம் நிறைவேற வேண்டாம்" என்று கூறுவது அன்னை விருப்பம் நிறைவேற உதவும். இவற்றிற்குத் துணையாக மனதால் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வதாய் கற்பனை செய்ய வேண்டும் என்கிறார் அன்னை.
தான் என்பதைத் தாண்டி வர முடியாவிட்டாலும், செய்யும் காரியங்களை நமக்காகச் செய்யாமல், அன்னைக்கே அர்ப்பணம் செய்து பின்னர் செய்ய வேண்டும்.
நம்முடைய விருப்பம் களையப்பட வேண்டும். சொந்தப் பலன் கருதும் மனப்பாங்கை அழிக்க வேண்டும். தனக்குரிய பலன் என்ற ஆசையைக் கரைக்க வேண்டும். பலனைக் கேட்கும் குணநலனுக்கு இடமில்லை. பரிசை நாடும் பாங்குக்கு இது அரங்கமில்லை. அன்னையின் திருப்தியே உனக்குரிய பலன். அன்னையின் இலட்சியம் பூர்த்தியாவதே, அதனால் அன்னை பெறும் நிறைவே உனக்குரிய பரிசு.
மனித ஜீவியம், தெய்வ ஜீவியமாக மாறுவதே உனக்குக் கிடைத்த கைம்மாறு. அமைதியும், ஆனந்தமும், அவற்றிற்குரிய திறனும் உன் சொத்து. சேவையின் ஆனந்தமும், அகவாழ்வின் மலர்ச்சியில் பூரணமும், தன்னலமற்ற சாதகனுக்குப் போதுமான நிறைவு. பக்தனாயிருந்து, கருவியாக மாறி, அன்னையுடன் ஒன்றி, நாம் வேறு - அன்னை வேறு என்ற நிலையில்லை எனும்வரை மாறுதல்கள் ஏற்படும்.
Thursday, 18 December 2014
Message of the Day: Surrender - சரணாகதியின் உண்மையான அர்த்தத்தை அறிவீர்களா?
Sri Mother says:
.......if someone can truly know what surrender is and total trust, then it is infinitely easier, three-fourths of the worry and difficulties are over................
And if through aspiration, the inner will, self-giving and true surrender one can enter into contact with the higher regions or even the supreme region, from up there the supreme determinism will come down and transform all the intermediate determinisms and it will be able to bring about in a so-to-say almost inexistent span of time what would have otherwise taken either years or lives to be accomplished. But this is the only way.
A Question to Mother :...... What is the sign to indicate that a sadhak’s determination to surrender to the Divine is having practical effect in his life?”
Sri Mother says:
....The determination to surrender brings certain results. The first result is simply to be obedient without questioning, and the second is to have the power of rejecting all influences except that of the Divine. These are great results. When one has attained these, one is already quite advanced. (Ref: Question and Answers 1954- The Mother)
ஆசிரம வீடு ஒன்றில் இரு குடும்பங்கள் வசித்தன. மாடி வீட்டுக் குழந்தை மீது கீழ்வீட்டுப் பெண்ணுக்குப் பிரியம். தினமும் குழந்தையோடு வந்து விளையாடுவார். குழந்தைக்கு வயிற்றுப் போக்கு. ஆசிரம டாக்டர் வைத்தியம் செய்கிறார். 10 நாட்களாயின. பலனில்லை. 10-ஆம் நாள் கீழ்வீட்டுப் பெண், குழந்தையைப் பார்க்க வந்தவர் குழந்தை துவண்டு கிடப்பதைக் கண்டு திகைத்து, கண்கள் வருத்தத்தால் நிறைந்துவிட்டதைப் பார்த்து, அவருடனிருந்தவர் நேரே விளையாட்டு மைதானத்திற்குப் போனார். அன்னை அப்பொழுது அங்கிருந்தார். குழந்தையின் நிலைமையை அன்னையிடம் சொன்னார்.அதே நிமிஷம் குழந்தை துள்ளி எழுந்தான். வேறொருவர் டாக்டரிடம் சென்று, அவரை அழைத்து வந்தார். வந்த டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பத்து நாளாகப் பலிக்காத மருந்து அன்னையிடம் கூறிய அதே நேரம் பலித்தது என்பது டாக்டருக்கு வியப்பாயிற்று.அன்னைக்குச் செய்தி எட்டியவுடன் பிரச்சினை இதுபோல்தீருவதே அன்னை தடையின்றி செயல்படுவதாகும்.
மனிதன் அறிவால் செயல்படுகிறான், அன்னைக்கு அறிவு தடை; உணர்வால் செயல்படுகிறான், உணர்வு தடை; பழக்கத்தால் செயல்படுகிறான் அது பெருந்தடை. இவற்றுள் உணர்வின் தடையே மிகச் சிறியது. தடையின்றி ஆன்மாவால் எப்படிச் செயல்படுவது?
விழிப்புற்ற ஆன்மா அன்னைக்குச் சொல்லும். பிரச்சினை உடனே தீரும். இயல்பாக வாழ்வின் அஸ்திவாரத்தை அறிவு, உணர்வு, செயலிலிருந்து, ஆன்மாவுக்கு மாற்றுவதை யோகம் எனவும், அம்முறையை, சரணாகதி எனவும் அறிகிறோம்.
- குழந்தை அவதிப்படுகிறான், என்ன செய்தால் சரி என்று சிந்தித்தால், அது அறிவால் செயல்படுவதாகும்.
- அவன் வேதனை எனக்குத் தாங்கவில்லை என்றால் உணர்வால் செயல்படுவதாகும். பிரச்சினை என்றால் டாக்டரைக் கூப்பிடுவது பழக்கம் என்றால் உடலால் செயல்படுவதாகும்.
- குழந்தையைப் பார்த்து, 'எனக்கு எதுவுமே தோன்றவில்லை, அன்னை நினைவுதான் வந்தது', என்றால் ஆன்மாவால் செயல்படுவதாகும்.அப்படி நடக்கும்பொழுது அன்னைக்கு யாரும் போய்ச் சொல்ல வேண்டியதில்லை. கடிதம் எழுத வேண்டியதில்லை.
- கர்மயோகி அவர்களின் அன்னையின் ஆசிரம வாழ்வில்
என்ற கட்டுரையில் இருந்து..
Tuesday, 16 December 2014
Message of the Day: விபத்தை விலக்கும் அருளின் சூழல்
Monday, 15 December 2014
Message of the Day: அன்னையை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு வழி
Mother says:
Image Courtesy: FlowersofIndia.net
It is good health, a solid body, well poised; when one does not have the nerves of a little girl that are shaken by the least thing; when one sleeps well, eats well.... When one is quite calm, well balanced, very quiet, one has a solid basis and can receive a large number of forces.
If anyone among you has received spiritual forces, forces of the Divine Ananda, for example, he knows from experience that unless he is in good health he cannot contain them, keep them. He begins to weep and cry, gets restless to expend what he has received. He must laugh and talk and gesticulate, otherwise he cannot keep them, he feels stifled. And so by laughing, weeping, moving about he throws out what he has received.
To be well balanced, to be able to absorb what one receives, one must be very quiet, very calm. One must have a solid basis, good health. One must have a very solid basis. That is very important.
(Ref: Question and Answers 1953- The Mother)
உடல் நலம் : நாடித் துடிப்பு 72, டெம்பரேச்சர் 98.6°, சர்க்கரை 110, இ.ட. 90/110, எடை உயரத்திற்குத் தகுந்தாற்போருக்க வேண்டும் என்பதை இன்று பலரும் அறிவர்.
உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியின் செயலுக்கும், இருக்க வேண்டிய அளவை நிர்ணயித்துள்ளனர்.• இவை எல்லாம் சரி.• இவற்றிற்கு மேற்பட்ட உண்மையும் உண்டு.• அது நிதானம் (inner balance).• அந்த நிதானமிருந்தால் 5 அடி உயரமுள்ள பெண் 270 பவுண்டு எடையுடன் 87 வயது வாழ்வதும் உண்மையாக இருக்கும். இதுவும் அன்னை வாழ்வில் நடந்ததேயாகும்.• அதையும் கடந்த உண்மையும் உண்டு.எந்தச் சட்டம் மாறினாலும் அருள் செயல்படுவதால் நிதானம் ஏற்பட்டு சட்டத்தைப்புறக்கணித்து உடல் நலம் பெறும் என்பதுஉண்மையானாலும் சட்டத்தை அவசியமாகப்பின்பற்ற வேண்டும்.• அன்னையின் ஆன்மீக அருள் தரும் நிதானத்தின் முழுப் பலன் பெற நாம் மருத்துவத் துறைக்குரிய (norms) சட்டத்தை மயிரிழை வழுவாமல் பின்பற்றுதல் அன்னைக்குகந்தது.• இந்த நிதானமிருப்பதற்கு அடையாளம் சந்தோஷம்.• சந்தோஷம் தானே உள்ளிருந்து எழுந்து வருமானால், மருத்துவத் துறையின் சட்டங்களைக் கடந்த ஆரோக்கியம் மனிதனுக்குண்டு.
அன்னையை ஏற்றுக் கொண்டவர்களுக்குத் திடமான உடல் நலம் ஏற்பட ஒரு சுருக்கமான வழியைச் சொல்லலாம். உடல் அன்னையை நினைவில் வைத்துக்கொண்டால் உடல் நலம் பெருகி, உடல் வெண்கலம் போல் அமையும். உடல் அன்னையை நினைப்பது என்றால் என்ன என்று கேள்வி எழும். அப்பைய தீக்ஷிதர் தமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்திலும் சிவனை நினைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று ஒரு செய்தியுண்டு. நமக்குச் சுவாதீனம் இல்லாத நேரத்தில் நினைவு இருந்தால், அது உடல் நினைவு வைத்திருப்பதாக அர்த்தம். குளிர்காலத்தில் பக்கத்தில் போர்வையை வைத்துவிட்டுப் தூங்கப்போனால் இரவில் குளிர் அதிகமாகும் நேரம் போர்வையை எடுத்து நாம் போர்த்திக்கொள்கிறோம். காலையில் பார்த்தால் போர்த்தியிருப்பது தெரியும். எப்பொழுது போர்த்திக்கொண்டோம் என்றுத் தெரியாது. உடலே தன் தேவையை உணர்ந்து, நமக்குத் தெரியாமல் செய்த செயல் அது. உடலுக்கு நோய் என்று வந்தவுடன், மாத்திரை நினைவு வராமல், டாக்டர் நினைவு வராமல், பயம் ஏற்படாமல், கவலையுண்டாகாமல், அன்னை நினைவு வந்தால் அன்னையை உடல் நினைவு வைத்திருக்கிறதாகக்கொள்ளலாம்.
- கர்மயோகி அவர்களின்
அருளமுதம் என்ற கட்டுரையில் இருந்து..
Thursday, 11 December 2014
Message of the Day : தாழ்ந்த குரலும், குறைந்த சொற்களும், உயர்ந்த வாழ்வைத் தரும்
Mother says:
When a thought is expressed in speech, the vibration of the sound has a considerable power to bring the most material substance into contact with the thought, thus giving it a concrete and effective reality. That is why one must never speak ill of people or things or say things which go against the progress of the divine realisation in the world. This is an absolute general rule.
And yet it has one exception. You should not criticise anything unless at the same time you have the conscious power and active will to dissolve or transform the movements or things you criticise. For this conscious power and active will have the capacity of infusing Matter with the possibility to react and refuse the bad vibration and ultimately to correct it so that it becomes impossible for it to go on expressing itself on the physical plane.This can be done without risk or danger only by one who moves in the gnostic realms and possesses in his mental faculties the light of the spirit and the power of the truth.
(Ref: On Education by The Mother)
பேசும் அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது? அன்னையை நீங்காத நினைவுடன் பெற மனம் விழைந்த பின் பேச்சு தானே அற்றுப்போய், குறைந்துவிடும். அன்னை மௌனத்தைப் பாராட்டவில்லை. Controlled Speech அளவுடன் பேசுவதையே அன்னை பாராட்டினார். பேசும் சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பேசினால் அது பேச்சு. பேச்சு மனத்தை அன்னையிடமிருந்து விலக்கும். எழும் பேச்சை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், தேவையான பேச்சுக்கு அவர் அனுமதி அளிப்பார். அது அளவோடுள்ள பேச்சு. இது நாம் பேசுவதில்லை. இது நம்முள் அன்னை பேசுவதாகும். இப்பேச்சு மௌனத்தைக் கலைக்காது, அன்னை நினைவை அதிகப்படுத்தும். இதன்றி நம் மனத்தில் எழும் எண்ணம், சமர்ப்பணமின்றி வெளிவருவது பேச்சு. அதுபோன்ற சொல் வாயால் ஒன்றுகூட வரக்கூடாது.பொதுவாக நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்பது நமக்கே தெரிவதில்லை. மேலைநாட்டார் குழுமியுள்ள இடத்தில் நாம் பேசும்பொழுது அவர்கள் குரல் அளவுக்கும், நம் குரல் அளவுக்கும் உள்ள மாறுபாடு தெரியும்.பேச்சு என்பது சக்தி (energy). சக்தி என்பது செல்வம். பேச்சைக் குறைத்தால் சக்தி சேரும். சக்தி சேர்ந்தால், பணம் சேரும். அதிக அளவு செல்வத்தைப் பெற பேச்சைப் பெரிதும் குறைத்தல் நலம்.முதலில் நாம் உயர்ந்த குரலில் பேசுகிறோம் என்று உணர வேண்டும். எதிரில் உள்ளவர்கட்குக் கேட்கும் அளவிலேயே குரலைத் தாழ்த்திப் பேச முயன்று, வெற்றி காணவேண்டும். அதன் பின்னர் பேச்சின் அளவு (i.e number of words) குறைக்கப்பட வேண்டும்.குரலின் அளவைத் தாழ்த்தியும், வார்த்தைகளின் ஓட்டத்தைச் சுருக்கியும் பேச வேண்டும்.குரலைத் தாழ்த்துவதால் நாம் நம் பிராணனை (vital) நம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறோம். வாழ்க்கையை நடத்துவதே பிராணன் என்பதால், பிராணன் கட்டுப்பட்டால் வாழ்க்கை கட்டுப்படும். கட்டுப்பட்ட வாழ்க்கையின் மூலம் அன்னை செயல்படுவது எளிது. வாழ்க்கை நமக்குக் கட்டுப்பட்டு விட்டதால், அன்னையால் நம் வாழ்க்கையை எளிதில் வளப்படுத்த முடியும்.தாழ்ந்த குரலும், குறைந்த சொற்களும், உயர்ந்த வாழ்க்கை நிறைந்து விளங்க உதவும்.- கர்மயோகி அவர்களின்
அருளமுதம் என்ற கட்டுரையில் இருந்து..
Wednesday, 10 December 2014
Message of the Day: நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் கூறும் பொய்கள் என்னென்ன ?
Mother says:
Instead of letting oneself go in the stream of one’s nature,of one’s mood, one must constantly keep in mind this kind of feeling that one is a representative of the Supreme Knowledge, the Supreme Truth, the Supreme Law, and that one must apply it in the most honest, the most sincere way one can; then one makes great progress oneself and can make others also progress.
நாம் பலவகையான பொய்களைச் சொல்கிறோம்.
1. எவருக்கும் தீங்கிழைக்காத, யோசனையற்ற பொய்.
2. வெட்கப்படக்கூடியதை மறைக்கச் சொல்லும் பொய்.
3. நல்ல பெயர் வாங்கச் சொல்வது.
4. நஷ்டத்தைத் தவிர்க்கச் சொல்வது.
5. இலாபம் கருதிச் சொல்லும் பொய்.
6. தொழில் சம்பந்தமாகச் சொல்லும் ஏராளமான பொய்கள்.
7. யோசனையின்றி சொல்லும் பொய்யால் பிறருக்கு ஏற்படும் தீங்கு.
8. வேண்டுமென்றே பொய் சொல்லிபிறரை நஷ்டப்படுத்துவது.
9. பிறருக்குக் கெட்ட பெயர் வரவேண்டுமென பொய் சொல்வது.
10. வக்கிர புத்தியால் புனைந்துரைப்பது.
11. பிறரைத் தொந்தரவுபடுத்த புனைந்துரைத்த வக்கிரம்.
12. பிறருக்கு ஊறுசெய்து தான் பலன் பெற சொன்ன பொய்.
13. கடமை, நன்றியிலிருந்து புனைந்துரைப்பிக்கச் சொல்லும் பொய்.
14. பெரும் குற்றங்களைச் செய்யச் சொல்லும் பொய்.
நாம் ஏற்றுக்கொண்ட மெய், பொய் பல நிலைகளில் செயல்படும். நம்முடைய மெய்யின் வலிமை எந்த அளவிலிருக்கிறது. பொய் நம்மில் எந்த அளவிலிருக்கிறது, நமக்குத் தெரிந்தது எது தெரியாமல் செயல்படுபவை எவை என அறிந்துகொள்வது சற்று சிரமம். அது தெரிந்தால், மனம் அதை அதனடிப்படையில் செயல்படுவது கடினம். இவை இரண்டையும் செய்ய முடிந்தால், நாம் மேலும் சத்தியத்தின் ஆட்சிக்குள் வருகிறோம்
.
- பொய்யை விலக்குவது கடினம்.
- நம் பொய்யை விலக்குவது அவசியம், அது முடியும்.
- பிறர் பொய் நம்மிடம் கூறுவதை விலக்கப் பிறரை விலக்க வேண்டும்.
- உலக வாழ்வில் அது எளிமையாகச் செய்ய முடியாது.
- உடன் பிறந்தவர், பிள்ளைகள், பெற்றோர் நம்மிடம் பொய் சொல்வதால் அவர்களை எப்படி விலக்குவது?
- பிறர் பொய் நம் பொய்யின் பிரதிபலிப்பு.
- ஆழத்தில் நம் பொய்யை விலக்கினால் அவர்களால் நம்மிடம் பொய் சொல்ல முடியாது.
சத்தியம், பூரண யோக வாயில்கள் ஆகிய கட்டுரைகளில் இருந்து..
Tuesday, 9 December 2014
Message of the Day : பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும்
Mother says: Try this little exercise: at the beginning of the day, say: “I won’t speak without thinking of what I say.”
You believe, don’t you, that you think all that you say! It is not at all true, you will see that so many times the word you do not want to say is ready to come out, and that you are compelled to make a conscious effort to stop it from coming out.
I have known people who were very scrupulous about not telling lies, but all of a sudden, when together in a group, instead of speaking the truth they would spontaneously tell a lie; they did not have the intention of doing so, they did not think of it a minute before doing it, but it came “like that”.Why?—because they were in the company of liars; there was an atmosphere of falsehood and they had quite simply caught the malady!
It is thus that gradually, slowly, with perseverance, first of all with great care and much attention, one becomes conscious, learns to know oneself and then to become master of oneself.
- From Question and Answers by Mother.
'(Men, countries, continents, Truth or abyss) தேசங்களும், கண்டங்களும், மனித குலமும் சத்தியத்தைத் தழுவ வேண்டும். இன்றேல் பாதாளத்தில் தள்ளப்படும்' என்ற புது வருஷச் செய்தியை அன்னை நெடுநாளைக்கு முன் அளித்தார்கள். எந்த வகையாகப் பார்த்தாலும், ஓரளவு பொய்யை நாம் ஏற்றுக்கொள்கிறோம், பயன்படுத்துகிறோம். அன்னையிடம் முழுப்பயனடைய பொய் அறவே உதவாது. யோகத்தை மேற்கொண்டு பல கட்டங்களைத் தாண்டியபின், ஒரே ஒரு பொய் சொன்னால், அதுவரை பெற்ற யோகப் பலன் கம்ப்யூட்டர் திரையில் எழுத்து மறைவதைப் போல் கணப்பொழுதில் அழிந்துவிடும்.
நாம் பலவகையான பொய்யைச் சொல்கிறோம். பொய்யை பல நிலைகளில் மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- யோசனையின்றி பொய் பேசுவது,
- பொய்யை நம்புவது,
- பொய்யை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது,
- வாழ்க்கையைப் பொய்யின் அடிப்படையில் அமைத்துக் கொள்வது,
இப்படியெல்லாம் செய்யும் பொழுது ஜீவன் பொய்யால் பல்வேறு அளவில் மறைக்கப்படுகிறது. பொய்யின் கறைபடாத இடத்தில்தான் அன்னை செயல்பட முடியும், முழு ஜீவனும் பொய்யால் ஆட்கொள்ளப்படாததால், அன்னை மேலும் நம்முள் செயல்படுகிறார்கள். இதன் உண்மையை அறியவேண்டுமானால், ஒரு பொய்யும் சொல்வதில்லை என்று முடிவு செய்து அதனடிப்படையில் ஒரு காரியத்தை ஆரம்பித்தால், அன்னை செயல்படும் வேகம், மெய்யின் திறத்தை வெளிப்படுத்தும்.
சத்தியம்என்ற கட்டுரையில் இருந்து..
Monday, 8 December 2014
Message of the Day : விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது
Mother says: You must choose; there is no “force like that” which chooses for you, or chance or luck or fate—this is not true. Your will is free, it is deliberately left free and you have to choose. It is you who decide whether to seek the Light or not, whether to be the servitor of the Truth or not—it is you. Or whether to have an aspiration or not, it is you who choose. And even when you are told, “Make your surrender total and the work will be done for you”, it is quite all right, but to make your surrender total, every day and at every moment you must choose to make your surrender total, otherwise you will not do it, it will not get done by itself. It is you who must want to do it. When it is done, all goes well, when you have the Knowledge also, all goes
well, and when you are identified with the Divine, all goes even better, but till then you must will, choose and decide.
- From Question and Answers by Mother.
தவறு செய்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள், "என்ன செய்வது? என் நேரம். நேரத்திற்கேற்ப புத்தி. அதனால் நான் இந்தத் தவற்றைச் செய்துவிட்டேன்.
இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்' என்பார்கள்.
லோக சஞ்சாரம் செய்துகொண்டிருந்த மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் தம் பக்தனான ஓர் ஏழைக்கு உதவ முன்வந்து, அவன் நடந்து வந்துகொண்டிருந்த பாதையில் ஒரு தங்கக்கட்டியைப் போட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஏழைக்கு ஒரு விசித்திர எண்ணம் தோன்றியது. "குருடன் எப்படி நடப்பான் என்று பார்க்கலாமா?"என்று எண்ணி, கண்களை மூடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அதனால் பாதையில் கிடந்த தங்கக்கட்டியை அவனால் பார்க்க முடியாது போயிற்று. கடவுள் கொடுக்கத் தயாராக இருந்தாலும், விதி அவனை அனுபவிக்க விடவில்லை. விதி வலிது. அவதாரப் புருஷனான இராமனின் முன் மாயமான் தோன்ற, சீதை அதைப் பார்த்து ஆசைப்பட, விதி அவர்களைக் கொண்டே தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது.
விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது. அன்னை அப்படிப்பட்ட நேரங்களில் தம் பக்தனுக்குத் துணை செய்கின்றார். ஆனால், அவனுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அன்னையால் செயல்பட முடியாது. பக்தன் பண்பட்ட பாத்திரமாக இருந்து, அன்னையின் அருள் செயல்படுவதற்கு முழுமையாக உதவ வேண்டும்.
என்ற கட்டுரையில் இருந்து..
Thursday, 4 December 2014
Message of the Day : ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா?
கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.
ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும். இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.
- மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
- திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
- சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
- அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும்.
திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும்.
சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும்.
அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும்.
- பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
- அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
- பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
- அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.
- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..
- The Mother
Wednesday, 3 December 2014
Message of the Day : அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன?
அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன? அது எப்பொழுது வெளிப்படும்?
வாழத் தேவையான சக்தி (energy for survival) நம்முடைய சக்தி. சமூகத்தில் நம் நிலை தொடர்ந்து உயரத் தேவையான சக்தி (social energy) சமூகத்தின் சக்தி. பொய்யான வாழ்வில் அடிப்படையை நம்பாமல், மெய்யான அன்னை வாழ்வின் அடிப்படையை மட்டும் நம்பி வாழ்ந்து, வளர உதவும் சக்தி அன்னை சக்தி. இதை பரிணாம சக்தி (evolutionary energy) எனவும், சத்திய ஜீவிய சக்தி எனவும், ஆன்மிகச் சக்தி எனவும் கூறினால் ஓரளவு பொருந்தும். பயத்தை, தைரியமாக மாற்றும் சக்தி உலகில் உண்டு என்றால் அது 1956க்குப் பின் பூமியின் சூழலில் வந்துள்ள அன்னை சக்தியேயாகும். மரணத்தை அமரவாழ்வாக மாற்றுவதும் வலியை ஆனந்தமாக மாற்றுவதும், சோர்வைத் தெம்பாக மாற்றுவதும், சந்தேகத்தை நம்பிக்கையாகவும், வேதனையை இன்பமாகவும், இருளை ஒளியாகவும், அறியாமையை அறிவாகவும் அன்னை சக்தி மாற்றவல்லது. நான் சொல்லும் (shift) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது இது. இந்தச் சக்தியை எப்படி உள்ளே எழுப்புவது? அதனால் இம்மாற்றத்தை எப்படிப் பெற்று நிரந்தரமாக்குவது? அன்னையை அழைத்தால் அன்னை சக்தி நம்முள் எழும். அன்னையை நினைத்தாலும் இச்சக்தி நம் உள்ளேயிருந்து புறப்படும் என்பது உண்மை. நாம் எப்பொழுதோ ஒரு முறை அன்னையை நினைக்கிறோம். பிரச்சினை வந்தால், அன்னையை அழைக்கிறோம். பிரச்சினை தீருகிறது. அவை ஓரிழை இம்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. மாற்றம் நிரந்தரமாக எப்படி ஏற்படும்? நினைவையும், அழைப்பையும் நிரந்தரமாக்கினால் மாற்றம் நிரந்தரமாக ஏற்படும். . |
- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..
- The Mother
Tuesday, 2 December 2014
Prayers and Meditations by Mother
From Prayers and Meditations November 3, 1912* LET Thy Light be in me like a Fire that makes all alive; let Thy divine Love penetrate me. I aspire with all my let them be Thy docile instruments - The Mother |
Monday, 1 December 2014
Message of the Day : The path of later-on and the road of tomorrow
“The path of later-on and the road of tomorrow lead only to the castle of nothing-at-all.” A young student had a long essay to prepare for the following morning. A little tired by his day’s work, he had said to himself as he arrived home, “I shall work later.” Soon afterwards he thought that if he went to bed early, he could get up early the next morning and quickly finish his task. “Let’s go to bed,” he said to himself, “I shall work better tomorrow; I shall sleep on it.” He did not know how truly he spoke. His sleep was troubled by the terrible nightmare we have described, and his fall awoke him with a start. Thinking over what he had dreamt, he exclaimed, “But it’s quite clear: the path is called the path of ‘later on’, the road is the road of ‘tomorrow’ and the great building the castle of ‘nothing at all’.” Elated at his cleverness, he set to work, vowing to himself that he would never put off until tomorrow what he could do today. - The Mother |
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.