இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 22 January 2015

Message of the Day - அன்னை வாழ்வை ஏற்ற பின் உறவுகள், உரிமை, உடமை புதிய புனிதம் பெறும்.

Mother's says:


Photo Courtesy :   .Mirapuri-Enterprises.com

You should concern yourself more with strengthening your consecration
to the Divine than with working out the details of your relations with people.

..... if one is in contact with people, it is better to know what they are like.
 Human relationships are obviously very unstable. Only relationships with the Divine can be permanent.
From More Answers from the Mother
அன்னை வாழ்வை ஏற்ற பின், அது உயர்ந்தது என்பதால் நமக்கு ஏற்படும் மாற்றங்கள் பல. அவற்றுள் நம் உறவினர், நண்பர்களுடன் உள்ள தொடர்பு ஒன்று. பக்தர் அன்னையை அதிகமாக நெருங்க நெருங்க மேற் சொன்ன உறவுகள் மறைந்து அழிந்து போயின என்பது மேற் சொன்ன பக்தர்கள் அனுபவம், அன்னையை நெருங்கும் பொழுது உறவுகளும், நட்பும் தளரும், வெட்டிக்கொள்ளும், விலகும். உறவினர்களும் அன்னையை நம்போல் ஏற்று கொண்டால் உறவு குறைவதில்லை. ஒருவர் அன்னையை நெருங்கினால், மற்றவர்கள் பின் தங்கினால், உறவோ, நட்போ, தொடர்போ குறைந்து மறையும் என்பது சட்டம், அன்பர் அனுபவமும்கூட.

ஒருவர் அனுபவத்தை எழுதுகிறேன்.
அன்னையை அறிந்து, முதன் முறை ஆசிரமம் வருமுன் 10 மடங்கு வருமானம் அதிகரித்து, ஓராண்டில் தம் சர்வீஸ் முடிவில் வாங்கக் கூடிய சொத்தை வாங்கி, அன்னையை மனத்திலும், வாழ்விலும் முதன்மையாக்கிய நிலையில் டாக்டர், 'மனைவி பிழைக்க முடியாது, ஆப்பரேஷன் செய்து பார்த்தால் தெரியும்' என்ற பொழுது பிரசாதம் மனைவியை
ஆப்பரேஷனின்றிப் பிழைக்க வைத்தது. அடுத்த ஆண்டு உத்தியோகம் போயிற்று. அன்னையிடம் காலையில் சொன்னவுடன் மாலையில் அது திரும்பி வந்தது. அடுத்து பெற்ற பெருஞ்சொத்து, பொறாமையாலும், துரோகத்தாலும் கை விட்டுப் போய் மூன்றாம் நாள் திரும்பி வந்தது. பக்தர் மனைவியையும், உத்தியோகத்தையும், சொத்தையும் தம் உடமையாக வைத்திருந்தததால், அன்னை அவற்றை அவரிடமிருந்து அகற்றி, தம் பரிசாகத் தூய்மைப்படுத்திக் கொடுத்தார்.

நாம் அன்னையை நெருங்கினால், உறவு, உரிமை, உடமை பழைய நிலையை இழந்து புதிய புனிதம் பெறும்.

- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற நூலில் இருந்து..


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.