இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 27 January 2015

Message of the Day: அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை.




Photo Courtesy :   .Mirapuri-Enterprises.com

 
A sadhak wrote that devotees were performing ceremonies much like the worship of deities in front of the photographs of Sri Aurobindo and the Mother. Stating that for proper worship there should be a bija-mantra [seed-mantra] to invoke the deity, he asked whether there was such a mantra for Sri Aurobindo and the Mother.
Mother replied:)

I always advise to let the mantra rise from the depth of the heart as a sincere aspiration.
 ---------------------------
To live the Supreme Truth, if only for a minute, is worth more than writing or reading hundreds of books on the methods or processes by which to find it.


From Words of the Mother
அன்னையை வணங்க ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டா?’ என்ற கேள்வி எழுவது இயற்கை.
 அன்னைக்கு இருப்பது தெய்வாம்சம் இல்லை; அன்னையே தெய்வம்; தெய்வத்தின் திருஅவதாரம். அவரை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் தெய்வீக அமைதியும், விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்படுவது வழக்கம். பன்னெடுங்காலம் தவம் இருந்து பெற வேண்டிய பெறற்கரிய மௌனத்தை, அன்னையின் சமாதி முன் பக்தியுடன் வந்து பணியும் எவர்க்கும் அன்னை வரப்பிரசாதமாக வழங்குகின்றார்.

விரைவான செயலும், வேகமான சிந்தனையும் கொண்டு, எப்பொழுதும் அலைகடல் துரும்பாக மனத்தை ஆக்கிக்கொண்டுவிட்ட நாடறிந்த ஓர் எழுத்தாளர், அன்னை சமாதியின் முன் அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தபொழுது, முதலில் விரைவும், வேகமும் அவரை விட்டு நீங்கின. பிறகு அவர் மனத்தில் எப்பொழுதும் ஓயாமல் கத்திக்கொண்டிருந்த அலைகள் அடங்கின. அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. ‘இதைப் போன்றதோர் அமைதியை இதற்கு முன்னால் நான் பெற்றதே இல்லை. ‘நான்’என்பதை விட முடியாமல், எழுத்தில் ‘நான்', வாழ்க்கையில் ‘நான்’என்று பல ‘நான்'களைச் சுவாசத்தைப்போல இதுவரை எனக்குள் வைத்து, வரவுசெலவு செய்துகொண்டு இருந்த நான், அன்னையின் சமாதியின் முன்னால் அமர்ந்தவுடன், இந்த ‘நானை'த்தான் முதலில் நீக்கினார் அன்னை. பிறகு ‘நான்’இருந்த இடத்தில் ‘அவர்’ இருந்து என்னை எழுதினார். ஆழ்ந்த அமைதியில் நான் திளைக்கத் திளைக்க, அன்னை என்னை எழுதிக்கொண்டே இருந்தார்’ என்று என்னிடம் பக்திப்பரவசத்தோடு விவரித்தார் அந்த எழுத்தாளர். அவர் டாக்டர் வாசவன். இது அன்னை அவருக்கு அளித்த வரம்.

யோகத்தை நாடுபவர்க்கு யோகத்தையும், வாழ விரும்புவோர்க்கு வாழ்க்கைச் சிறப்பையும் அளிப்பவர் அன்னை.

அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை. பக்தியுடன் அன்னையை நினைப்பதும், நினைத்துக்கொண்டே செயல்படுவதும் மட்டுமே வழிபாட்டு முறைகளாகும். பக்தனுடைய நினைவுக்குப் பலனாக, அவனுடைய செயலில் அன்னை தம்மை வெளிப்படுத்துவதைக் கண்கூடாகக் காணலாம். முதலாகவும், முடிவாகவும் அன்னைக்கு நினைவே வழிபாடு. அன்னையை ஏற்றுக்கொள்ள விழைபவர்கள், அதற்கு முன்னால் மனத்தூய்மையையும், நல்லெண்ணத்தையும், அமைதியான நடைமுறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆரவாரமற்ற அமைதியான பேச்சு, சிறந்த செயல்முறை, தூய்மையான சுற்றுப்புறம், இடையறாத தெய்வச் சிந்தனை ஆகியவை அன்னைக்கு உகந்தவை. அவையே அன்னைக்கு அர்ச்சனையும், நிவேதனமும் ஆகும்.





- கர்மயோகி அவர்களின் கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய் என்ற கட்டுரையில் இருந்து..


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.