நமது சிந்தனைக்கு:
வீட்டில் விசேஷம், பண்டிகைகள் என்பனவெல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இவைகள் கொண்டாடப்படுவதன் அர்த்தம் என்ன? Purpose என்ன என்று கூடத் தெரியாமல் நம்மில் சிலர் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே? சாதராணமான வாழ்க்கையில், பண்டிகை என்பது புத்தாடை உடுப்பது, விருந்தினர்களை வரவேற்று இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலவழிகளிலும் அவரவர் விருபத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ஆடம்பரத்தையும், பகட்டையும், வீண்பெருமையையும் நாம் காண்கிறோம். இவை அத்தனையும் சாதாரண வாழ்க்கையில் உழலும் மக்களுக்கே. ஆன்மீகத்தின் உண்மையை அல்லது தத்துவத்தை புரிந்து கொள்ள முயலும் அல்லது புரிந்து தெளிந்த மனிதர்களுக்கு பண்டிகை என்பதை வேறு கோணத்திலும் பார்க்க முடியும். நாமும் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக தீபாவளி என்பது இருளை, ஒளியானது வெற்றி கொண்ட நாளை நினைவு கூறும் தினமாகும்.
ஆடம்பரம், பகட்டு, பெருமை ஆகிய எண்ணங்களை விட்டு, நம்மில் ஒளிந்திருக்கும் தீமையை அழிக்கும் நாளாகவும் இதைக் கொள்ளலாம் இல்லையா?
நம்மை புரிந்து கொள்ளாத உறவினர்களிடம் கூட, வெறுப்பு என்ற தாழ்ந்த குணத்தைக் காட்டாமல், அவர்களிடம் அன்பு காட்டி, அன்னை விரும்பும் சுமூகத்தை வளர்க்கும் நாளாகக் கொள்ளலாம் அல்லவா?
நம்மில் இருக்கும் இருளை, இறைவனின் ஒளி கொண்டு அழிப்போம். இறைவனின் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு பண்டிகைதான், வெற்றித் திரு விழாதான்.
மனிதன்தான் தனது விருப்பத்திற்கு ஏற்ப பண்டிகைகளுக்கு அர்த்தம் கொடுத்துள்ளான் என்கிறார் அன்னை.
இது பற்றி சில அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அன்னை கூறிய சில பதில்களை இங்கு காண்போம்.
Question : What is the origin, significance and purpose of festivals such as Deepavali, Dasera, Rakhipurnima, etc.—and also some of the western festivals? On these days do the gods respond more to human aspirations? What is the connection between the inner truth and the external functions of these festivals? Lastly, what should be our attitude towards these festivals?
Mother's Answer: Men like festivals.
Question : As an answer to my letter on the significance of festivals you wrote to me: “Menlike festivals.”Does it thenmean that they are men’s fancy and whim? Have they no meaning and no utility?
Mother's Answer: It is men who give a meaning to festivals in order to legitimate their presence.
இப்படி அன்னை கூறிய வழியில், அதில் பொதிந்துள்ள உணமைகளை உணர்ந்து, நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் சத்தியத்தை கொண்டு வருவோம் இந்த நாளில்.
ஸ்ரீ அன்னையின் ஒளியே, எங்களை ஆட்கொள்வாயாக!
No comments:
Post a Comment