Mother says:
Anxiety is a lack of confidence in the Divine’s Grace, the unmistakable sign that the consecration is not complete and perfect. All fear must be overcome and replaced by a total confidence in the Divine Grace. Go on courageously with your duties, keeping all faith in the Divine and relying only on the Divine’s help and grace. - From Words of the Mother
- கர்மயோகி அவர்களின் அன்னையின் அருள் என்ற கட்டுரையில் இருந்து.. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Wednesday, 28 January 2015
Message of the Day : அருள் செயல்பட, அன்னையின் கருணை மீது மனிதனுக்கு பூரண நம்பிக்கை தேவை
Tuesday, 27 January 2015
Message of the Day: அன்னையை வழிபட தனிப்பட்ட வழிமுறை ஒன்றும் இல்லை.
A sadhak wrote that devotees were performing ceremonies much like the worship of deities in front of the photographs of Sri Aurobindo and the Mother. Stating that for proper worship there should be a bija-mantra [seed-mantra] to invoke the deity, he asked whether there was such a mantra for Sri Aurobindo and the Mother. ---------------------------I always advise to let the mantra rise from the depth of the heart as a sincere aspiration. To live the Supreme Truth, if only for a minute, is worth more than writing or reading hundreds of books on the methods or processes by which to find it. - From Words of the Mother அன்னையை வணங்க ஏதேனும் குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டா?’ என்ற கேள்வி எழுவது இயற்கை. அன்னைக்கு இருப்பது தெய்வாம்சம் இல்லை; அன்னையே தெய்வம்; தெய்வத்தின் திருஅவதாரம். அவரை நினைத்த மாத்திரத்தில் நெஞ்சில் தெய்வீக அமைதியும், விவரிக்க இயலாத ஆனந்தமும் ஏற்படுவது வழக்கம். பன்னெடுங்காலம் தவம் இருந்து பெற வேண்டிய பெறற்கரிய மௌனத்தை, அன்னையின் சமாதி முன் பக்தியுடன் வந்து பணியும் எவர்க்கும் அன்னை வரப்பிரசாதமாக வழங்குகின்றார். விரைவான செயலும், வேகமான சிந்தனையும் கொண்டு, எப்பொழுதும் அலைகடல் துரும்பாக மனத்தை ஆக்கிக்கொண்டுவிட்ட நாடறிந்த ஓர் எழுத்தாளர், அன்னை சமாதியின் முன் அரை மணி நேரம் உட்கார்ந்து இருந்தபொழுது, முதலில் விரைவும், வேகமும் அவரை விட்டு நீங்கின. பிறகு அவர் மனத்தில் எப்பொழுதும் ஓயாமல் கத்திக்கொண்டிருந்த அலைகள் அடங்கின. அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது. ‘இதைப் போன்றதோர் அமைதியை இதற்கு முன்னால் நான் பெற்றதே இல்லை. ‘நான்’என்பதை விட முடியாமல், எழுத்தில் ‘நான்', வாழ்க்கையில் ‘நான்’என்று பல ‘நான்'களைச் சுவாசத்தைப்போல இதுவரை எனக்குள் வைத்து, வரவுசெலவு செய்துகொண்டு இருந்த நான், அன்னையின் சமாதியின் முன்னால் அமர்ந்தவுடன், இந்த ‘நானை'த்தான் முதலில் நீக்கினார் அன்னை. பிறகு ‘நான்’இருந்த இடத்தில் ‘அவர்’ இருந்து என்னை எழுதினார். ஆழ்ந்த அமைதியில் நான் திளைக்கத் திளைக்க, அன்னை என்னை எழுதிக்கொண்டே இருந்தார்’ என்று என்னிடம் பக்திப்பரவசத்தோடு விவரித்தார் அந்த எழுத்தாளர். அவர் டாக்டர் வாசவன். இது அன்னை அவருக்கு அளித்த வரம். யோகத்தை நாடுபவர்க்கு யோகத்தையும், வாழ விரும்புவோர்க்கு வாழ்க்கைச் சிறப்பையும் அளிப்பவர் அன்னை.
- கர்மயோகி அவர்களின் கேளாமலேயே கொடுக்கும் தெய்வத்தாய் என்ற கட்டுரையில் இருந்து.. |
Thursday, 22 January 2015
Message of the Day - அன்னை வாழ்வை ஏற்ற பின் உறவுகள், உரிமை, உடமை புதிய புனிதம் பெறும்.
Mother's says:
You should concern yourself more with strengthening your consecration ..... if one is in contact with people, it is better to know what they are like. - From More Answers from the MotherHuman relationships are obviously very unstable. Only relationships with the Divine can be permanent. அன்னை வாழ்வை ஏற்ற பின், அது உயர்ந்தது என்பதால் நமக்கு ஏற்படும் மாற்றங்கள் பல. அவற்றுள் நம் உறவினர், நண்பர்களுடன் உள்ள தொடர்பு ஒன்று. பக்தர் அன்னையை அதிகமாக நெருங்க நெருங்க மேற் சொன்ன உறவுகள் மறைந்து அழிந்து போயின என்பது மேற் சொன்ன பக்தர்கள் அனுபவம், அன்னையை நெருங்கும் பொழுது உறவுகளும், நட்பும் தளரும், வெட்டிக்கொள்ளும், விலகும். உறவினர்களும் அன்னையை நம்போல் ஏற்று கொண்டால் உறவு குறைவதில்லை. ஒருவர் அன்னையை நெருங்கினால், மற்றவர்கள் பின் தங்கினால், உறவோ, நட்போ, தொடர்போ குறைந்து மறையும் என்பது சட்டம், அன்பர் அனுபவமும்கூட. ஒருவர் அனுபவத்தை எழுதுகிறேன்.அன்னையை அறிந்து, முதன் முறை ஆசிரமம் வருமுன் 10 மடங்கு வருமானம் அதிகரித்து, ஓராண்டில் தம் சர்வீஸ் முடிவில் வாங்கக் கூடிய சொத்தை வாங்கி, அன்னையை மனத்திலும், வாழ்விலும் முதன்மையாக்கிய நிலையில் டாக்டர், 'மனைவி பிழைக்க முடியாது, ஆப்பரேஷன் செய்து பார்த்தால் தெரியும்' என்ற பொழுது பிரசாதம் மனைவியை நாம் அன்னையை நெருங்கினால், உறவு, உரிமை, உடமை பழைய நிலையை இழந்து புதிய புனிதம் பெறும். - கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற நூலில் இருந்து.. |
Tuesday, 20 January 2015
மலரும் மலர் கூறும் செய்தியும் - வேலை - work
Mother's says:
Without discipline no proper work is possible.
Your service to the Divine must be scrupulously honest, disinterested and unselfish, otherwise it has no value.In human life the cause of all difficulties, all discords, all moral sufferings, is the presence in everyone of the ego with its desires,its likes and dislikes.Even in a disinterested work which consists in helping others, until one has learned to overcome the ego and its demands, until one can force it to keep calm and quiet in one corner, the ego reacts to everything that displeases it, starts an inner storm that rises to the surface and spoils all the work.This work of overcoming the ego is long, slow and difficult; it demands constant alertness and sustained effort. This effort is easier for some and more difficult for others.
-From On Education by Annai
|
Monday, 19 January 2015
Message of the Day: WHAT A CHILD SHOULD ALWAYS REMEMBER
Mother's says:
WHAT A CHILD SHOULD ALWAYS REMEMBER The necessity of an absolute sincerity.
THE IDEAL CHILD
-From by On Education by Annai
அன்னை கல்வியை உடற்கல்வி, உணர்வின் கல்வி, மனத்தின் கல்வி, சைத்திய புருஷனுக்குரிய கல்வி, ஆன்மீகக் கல்வி எனப் பிரித்து நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். நம் நாட்டில் கல்வி எனில் மனப்பாடம். மேல் நாடுகளில் கல்வியில் மனப்பாடம் விலக்கப்பட்டு, அறிவு வளர சிந்தனையை மையமாகக் கொள்கிறார்கள். அன்னை இவ்விரண்டையும் கடந்து உணர்வால் கல்வியைப் போதிக்க வேண்டும் என்று ஓர் பள்ளியை ஆரம்பித்தார்.
கர்மயோகி அவர்களின் கட்டுரையில் இருந்து.... |
Wednesday, 14 January 2015
இயற்கை சக்திகளுக்கு நமது நன்றிகளை தெரிவிப்போம்
அனைவருக்கும் இனிய பொங்கல் / உழவர் / மகரசங்கராந்தி / அறுவடைத் திருநாள் வாழ்த்துக்கள். அனைவரது வாழ்வும், அன்னை ஒளியுடன் உயர்வடைய பிரார்த்திப்போம்.
இந்த நாளில், இயற்கை சக்திகளுக்கு நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவிப்போம். நம் அனைவரது வாழ்வும், இந்நாளில் பொங்கும் பொங்கலைப் போன்று, இறை உணர்வால் நிறைந்து விளங்கிட பிரார்த்திப்போம்!
அன்னை எழுதிய ஒரு பிராத்தனையை இங்கே வழங்குகின்றோம்.
Prayer to the Sun - By Sri Mother
O Sun! our friend,
Disperse the clouds,
Absorb the rain.
We want your rays,
We want your light,
O Sun! our friend.
Monday, 12 January 2015
Message of the Day:எதிர்மறை சக்திகளிடம் இருந்து விழிப்பாக இருப்பது எவ்வாறு?
Mother's says:
There are as many of them as there Otherwise, the vital world is essentially formed of beings hostile to the divine work, and those who open themselves to these forces without any control are naturally under the influence of And so, as these adverse forces are countless—these entities exist in thousands and thousands, you see, they are there swarming around people, only waiting for an opportunity to be able to
-From Question and Answers by Annai
பெரிய அதிர்ஷ்டம் திடீரென வந்தவர்களைக் கேட்டால், அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் அசந்தர்ப்பங்கள் வருவதை அவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்வார்கள். அன்னையை அழைத்து, பெரிய நல்ல காரியங்கள் நடக்க இருக்கும் நேரத்தில் க்ஷண நேரத்தில் மாற்று நடந்து காரியம் கெட்டு விடும். பத்து லக்ஷம் தொழில் நடத்தியவருக்கு 4 கோடி வியாபாரம் கூடி வந்தது. தானே வந்தது. அவர்கள் சந்தித்துப் பேசும் நேரம், அவருடைய பார்ட்னர் சமாதிக்குப் போய் காரியம் முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்தார். அந்த நேரம் வலிப்பு வந்த ஒருவர் சமாதியருகே விழுந்துவிட்டதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் கார் உதவி தேவை என்று ஒருவர் வந்து கேட்டார். கேட்டவர் தம் கார் ஷெட்டில் 6 கார்கள் வைத்திருக்கிறார். ஷெட் எதிரேயிருக்கிறது. பார்ட்னருக்குத் தயக்கம். எப்படி உதவியில்லை என்பது தயக்கம். கொடுத்தால் வலிப்புள்ளவன் காரில் உட்கார்ந்தால், தீயசக்திகள் நுழைய வழி ஏற்படும். இன்னும் 1 மணி நேரத்தில் வலிய வந்த பெரிய ஆர்டர் கையெழுத்தாக இருக்கிறது. காரைக் கொடுத்தார். ஆர்டர் ரத்தாகிவிட்டது. இது தீய சக்திகள் செய்யும் சோதனை என்றறிந்தும், இல்லை என்று சொல்லத் தயக்கப்பட்டதால் வந்த விளைவு இது. இந்தச் சோதனைகள் எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்று தான். உன்னால் விலக்க முடியாத மனிதர்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும். தீய சக்திகள்ஏராளமாக உலவுவதுபோல் அன்னைக்குச் சேவை செய்ய (good being) நல்ல சக்திகளும் உலவுகின்றன. அவையும் இதேபோல் நமக்கு நல்ல சந்தர்ப்பங்களை முக்கியமான நேரங்களில் அளித்தபடியிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளுதலோ, விலக்குவதோ, நம் பங்கு, நம் மனநிலையைப் பொருத்தது. நமக்குக் கோபம் வருமென்றால், நல்ல சந்தர்ப்பத்தில் தீய சக்திகள் கோபத்தைக் கிளப்பும். மானஸ்தனானால் நல்ல காரியங்கள் நடக்கும்பொழுதும், நம்மால் மறுக்க முடியாதவை குறுக்கிடும். அந்த நேரம் நாம் விழிப்பாக இருந்து, ஏன் இந்த நல்ல காரியம் நடக்கிறது என்று சிந்தித்தால், தவறுதல் வாராது. கர்மயோகி அவர்களின் யோக வாழ்க்கை விளக்கம் என்ற கட்டுரையில் இருந்து.... |
Thursday, 8 January 2015
Message of the Day: Prayer - பிரார்த்தனை
Mother's Prayer to the Divine:
Teach us always more,
-From Prayers and Meditations by Annai
அன்னையிடம் இரு முக்கியமான மாற்றங்களுண்டு. வலுவான பிரார்த்தனைக்கு அதிகப் பலனுண்டு என்பது அன்னையிடமும் உண்மை என்றாலும், அன்னை பிரார்த்தனையின் வலிமையைவிட முக்கியமாக அழைப்பின் ஆர்வத்தைக் கருதுகிறார். ஆர்வமான அழைப்பை அன்னை உடனே ஏற்றுக்கொள்கிறார். நம்பிக்கையிருந்தால், அன்னை மற்றதைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையின் வலிமை, பூஜையின் சிறப்பு ஆகியவற்றைவிடப் பக்தியையும், நம்பிக்கையையும் அன்னை முக்கியமாகக் கருதுகிறார். மேலும் அன்னை மனிதனை நோக்கி வந்தபடியிருக்கின்றார். மனிதன் தன்னை அழைக்கட்டும், பூஜை செய்யட்டும் என இருப்பதில்லை. அவனை நோக்கி வரும் அன்னை, மனிதன் தன்னை நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். மனிதன் நினைத்தால் போதும். அன்னை வந்துவிடுவார். நம்மைச் சுற்றி அவரிருப்பதால் நாம் நினைத்தவுடன் அன்னை பலித்து விடுகிறார். அன்னை செயல்பட ஆரம்பித்தால் சூழ்நிலை மூலம் செயல்படுகிறார். சூழ்நிலையைச் சாதகமாக மாற்றி, சூழ்நிலையிலுள்ள மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் நம் பிரச்சினை தீர உதவும்படி செய்கிறார். நம் சாமர்த்தியத்தின் மூலமாகச் செயல்படுவதை விட இது பலமடங்கு அதிக சக்தியை வழங்குகிறது. நம் சூழ்நிலையே நமக்குச் சாதகமாக மாறுவதாலும், நம் அழைப்பிற்காக அன்னை காத்திருப்பதாலும், சிக்கல் தீராமலிருக்க வழியில்லை. கர்மயோகி அவர்களின் தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல என்ற கட்டுரையில் இருந்து.... |
Tuesday, 6 January 2015
Message of the day: திருப்தி செய்ய முயலாதே
........You say that you are often depressed. It is the vital being that gets depressed when its desires are not satisfied.
In ordinary life, one has to struggle to satisfy one’s desires;here one struggles not to do so. Actually, whatever path one
follows, success always comes to those who are strong, courageous,
enduring. And you know that here our force and our help are always available to you; you have only to learn to make use of them.
Love from your mother.
(From Some Answers from the Mother)
கடமையைச் செய்யலாம்; திருப்தி செய்ய முடியாது. எவரையுமே திருப்தி செய்ய முடியாது. திருப்தி செய்ய எடுக்கும் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது. ஆசை திருப்திபடும் தன்மையுடையதன்று. திருப்தி செய்ய முயன்றால் அதிருப்திதான் வரும்.
நல்ல பிள்ளைகள் பெற்றோரைத் திருப்தி செய்ய முயல்வார்கள். பொதுவாகப் பெற்றோர்கள் அதை அன்போடு ஏற்றுக்கொள்வதைவிட ஒரு சௌகரியமாக ஏற்றுக்கொள்வதே அதிகம். பிள்ளைக்கு மனத்தில் பிணக்கு ஏற்படும்.
திருப்தி செய்வது சரியான கொள்கை என்று வைத்துக் கொள்வோம். தாயாரைத் திருப்தி செய்யும் நிலையில், தாயாருக்கும் தகப்பனாருக்கும் ஒரு விஷயத்தில் மனத்தாபம் வந்துவிட்டால், இப்பொழுது யாரைத் திருப்தி செய்ய முடியும்?
கடமையைச் செய், பொறுப்பை நிறைவேற்று, மனச்சாட்சிக்கு அடங்கி நட, திருப்தி செய்ய முயலாதே.
வாழ்வின் பொது உண்மைகள் – II by karmayogi
Monday, 5 January 2015
அன்னையின் பாதையில் : நாம் செய்யும் ஒரு சிறிய செயல் கூட எப்படி இருக்க வேண்டும்?
செய்யும் செயல் சிறியதானாலும், அதில் DIVINE CONSCIOUSNESS - ஐ உணர்வது எப்படி என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு கேள்வியாக இருக்கலாம். அதற்கு அன்னை அளிக்கும் பதிலே இன்றைய செய்தி.
The only thing that matters is the attitude with which they are done. The fact that you do something because that action is present there before you for one reason or another and that you are, so to say, always obliged to act as long as you are in the outer life—all this has a certain importance from the point of view of the management of life if these acts are liable to have far-reaching consequences in life, as for example, getting married or going to live in one place or another or taking up one occupation or another; these things are generally considered
important, and they are so to a certain extent; but even for them, from the point of view of yoga, everything depends much more on the attitude one takes than on the thing itself.
இங்கு அன்னை கூறும் விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், செயல் சிறியதானாலும் பெரியதானாலும், அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் அச்செயலைச் செய்யும் பொழுது, நமது ATTITUDE ஆகியவை அச்செயல் நிகழும் விதத்தை நிர்ணயிக்கின்றன அல்லது பாதிக்கின்றன. இதற்கு ஒரு அன்பர் தன்னிடம் கேட்ட கேள்வியை உதாரணமாக, அன்னை குறிப்பிடுகிறார். விளக்கம் மிகப் பெரிதானாலும், அதன் சுருக்கத்தினை இங்கு காண்போம்.
இறைவனின் எண்ணமே அல்லது விருப்பமே அனைத்திலும் செயல்படுகிறது என்பது உண்மையானால், நான் அருந்தும் காபியில், எவ்வளவு சர்க்கரை சேர்க்க வேண்டும் , ஒரு ஸ்பூனா அல்லது இரண்டா? இதில் இறைவனின் எண்ணத்தை நான் எப்படி அறிவது என்கிறார் அந்த அன்பர் . காபி அருந்துவது என்பது மிகச் சிறிய செயல்தான் என்றாலும், அதில் இறைவனின் CONSCIOUSNESS எவ்வாறு வெளிப்படுகிறது என்பது அவர் சந்தேகம். அன்னை இதற்கும் விளக்கம் அளிக்கிறார். இந்த செயலில் சர்க்கரை சேர்த்தல் என்ற செயலினை விட, அத செயலை அவர் எந்த அளவு Spirit உடன் செய்கிறார், எந்த attitude - ல் செய்கிறார், என்பதே மிக முக்கியம் என்கிறார் அன்னை.
There are some scrupulous people who set problems to themselves and find it very difficult to solve them, because they state the problem wrongly. I knew a young woman who was a theosophist and was trying to practise; she told me, “We are taught that the divine Will must prevail in all that we do, but in the morning when I have my breakfast, how can I know whether God wants me to put two lumps of sugar in my coffee or only
one?”... And it was quite touching, you know, and I had some trouble explaining to her that the spirit in which she drank her coffee, the attitude she had towards her food, was much more important than the number of lumps of sugar she put into it. It is the same with all the little things one does at every moment. The divine Consciousness does not work in the human way, It does not decide how many lumps of sugar you will put in your coffee. It gradually puts you in the right attitude towards actions, things—an attitude of consecration, suppleness, assent, aspiration, goodwill, plasticity, effort for progress—and this is what counts, much more than the small decision you take at every second. One may try to find out what is the truest thing to do, but it is not by a mental discussion or a mental problem that these things can be resolved.
தனது விளக்கத்தின் ஒரு பகுதியாக அவர், நாம் செய்யும் எந்த விதமான செயல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார். Divine Consciousness என்பது மனித அறிவைப் போல செயல்படுவது இல்லை. காபியில் எத்தனை ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும் என்பது அதனுடைய தீர்மானம் இல்லை. அது உங்களை எல்லா விஷயங்களிலும் படிப்படியாக, சரியான அணுகு முறையுடன், சரியான மனப்பான்மையுடன் செயல்பட வைக்கிறது. சமர்ப்பணத்துடன் கூடிய மனப்பான்மை, ஏற்றுக் கொள்ளும் மனோபாவம், நல்லெண்ணம், இறைவனின் நோக்கத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை, aspiration, ஆன்மீக முன்னேற்றம் என பல வகைகளிலும் ஒவ்வொரு செயலிலும் உங்களை வழிநடத்துகிறது. இதன் மூலம் மிகச் சரியான உண்மையான தீர்வை, ஒவ்வொரு செயலிலும் நீங்கள் எடுக்க முடியும், ஆனால் உங்களது மனம் தீர்மானம் செய்யும் எந்த ஒரு முடிவாலும், இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது இல்லை என்கிறார் அன்னை.(From QUESTIONS AND ANSWERS)
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.