அன்னையின் பாதையில் : சத்தியஜீவியத்தில் ஜோசியமும், விதியும் உங்கள் வாழ்வை நிர்ணயம் செய்வது இல்லை
நமது சிந்தனைக்கு :
நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதைப் பற்றி அறிய முற்படுவது சிலருக்கு பொழுதுபோக்கு, சிலருக்கு மிக முக்கியமான செயல். மக்களின் இந்த எதிர்பார்ப்பை பலரும் பயன்படுத்திக் கொண்டு பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டனர் என்றே கூறலாம். ஆனால் ஜோசியம் என்பது முறையாகக் கணக்கிடப்பட்ட ஒரு கணிதத்தின் அடிப்படையிலான Occult Science என்பதும் நாம் அறிந்த ஒன்று.
மிக நன்றாக கணிக்கக் கூடிய ஜோசியர் ஒருவர் நம் எதிர்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களைப் பற்றிக் கூறினால், அதனை மகிழ்வுடன் ஏற்கிறோம். அதுவே ஏதேனும் எதிர்மறையான நிகழ்வுகளாக இருந்தால், நம் மனமும் கவலையுறுகிறது. இதனை நம்பலாமா, வேண்டாமா என்று பலவகையான மனக் குழப்பங்கள். நமது செயல்களும் பாதிப்படைகிறது இல்லையா? யாரேனும் நல்ல வார்த்தைகள் கூற மாட்டார்களா என்று பல ஜோசியர்களைப் பார்ப்பதும் சிலரின் பழக்கம். இவ்வாறு வாழ்வில் கவலைகள் வந்தால் மக்கள் ஜோசியத்தையும், பரிகாரத்தையும் தேடுவதையும் நாம் பார்க்கிறோம். இராசிபலன்களை அப்படியே நம்பி, அன்று தாம் செய்ய வேண்டிய செயலிகளைக் கூட தள்ளி வைப்போரும் உண்டு.
ஜோதிடம் என்பது அன்னை அன்பர்களுக்குப் பலிப்பதில்லை என்பது பல அன்பர்களின் அனுபவம். அன்னையின் சத்திய ஜீவியம் காலத்தைக் கடந்தது என்பதால், நமது பிறந்த நாள், நட்சத்திரத்தின் அடிப்படையிலான பலன்கள் எதுவும் நம் வாழ்வில் பலிப்பதில்லை. இனி அன்னை கூறும் கருத்துக்களைக் காண்போம்.
முதலில், Do not fear for your life—the astrologers do not always say the truth என்கிறார் ஸ்ரீ அன்னை.
ஜோதிடத்தை நம்புவர்களுக்கு அது நம்பிக்கையால் பலிகிறது. இறைவனை மட்டும் நம்புவர்களின் வாழ்க்கையில் அவர்களது பிறந்த நட்ஷத்திரம் மற்றும் பலன்களின் எந்த விதமான பாதிப்புகளும் இல்லை என்கிறார்.
கர்மயோகி அவர்களின் சில கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்...........
நன்றி.

The stars have no decisive influence. It is only if one does not believe in the Divine that one unnecessarily suffers by believing that they determine one’s life.
ஜோதிடத்தை நம்புவர்களுக்கு அது நம்பிக்கையால் பலிகிறது. இறைவனை மட்டும் நம்புவர்களின் வாழ்க்கையில் அவர்களது பிறந்த நட்ஷத்திரம் மற்றும் பலன்களின் எந்த விதமான பாதிப்புகளும் இல்லை என்கிறார்.
I have known many astrologers both in Europe and India. So far, nobody has been able to read the future correctly. There are three reasons for the failure.மேலும், ஏன் சில சமயங்களில் ஜோதிடங்கள் பலிப்பதில்லை என்பதற்கும் அவரே காரணங்களைக் கூறுகிறார். சரியாக பலன்களைக் கணக்கிடும் திறமை ஒருவருக்கு இல்லாமல் இருக்கலாம், ஜாதகம் தவறாக கணக்கிடப்பட்டு இருக்கலாம், மேலும் நட்ஷத்திரங்களின் மூலமாக குறிப்பிடும் பலன்கள், நமது வாழ்வைக் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவை அல்ல என்பதும் ஒரு காரணம் என்று கூறுகிறார் அன்னை. ஆன்மா என்பது இறைவனின் பகுதி என்பதால், நட்ஷத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறன் இல்லை என்கிறார் அன்னை. மேலும், அன்னை அரவிந்தரின் பூரண யோகத்தினை மேற்கொள்பவர்கள், ஜோதிடபலன்களில் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார்.
First, the astrologers do not know how to read the future properly. Secondly, the horoscope
is always incorrectly made—unless a man is a mathematical genius. And even for such a person it is very difficult to make a correct horoscope. Thirdly, when people say that the stars
in this or that house at the time of birth rule your life, they are quite wrong. The stars under which you are born are only “tape-recorders” of physical conditions. They do not rule the future of the soul. There is something beyond, which rules the stars themselves and everything else. The soul belongs to this Supreme Being. And if it is doing Yoga, then all the more it should never believe in the power of the stars or in any other power.
An astrologer who predicts a catastrophe for you is like a joker. Many jokers say things like, “Today you will break your neck!” But in spite of the joke nothing happens. Only a great Yogi can tell you your future correctly. But even then there is the Supreme Will which alone controls and
decides everything.
- Words of the Motherமிகப்பெரிய யோகிகள் மட்டுமே, நமது எதிர்காலத்தினை அறியும் திறனுடையவர்கள். ஆனாலும் கூட, இறைவனின் எண்ணமே எதனையும் நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் கூடியது என்று அன்னை.
கர்மயோகி அவர்களின் சில கட்டுரைகளில் இருந்து சில பகுதிகள்...........
மேலும் அவர், நாம் அன்னை பக்தரான பின், இந்த விஷயங்களை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதற்கும் வழிகளைக் கூறுகிறார்.
...........நல்ல நேரம் பற்றிய உண்மைக்கும் ஒரு வரையறையுண்டு. இது நம் நாட்டிற்கு மட்டும் உண்மை. நாம் அனைவரும் நம்புவதால் இதிலுள்ள வித்தான உண்மை, வளர்ந்து பலம் பெற்றுள்ளது. நம் நாட்டிலேயே வட நாட்டில் இதே நம்பிக்கையிருந்தாலும் இந்த நேரங்கள் இடத்திற்கு இடம் மாறும். நம் இராகு காலம், பீகார் வழக்கப்படி (சில சமயங்களில்) நல்ல நேரமாக இருக்கின்றது.
வெளி நாட்டாருக்கு இந்த நம்பிக்கையில்லை. அவர்கள் நம் நாட்டில் வந்து செயல்படும் பொழுது நம்மைப் பாதிக்கும் கெட்ட நேரம் அவர்களைப் பாதிப்பதில்லை. நமக்குதவும் நல்ல முகூர்த்தம் அவர்களுக்குத் துணை செய்வதில்லை. இரு உண்மைகளை நாம் மறுக்க முடியாது. 1) நேரங்களுக்கு குண விசேஷம் உண்டு 2) இது நம்புபவர்களை மட்டுமே பாதிக்கும்.
.................அன்னை பக்தர்களுடைய நிலை என்ன? இந்த நல்ல வேளைகளை நாடுவதா? கெட்ட வேளைகளை விலக்குவதா என்ற கேள்விக்குரிய பதிலாக இக்கட்டுரையை எழுதுகிறேன். அன்னையை நினைத்தவுடன் அந்த நேரம் நல்ல நேரமாக மாறி விடுவதால் அன்னை பக்தர்களுக்கு நல்ல வேளை, கெட்ட வேளை என்பதில்லை. அவர்களுக்கும் மனத்தில் நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை பலிக்கும். இது கெட்ட நேரம், என்ன செய்யுமோ என்ற பயமிருந்தால் பயத்திற்குண்டான பலன் கிடைக்கும்.
--------------அன்னை காலத்தைக் கடந்தவர். அன்னையை ஏற்றுக் கொண்டவரை காலம் கட்டுப்படுத்தாது. காலத்தின் பழைய நிலைகள் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. இராகுகாலம், எமகண்டம், நல்ல வேளை, கெட்ட நேரம் என்பவற்றுக்கு பக்தர்களிடம் வேலையில்லை. தமிழ்க் காலண்டருக்கு ஆபீஸில் வேலையில்லை. அதைப்பார்த்து அதன்படி நடப்பேன் என்று பிடிவாதம் செய்தால் செய்யும் வேலையில் கோளாறு வரும்.
......................அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனிதன் வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை. அதனால் காலத்தின் குணவிசேஷம் அவனை பாதிப்பதில்லை. அத்துடன் உலகத்தின் குணவிசேஷங்கள் அன்னையிடம் தலைகீழாகவும் செயல்படுவதுண்டு.அன்னையின் வாழ்வில் திருவுருமாற்றம் என்பது மாறாதது. அன்னையின் சட்டப்படி செயல்பட விரும்புவோரும், யோகப்பதையில் செல்ல நினைப்பவர்களும், இத்தகைய மாற்றங்களை வாழ்வில் ஏற்பது மிகவும் முக்கியமானது. இல்லைஎனில் அவர்களும் சாதாரண வாழ்வின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களே.
நன்றி.