இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Friday, 5 June 2015

Message of the Day - ஸ்ரீ அரவிந்தரின் யோகம் - The principle of Yoga

The principle of Yoga is the turning of one or of all powers of our human existence into a means of reaching divine Being. In an ordinary Yoga one main power of being or one group of its powers is made the means, vehicle, path. In a synthetic Yoga all powers will be combined and included in the transmuting instrumentation.
-Sri Aurobindo



ஸ்ரீ அரவிந்தர் தம் யோக சித்தியின் மூலம் தாம் இறைவனை அடைந்து, தமக்குக் கிடைத்த மோட்சம் உலகில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கான இறையருளைக் கூட்டுவிக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டார். அதற்கேற்ப, அவர் தம் யோக இலட்சியத்தையும், வழிமுறைகளையும் பற்றிக் கொண்டார். மேலும் அவர், மரணம், பிணி, வறுமை, பொய்மையில் உள்ள மனிதனை, அவனுடைய முயற்சி ஏதுமின்றி, தம் யோக சக்தியால் விடுவிக்க வேண்டும் என முயன்று முதற்கட்டத்தில் வெற்றியும் பெற்றார். ஆண்டவனை நாடி விரதம் இருந்து பலனை நாடும் மனிதனை நோக்கி, ஆண்டவனே தன் இருக்கையிலிருந்து புறப்பட்டு வந்து, அவன் கேட்கும் வரத்தையும் கேட்கத் தெரியாமல் இருக்கும் பூரண ஆத்ம விளக்கத்தையும் கொடுப்பதற்கு, தம்மை ஒரு கருவியாக மாற்றிக்கொண்டார் ஸ்ரீ அரவிந்தர். இறைவனிடமிருந்து யோக சித்தியைப் பெறுவது ஸ்ரீ அரவிந்தரின் செயல். அவர் பெற்றதை உலகத்திற்கு வழங்குவது அன்னையின் அவதார நோக்கம்.

ஸ்ரீ அரவிந்தருடைய யோகத்தின் வெற்றி முதல் 3 கட்டங்களைத் தாண்டிவிட்டது. முழுதும் வெற்றி அடைந்தால் உலகத்தில் மரணமும், பிணியும், வறுமையும், பொய்ம்மையும் மனித முயற்சியின்றியே முழுதுமாக விலகி இருக்கும். என்றாலும் இறைவனின் பேரருள் மனிதனை நோக்கிச் செலுத்தும் யோகமாக ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம் அமைந்திருப்பதால், பக்தர்கள் கேட்காமலேயே அன்னையால் கொடுக்க முடிகிறது.

- கர்மயோகி  அவர்கள்

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.