இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 12 June 2014

அன்னையின் பாதையில் : இறைவனின் விருப்பமே வாழ்வில் செயல்படும்



Michel Montecrossa and The Chosen Few
Image Courtesy :                                     www.Mirapuri-Enterprises.com
நமது  சிந்தனைக்கு :

அன்னையின் வாழ்வில் நாம் வரும்  போது  அல்லது வர  முயற்சிக்கும் போது, நமது வாழ்வில்  மாற்றங்கள் என்பது மாறாமல் வரும். திருவுருமாற்றம் நிகழ, நாம் அன்னையை சரணாகதி அடையும் அதே வேளையில், நமது எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும், உணர்விலும்  நாம் எத்தகைய மாற்றங்களைக் கொள்ள வேண்டும் என்பதற்கு, நம்மைப்பற்றி நாமே அறிவது உதவி செய்யும். அதற்கான பகுதியே இந்த நமது சிந்தனைப் பகுதி.

வாழ்வில் நமக்கு பல வகையிலும் ஆசைகளும், விருப்பு வெறுப்புகளும் மற்றும் Choices உள்ளன. நாம் விருப்பம் கொண்ட ஒரு செயல் நமக்கு நன்மைதான் தரும் என்பதனையும், நமக்கு வெறுப்பைத் தரும் ஒன்று, நமக்கு தீமை மட்டுமே செய்யும் என்பதனையும் கூற முடியாது. ஏனெனில், இவையாவும், மனிதனின் அறிவால் மட்டும் அளக்கப்படுவன ஆகும். அவனது ego செயல்படும் போது, செய்யும் செயலின் நன்மை தீமையை பொருத்து கர்மம் அவனை ஆட்கொள்கிறது.

நமது விருப்பங்கள் அல்லது தேவைகளை, அவற்றின் விளைவுகளைப் பற்றி கூட எண்ணாமல், நமது சக்தியை பயன்படுத்தியோ அல்லது பிரார்த்தனையின் மூலமோ மக்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் இல்லையா?  இத்தனை பிரார்த்தனைகளை வாழ்வு முழுது செய்யும் நாம், இது இறைவனின் விருப்பத்திற்கு உட்பட்டதா என்பதை அறிய முயல்கிறோமா என்பதே இன்றைய சிந்தனை. அன்னையின் வாழ்வில் உள்ள ஒருவர், இறைவனின் விருப்பத்தினை நாடும் போது, செயலில் வெற்றி கிடைப்பதோடு, அவர் விருப்பு, வெறுப்பு அற்ற வாழ்வைப் பெறுவதோடு, கர்மத்தில் இருந்து விடுதலை பெறுவதோடு, இறைவனின் விருப்பத்தினை நிறைவேற்றும் ஒரு கருவியும் ஆகிறார். அத்தகைய உன்னதமான நிலையிலைப் பெற, நம் விருபத்தினை தவிர்த்து, இறைவனின் நோக்கம் என்ன என்பதனை அறிய நாம் முற்படவேண்டும்.

ஸ்ரீ அன்னையின் பாதையில்:

அன்னை இதுபற்றி கூறும் விளக்கத்தினைக் காண்போம்.

Question: How can we know what the divine Will is?
 இறைவனின் விருப்பத்தை நாம் எப்படி அறியமுடியும் என்ற கேள்விக்கு அன்னையின் பதில்.
One does not know it, one feels it. And in order to feel it one must will with such an intensity, such sincerity, that every obstacle disappears. As long as you have a preference, a desire, an attraction, a liking, all these veil the Truth from you. Hence,
the first thing to do is to try to master, govern, correct all the movements of your consciousness and eliminate those which cannot be changed until all becomes a perfect and permanent expression of the Truth.
 இறைவனின் விருப்பத்தை நாம் அறிய முடியாது, உணரவே முடியும் என்கிறார் அன்னை. அதனை உணர, நாம் அவ்வளவு உண்மையுடன் இருந்து, அதற்குண்டான அத்தனை தடைகளும் மறையும் வரை முயல வேண்டும். நமக்கு சொந்த விருப்பங்களும், ஆசைகளும், பற்றும் இருக்கும் வரை உண்மை அல்லது சத்தியத்தில் இருந்து விலகுகிறோம். அதனால், இறைவனை அறிய, நமது உணர்வு நிலையை consciousness-அதன் இயக்கங்களை, அது உண்மையின் பாதையை விட்டு விலகாமல், அது எப்போது உண்மையின் முழு பிரதிபலிப்பாக முழுமையாக ஆகிறதோ, அதுவரையிலும், நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

And even towill this is not enough, for very often one forgets to will it. What is necessary is an aspiration which burns in the being like a constant fire, and every time you have a desire, a preference, an attraction it must be thrown into this fire. If you do this persistently, you will see that a little gleam of true consciousness begins to dawn in your ordinary consciousness.
 உண்மையைப் பின்பற்ற, விருப்பம் மட்டும் போதாது. உண்மையைப் பற்ற வேண்டும் என்ற ஆசையானது, aspiration, நம் மனதில் அணையாத தீயினைப் போல இருக்கவேண்டும். எந்த ஆசை வந்தாலும், விருப்பம் எழுந்தாலும், பற்று வந்தாலும், இத்தீயிடம் நாம் அவற்றைச் சேர்த்துவிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்யும் பொது, நமது சாதாரண மனிதனுக்குரிய உணர்வு நிலை, உண்மைக்குரிய உணர்வு நிலையை எட்டும் என்கிறார் அன்னை.
At first it will be faint, very far behind all the din of desires, preferences, attractions, likings. But you must go behind all this and find that true consciousness, all calm, tranquil, almost silent.
Those who are in contact with the true consciousness see all the possibilities at the same time and may deliberately choose even the most unfavourable, if necessary. But to reach this point,
you must go a long way.
உண்மை, சத்தியம் என்ற உணர்வு நிலையை consciousness நாம் பெறும்போது, ஒரு செயல் நடக்க எல்லாவிதமான, சாதகமான சூழலும் உருவாவதோடு, இதுநாள் வரை நாம் வெறுத்த அல்லது விரும்பாத  வழியினைக் கூட தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையும் வரலாம். ஏனெனில் அதுவே இறைவனின் விருப்பமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த நிலையை அடைய, இன்னும் அன்னையின் சத்திய வழியில் தொலை தூரம் பயணிக்கக் வேண்டும்.


அன்னையின் வழி செல்வோம். சத்தியத்தின்உணர்வைப்பெறுவோம்.அன்னையின் திருப்பாதங்களே சரணம் !

 Ref: Questions and Answers - 1950 - The Mother

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.