இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday, 30 October 2013

இறைவனின் கருணை எப்போது நமக்கு கிடைக்கிறது?


நமது சிந்தனைக்கு:

வாழ்வில் நாம் எந்தனையோ வெற்றி தோல்விகளைச் சந்திக்கிறோம். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உண்மையும், தர்மமும் இருக்கின்றதா, நாம் உண்மையுடம் செயல்பட்டோமா என்ற ஆராய்ந்து பார்ப்பவர்கள் நீங்கள் எனில் இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான். நமது செயல்களுக்கு இறைவனின் கருணை எப்போது கிடைக்கிறது?

அன்னையின் முறைகளைப் பற்றிப் பேசும் பொழுது சமர்ப்பணம் (Consecration) , சரணாகதி (Surrender) மற்றும் திருவுருமாற்றம் (Transformation) என்ற பெரும் விஷயங்கள் பிரிக்க முடியாதவை.  நீங்கள் வெற்றி அடைந்த செயல்களில் உங்களுடைய ஆசை அல்லது விருப்பம் (aspiration) எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?   தோல்வி அடைந்த நிகழ்வுகளில் ஏதேனும் பொய் கலந்துள்ளதா என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
நாம் செய்யும் செயல்கள் எப்படி இருக்கவேண்டும். சரணாகதி செய்வது என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?

சரணாகதி என்பது முழு மனதோடு இருக்கவேண்டும்.சரணாகதியை  நமது மனதில் நம்பிக்கையிலாமல் செய்வது, -  சரணாகதி செய்யும் செயலில் பொய் மற்றும் சுயநலம்,  - தோல்வி, நஷ்டம் அல்லது செயலின் எதிர் மறை விளைவுகளை பற்றிய சிந்தனைகளுடன் நம்பிக்கை இல்லாமல் சரணாகதி செய்வது என்பது முழுமையான சரணாகதி ஆகாது. அதனால் பலனும் இல்லை.

  அன்னை இது பற்றி கூறும் போது, இறைவனின் கருணை செயல்பட சத்தியத்தின் ஒளியும், உண்மையும் வேண்டும் ; அறியாமையிலும், பொய்மையிலும் செய்யப்படும் செயல்களில் சத்திய ஜீவியம் செயல்படாது என்கிறார். பொய் என்றும் இறைவனின் சக்தி செயல்பட வழி வகுக்காது என்று வலியுறுத்துகிறார்.


உங்களது  சரணாகதியின் பின்னணியில், அகங்காரமும், மனதின் சுயநலமான ஆசைகளும், விருப்பங்களும் உள்ளது எனில், நீங்கள் திருவுருமாற்றத்தை நாடுவதே சிறந்த செயல் என்று கூறுகிறார்.

உண்மையும் பொய்யும், இருளுள் ஒளியும், சரணாகதியும் சுயநலமும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்று அன்னை கூறுகிறார். நம்மிடம் குறை இருந்தது எனில் அதனை திருவுரு மாற்றம் அடையச் செய்ய நாம் இறைவனிடம் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதைப் பற்றி அன்னை எழுதிய சில கருத்துக்கள்....

....There must be a total and sincere surrender; there must be an exclusive self-opening to the divine Power; there must be a constant and integral choice of the Truth that is descending, a constant and integral rejection of the falsehood of the mental, vital and physical Powers and Appearances that still rule the earth-Nature.

If behind your devotion and surrender you make a cover for your desires, egoistic demands and vital insistences, if you put these things in place of the true aspiration or mix them with it and try to impose them on the Divine Shakti, then it is idle to invoke the divine Grace to transform you.

If you call for the Truth and yet something in you chooses what is false, ignorant and undivine or even simply is unwilling to reject it altogether, then always you will be open to attack and the Grace will recede from you.  Detect first what is false or obscure in you and persistently reject it, then alone can you rightly call for the divine Power to transform you.

Do not imagine that truth and falsehood, light and darkness, surrender and selfishness can be allowed to dwell together in the house consecrated to the Divine. The transformation must be integral, and integral therefore the rejection of all that withstands it.

 A glad and strong and helpful submission is demanded to the working of the Divine Force, the obedience of the illumined disciple of the Truth, of the inner Warrior who fights against obscurity and falsehood, of the faithful servant of the Divine. This is the true attitude and only those who can take and keep it, preserve a faith unshaken by disappointments and difficulties and shall pass through the ordeal to the supreme victory and the great transmutation.

பூரண சரணாகதியே இறைவன் எதிர்பார்ப்பது. சரணாகதி செய்ய, இறைவன் நம்மை வற்புறுத்துவதும் இல்லை.

...... The Supreme demands your surrender to her, but does not impose it: you are free at every moment, till the irrevocable transformation comes....

அன்னையை சரணடைவோம். இறைவனின் கருணைக்குப் பாத்திரமாவோம்.

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள், இறைவனின் கருணை எப்போது நமக்கு கிடைக்கிறது?


No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.