இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 3 July 2014

Message of the Day Tam / Eng - An Quote from Sri Aurobindo

The Mother is always with you. Put your faith in her, remain quiet within and do with that quietude what has to be done. You will become more and more aware of her constant Presence, will feel her action behind yours and the burden of your work will no longer be heavy on you.

Michel Montecrossa and The Chosen Few
Image Courtesy : www.Mirapuri-Enterprises.com
Sri Aurobindo
  • அழைப்பு அன்னை காதில் விழத் தவறுவதில்லை. ஓடும் ரயிலிருந்து விழுந்த தண்ணீர்ப் பாட்டிலுக்கானாலும், காருக்கடியில் கிடந்த உயிரைக் காப்பாற்ற வேண்டுமானாலும் அழைப்பு அன்னை காதில் விழும். அவர் சூழலை எட்டிவிட்டால் சூழலே பதில் சொல்லும். லால்பகதூர் சாஸ்திரி உயிர் பிரியும் தருணத்தில் எழுப்பிய அன்னைக்குக் கேட்டது. தரிசன வரிசையில் நின்று கொண்டிருந்த 9 வயதுப் பெண் மனதால் அன்னையை அழைத்தபொழுது வெகுதூரத்திலிருந்த அன்னை திரும்பிப் பார்த்தார்.
  •  
  • பக்தியுடன், அன்னையை அழைத்தாலும், அவர் படம் வாங்க நினைத்தாலும், ஒரு புத்தகம் படிக்க விரும்பினாலும், சேவை செய்ய முன் வந்தாலும், ஆசிரமம் வர விரும்பினாலும், சமூகமோ, வீடோ, சூழ்நிலையோ, வக்ரமான மனிதர்களோ, தீயசக்திகளோ, அதைத் தடை செய்ய முடியாது.
  •  
  • பயம் அன்னையை அணுகவிடாது. ஆனால் அதே பயம் அளவைக் கடந்து சென்றால், அன்னை செயல்படுவார். அந்தச் சட்டம் மற்ற எல்லாக் குணங்களுக்கும் உண்டு. எதுவும் அளவு மீறிப்போனால் அதன் குணம் மாறிவிடும். பயம் அளவுகடந்து போனால், அது மாறித் தைரியம் வந்து அவன் எதிர்ப்பதும் உண்டு. தைரியம் பயத்திற்குத் தெய்வத்தின் உருவம். பக்தர்கட்கு அன்னையே அங்கு வெளிப்படுவார்.  
  • அன்னையிடம் ஒரு பொருள் போனால், உலகமே அப்பொருளை நாடும். நாம் அன்னைக்கு ஒரு மலர் சமர்ப்பித்தால், ஏதும் அறியாத பலரும் அம்மலரை நாடுவார்கள். மல்லிகை மலரை தினமும் சமாதிக்கு ஒருவர் சமர்ப்பித்தார். மல்கையை அதிகமாகப் பயிரிட ஆரம்பித்தனர். அன்னையின் எஸ்டேட்டுக்கு 15 வருஷமாக வாராத கரண்ட் கனக்ஷனை ஒரு இன்ஜினீயர் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் புதியதாய் 500 கனக்ஷன் அவர் அவ்வாண்டு கொடுக்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டில் எந்த ஒரு கிராமமும் மின்சாரமில்லாமலிருக்கக் கூடாது எனச் சட்டம் வந்துவிட்டது. இவையெல்லம் தாமே நடந்தவை. 

- திரு.கர்மயோகி அவர்களின் அன்னையின் ஆசிரம வாழ்வில் என்ற கட்டுரையில் இருந்து.

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.