இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 26 June 2014

கதையும் கருத்தும் - 2

கதையும் கருத்தும் - 2
Michel Montecrossa and The Chosen Few
Image Courtesy :                         http://www.mirapuri-enterprises.com
பொறுமை..          வாழ்வில் நம்மில் பல பேருக்கு இல்லாத ஒன்று, அல்லது நாம் பின்பற்ற முயற்சிக்கும் நற்பண்புகளில் ஒன்று. அன்னையை ஏற்ற அனைவரும் கடைபிடிக்க வேண்டியதில் இன்றியமையாத ஒன்று இது. பொறுத்தார் பூமியாள்வார் என்பது பழமொழி. பொறுமையின் சிறப்பை அறிந்த போதும் அதனை பின்பற்றுவதில் தவறுகிறோம். நாம் பல சந்தர்பங்களில், பொறுமையையினை இழந்து, அறியாமையால் கோபம் அல்லது கவலை என அன்னையின் வாழ்விற்குப் பொருந்தாத உணர்வுகளுக்கு ஆளாகிறோம். இல்லையா? சிந்திப்போம்.

ஸ்ரீ அன்னை, தனது புத்தகங்களில் தனது பல்வேறு அறிவுரைகளை, கதைகளின் மூலம் விளக்கியுள்ளார். பொறுமையை என்ற பண்பினைப் பற்றியும், ஆன்மீகத்தில் அதன் முக்கியத்துவத்தினைப் பற்றியும் கூறியுள்ளார் ஸ்ரீ அன்னை. இன்று அவரே கூறிய கதையையும், அதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய கருத்தினையும் காண்போம்.

இனி கதைக்குச் செல்வோம். ..


The Arabian poet, Al Kosai, lived in the desert. One day he came across a fine Naba tree and from its branches he made a bow and some arrows.

At nightfall he set out to hunt wild asses. Soon he heard
the hoof-beats of a moving herd. So he shot his first arrow. But
he had bent the bow with such strength that the arrow, passing
right through the body of one of the animals, dashed against
a nearby rock. When he heard the sound of wood on stone
Al Kosai thought he had missed his mark. So then he shot his
second arrow and once more the arrow passed through an ass
and struck the rock. Again Al Kosai thought he had missed his
mark. In the same way he shot a third arrow, and a fourth, and a
fifth, and each time he heard the same sound. When it happened
for the fifth time, he broke his bow in rage.

At dawn he saw five asses in front of the rock.
If he had been more patient and waited until daybreak, he
would have kept his peace of mind and his bow as well.
-Words of the Mother

அல் கொஸய் என்ற அரேபியப் புலவர் ஒரு பாலைவனத்தில் வசித்தார். ஒரு நாபா மரத்தினைக் கண்ட அவர் அதன் கிளைகளை வைத்து, ஒரு வலிமையான வில்லினையும், அம்புகளையும் உருவாக்கினார்.

அன்றைய இரவு, காட்டுக்கழுதைகளை வேட்டையாடச் செல்கிறார். இரவில் கழுதைகளின் குளம்புச்  சப்தங்களைக் கேட்ட அவர், அந்த திசை நோக்கி, தனது முதல் அம்பை எய்கிறார். அவரது அம்பு ஒரு மிருகத்தின் மீது பட்டு, அதன் உடலைத் துளைத்துச் சென்று, அருகில் இருந்த பாறையில் பட்டு ஒலி எழுப்புகிறது. இதனைக் கேட்ட அவர், தன் குறி தவறி விட்டதாக எண்ணுகிறார். இரண்டாவது அம்பையும் எய்கிறார். மீதும் அதே ஒலி வருகிறது. அப்படியாக அடுத்தடுத்து அம்புகளை எய்யும் அவர், முடிவில் தனது ஐந்தாவது அம்பையும் எய்கிறார். மீதும் அதே ஒலி எழுந்தது. தனது முயற்சிகள அனைத்தும் தோல்வி அடைந்ததாக நினைத்து, கோபம் கொண்ட அவர், தனது முயற்சியால் தான் உருவாகிய வில்லினையும் உடைத்து எறிகிறார்.

மறுநாள் காலை அவர் ஒரு பெரிய பாறையின் முன்பு, ஐந்து காட்டுக் கழுதைகள் தனது அம்புகளினால் வீழ்த்தப்பட்டு இருப்பதைக் காண்கிறார். அவர் காலை வரை பொறுமையாக இருந்திருந்தால், அவருக்கு மன நிம்மதியும் கிடைதிருப்பதோடு, அவர் தான் முயன்று செய்த வில்லினையும் இழந்து இருக்க மாட்டார்.

இந்த சிறிய கதையில்,நாம் சிந்திக்க சில விஷயங்களும் உள்ளன.

1. பொறுமையின்மை இழப்பினைத் தருகிறது. அவர் தனது முயற்சியினால் பாடுபட்டு செய்த வில்லினை உடைத்தெறிந்தார்.
2. பொறுமையின்மை சிந்தனைகளைத் தடுக்கிறது. அவர் தன் மீது நம்பிக்கையை இழக்கிறார்.
3. பொறுமையின்மை மனநிம்மதியை அழிக்கிறது. காலை வரை தான் தோல்வி அடைந்ததாக எண்ணி  வருந்தி, நிம்மதியை இழக்கிறார்.

ஸ்ரீ அன்னை மேலும் கூறுகிறார்...


If one wants to do a divine work upon earth, one must come with tons of patience and endurance.

இறைவனுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர், அளவில்லாத பொறுமையும், விடா முயற்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்று இறை சேவையில், வாழ்வை இறைவனுக்கு அர்பணிக்கும் பணியில், பொறுமையின் அவசியத்தை வலியுருத்துகிறார். 
........One must know how to live in eternity and wait for the consciousness to awaken in
everyone—the consciousness of what true integrity is. 

.............If there is a sincerity in the aspiration and a patient will to arrive at the higher consciousness in spite of all obstacles, then the opening in one form or another is sure to come.”
 
- Questions and Answers 1954

நன்றி.


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.