இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 12 January 2015

Message of the Day:எதிர்மறை சக்திகளிடம் இருந்து விழிப்பாக இருப்பது எவ்வாறு?

Mother's says:



There are as many of them as there
are elements in the world. Only, unless they express themselves physically, we do not see them. So we are not aware of them. But
I told you the other day that the atmosphere is full of countless formations which are usually made up of thoughts, desires, impulses, wills, and which are as mixed as men’s thoughts. There
are good ones, there are bad ones; and behind that there are all the formations of the vital world, a world essentially hostile to the Divine. Only the vital in man, under the psychic influence, can change and become a collaborator in the divine work.

Otherwise, the vital world is essentially formed of beings hostile to the divine work, and those who open themselves to these forces without any control are naturally under the influence of
the adverse forces. So, one can’t say what these adverse forces are. It would be easier to say what they are not.

And so, as these adverse forces are countless—these entities exist in thousands and thousands, you see, they are there swarming around people, only waiting for an opportunity to be able to
rush into someone—immediately one reabsorbs one’s dose and becomes once again what one was before, sometimes worse. And so the comedy begins all over again.

-From Question and Answers by Annai




பெரிய அதிர்ஷ்டம் திடீரென வந்தவர்களைக் கேட்டால், அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் அசந்தர்ப்பங்கள் வருவதை அவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்வார்கள். அன்னையை அழைத்து, பெரிய நல்ல காரியங்கள் நடக்க இருக்கும் நேரத்தில் க்ஷண நேரத்தில் மாற்று நடந்து காரியம் கெட்டு விடும்.

பத்து லக்ஷம் தொழில் நடத்தியவருக்கு 4 கோடி வியாபாரம் கூடி வந்தது. தானே வந்தது. அவர்கள் சந்தித்துப் பேசும் நேரம், அவருடைய பார்ட்னர் சமாதிக்குப் போய் காரியம் முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்தார். அந்த நேரம் வலிப்பு வந்த ஒருவர் சமாதியருகே விழுந்துவிட்டதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் கார் உதவி தேவை என்று ஒருவர் வந்து கேட்டார். கேட்டவர் தம் கார் ஷெட்டில் 6 கார்கள் வைத்திருக்கிறார். ஷெட் எதிரேயிருக்கிறது. பார்ட்னருக்குத் தயக்கம். எப்படி உதவியில்லை என்பது தயக்கம். கொடுத்தால் வலிப்புள்ளவன் காரில் உட்கார்ந்தால், தீயசக்திகள் நுழைய வழி ஏற்படும். இன்னும் 1 மணி நேரத்தில் வலிய வந்த பெரிய ஆர்டர் கையெழுத்தாக இருக்கிறது. காரைக் கொடுத்தார். ஆர்டர் ரத்தாகிவிட்டது. இது தீய சக்திகள் செய்யும் சோதனை என்றறிந்தும், இல்லை என்று சொல்லத் தயக்கப்பட்டதால் வந்த விளைவு இது.

இந்தச் சோதனைகள் எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்று தான். உன்னால் விலக்க முடியாத மனிதர்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும். தீய சக்திகள்ஏராளமாக உலவுவதுபோல் அன்னைக்குச் சேவை செய்ய (good being) நல்ல சக்திகளும் உலவுகின்றன. அவையும் இதேபோல் நமக்கு நல்ல சந்தர்ப்பங்களை முக்கியமான நேரங்களில் அளித்தபடியிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளுதலோ, விலக்குவதோ, நம் பங்கு, நம் மனநிலையைப் பொருத்தது.
நமக்குக் கோபம் வருமென்றால், நல்ல சந்தர்ப்பத்தில் தீய சக்திகள் கோபத்தைக் கிளப்பும். மானஸ்தனானால்
மானப்பிரச்னையைக் கிளப்பும், பேராசைக்காரனானால், ஆசையைக் கிளப்பும், எதை நம்மால் மறுக்க இயலாதோ அதை நம் முன் தீயசக்திகள் வைக்கும். நம் குணத்தைக் கருதாது, ஏன் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்று நாம் யோசனை செய்தால், அன்னையை மட்டும் நினைத்தால், தீய சக்திகள் விலகும். நம் குணத்திற்கு இடம் கொடுத்தால் அவை வெற்றி பெறும்.
நல்ல காரியங்கள் நடக்கும்பொழுதும், நம்மால் மறுக்க முடியாதவை குறுக்கிடும். அந்த நேரம் நாம் விழிப்பாக இருந்து, ஏன் இந்த நல்ல காரியம் நடக்கிறது என்று சிந்தித்தால், தவறுதல் வாராது.

கர்மயோகி அவர்களின் யோக வாழ்க்கை விளக்கம்  என்ற கட்டுரையில் இருந்து....

 

 

 














No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.