இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 31 October 2013

பண்டிகைகள் கொண்டாடுவது எதற்காக?


நமது சிந்தனைக்கு:

வீட்டில் விசேஷம், பண்டிகைகள் என்பனவெல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கின்றன. இவைகள் கொண்டாடப்படுவதன் அர்த்தம் என்ன? Purpose என்ன என்று கூடத் தெரியாமல் நம்மில் சிலர் இருக்கிறோம் என்பதும் உண்மைதானே? சாதராணமான வாழ்க்கையில், பண்டிகை என்பது புத்தாடை உடுப்பது, விருந்தினர்களை வரவேற்று இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலவழிகளிலும் அவரவர் விருபத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ஆடம்பரத்தையும், பகட்டையும், வீண்பெருமையையும் நாம் காண்கிறோம். இவை அத்தனையும் சாதாரண வாழ்க்கையில் உழலும் மக்களுக்கே. ஆன்மீகத்தின் உண்மையை அல்லது தத்துவத்தை புரிந்து கொள்ள முயலும் அல்லது புரிந்து தெளிந்த மனிதர்களுக்கு பண்டிகை என்பதை வேறு கோணத்திலும் பார்க்க முடியும். நாமும் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.


 உதாரணமாக தீபாவளி என்பது இருளை, ஒளியானது வெற்றி கொண்ட நாளை நினைவு கூறும் தினமாகும்.

ஆடம்பரம், பகட்டு, பெருமை ஆகிய எண்ணங்களை விட்டு,  நம்மில் ஒளிந்திருக்கும் தீமையை அழிக்கும் நாளாகவும் இதைக் கொள்ளலாம் இல்லையா?

நம்மை புரிந்து கொள்ளாத உறவினர்களிடம் கூட, வெறுப்பு என்ற தாழ்ந்த குணத்தைக் காட்டாமல், அவர்களிடம் அன்பு காட்டி, அன்னை விரும்பும் சுமூகத்தை வளர்க்கும் நாளாகக் கொள்ளலாம் அல்லவா?
 
நம்மில் இருக்கும் இருளை, இறைவனின் ஒளி கொண்டு அழிப்போம். இறைவனின் விருப்பத்தை நாம் பூர்த்தி செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு பண்டிகைதான், வெற்றித் திரு விழாதான்.


மனிதன்தான் தனது விருப்பத்திற்கு ஏற்ப பண்டிகைகளுக்கு அர்த்தம் கொடுத்துள்ளான் என்கிறார் அன்னை.

இது பற்றி சில அன்பர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அன்னை கூறிய சில பதில்களை இங்கு காண்போம்.

 Question : What is the origin, significance and purpose of festivals such as Deepavali, Dasera, Rakhipurnima, etc.—and also some of the western festivals? On these days do the gods respond more to human aspirations? What is the connection between the inner truth and the external functions of these festivals? Lastly, what should be our attitude towards these festivals?
 Mother's Answer:  Men like festivals.

  Question : As an answer to my letter on the significance of festivals you wrote to me: “Menlike festivals.”Does it thenmean that they are men’s fancy and whim? Have they no meaning and no utility?
Mother's Answer: It is men who give a meaning to festivals in order to legitimate their presence. 

இப்படி அன்னை கூறிய வழியில், அதில் பொதிந்துள்ள உணமைகளை உணர்ந்து, நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் சத்தியத்தை கொண்டு வருவோம் இந்த நாளில்.

ஸ்ரீ அன்னையின் ஒளியே, எங்களை ஆட்கொள்வாயாக!

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,



Wednesday, 30 October 2013

இறைவனின் கருணை எப்போது நமக்கு கிடைக்கிறது?


நமது சிந்தனைக்கு:

வாழ்வில் நாம் எந்தனையோ வெற்றி தோல்விகளைச் சந்திக்கிறோம். வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உண்மையும், தர்மமும் இருக்கின்றதா, நாம் உண்மையுடம் செயல்பட்டோமா என்ற ஆராய்ந்து பார்ப்பவர்கள் நீங்கள் எனில் இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான். நமது செயல்களுக்கு இறைவனின் கருணை எப்போது கிடைக்கிறது?

அன்னையின் முறைகளைப் பற்றிப் பேசும் பொழுது சமர்ப்பணம் (Consecration) , சரணாகதி (Surrender) மற்றும் திருவுருமாற்றம் (Transformation) என்ற பெரும் விஷயங்கள் பிரிக்க முடியாதவை.  நீங்கள் வெற்றி அடைந்த செயல்களில் உங்களுடைய ஆசை அல்லது விருப்பம் (aspiration) எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பது நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?   தோல்வி அடைந்த நிகழ்வுகளில் ஏதேனும் பொய் கலந்துள்ளதா என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?
நாம் செய்யும் செயல்கள் எப்படி இருக்கவேண்டும். சரணாகதி செய்வது என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?

சரணாகதி என்பது முழு மனதோடு இருக்கவேண்டும்.சரணாகதியை  நமது மனதில் நம்பிக்கையிலாமல் செய்வது, -  சரணாகதி செய்யும் செயலில் பொய் மற்றும் சுயநலம்,  - தோல்வி, நஷ்டம் அல்லது செயலின் எதிர் மறை விளைவுகளை பற்றிய சிந்தனைகளுடன் நம்பிக்கை இல்லாமல் சரணாகதி செய்வது என்பது முழுமையான சரணாகதி ஆகாது. அதனால் பலனும் இல்லை.

  அன்னை இது பற்றி கூறும் போது, இறைவனின் கருணை செயல்பட சத்தியத்தின் ஒளியும், உண்மையும் வேண்டும் ; அறியாமையிலும், பொய்மையிலும் செய்யப்படும் செயல்களில் சத்திய ஜீவியம் செயல்படாது என்கிறார். பொய் என்றும் இறைவனின் சக்தி செயல்பட வழி வகுக்காது என்று வலியுறுத்துகிறார்.


உங்களது  சரணாகதியின் பின்னணியில், அகங்காரமும், மனதின் சுயநலமான ஆசைகளும், விருப்பங்களும் உள்ளது எனில், நீங்கள் திருவுருமாற்றத்தை நாடுவதே சிறந்த செயல் என்று கூறுகிறார்.

உண்மையும் பொய்யும், இருளுள் ஒளியும், சரணாகதியும் சுயநலமும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்று அன்னை கூறுகிறார். நம்மிடம் குறை இருந்தது எனில் அதனை திருவுரு மாற்றம் அடையச் செய்ய நாம் இறைவனிடம் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இதைப் பற்றி அன்னை எழுதிய சில கருத்துக்கள்....

....There must be a total and sincere surrender; there must be an exclusive self-opening to the divine Power; there must be a constant and integral choice of the Truth that is descending, a constant and integral rejection of the falsehood of the mental, vital and physical Powers and Appearances that still rule the earth-Nature.

If behind your devotion and surrender you make a cover for your desires, egoistic demands and vital insistences, if you put these things in place of the true aspiration or mix them with it and try to impose them on the Divine Shakti, then it is idle to invoke the divine Grace to transform you.

If you call for the Truth and yet something in you chooses what is false, ignorant and undivine or even simply is unwilling to reject it altogether, then always you will be open to attack and the Grace will recede from you.  Detect first what is false or obscure in you and persistently reject it, then alone can you rightly call for the divine Power to transform you.

Do not imagine that truth and falsehood, light and darkness, surrender and selfishness can be allowed to dwell together in the house consecrated to the Divine. The transformation must be integral, and integral therefore the rejection of all that withstands it.

 A glad and strong and helpful submission is demanded to the working of the Divine Force, the obedience of the illumined disciple of the Truth, of the inner Warrior who fights against obscurity and falsehood, of the faithful servant of the Divine. This is the true attitude and only those who can take and keep it, preserve a faith unshaken by disappointments and difficulties and shall pass through the ordeal to the supreme victory and the great transmutation.

பூரண சரணாகதியே இறைவன் எதிர்பார்ப்பது. சரணாகதி செய்ய, இறைவன் நம்மை வற்புறுத்துவதும் இல்லை.

...... The Supreme demands your surrender to her, but does not impose it: you are free at every moment, till the irrevocable transformation comes....

அன்னையை சரணடைவோம். இறைவனின் கருணைக்குப் பாத்திரமாவோம்.

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள், இறைவனின் கருணை எப்போது நமக்கு கிடைக்கிறது?


Monday, 28 October 2013

மனதில் எழும் அபிப்பிராயங்கள் எல்லாம் உண்மைதானா?



சாதாரண மனநிலையில் வாழும் மனிதர்களுக்கு அபிப்பிராயம் கூறுவது என்பது ஒரு தவிர்க்க முடியாத விஷயம். நம்மை நாமே ஆராய்ந்து பார்த்தால் நமது அபிப்பிராயங்களில் எவ்வளவு தூரம், பொய்யும் உண்மையும் கலந்துள்ளது என்பது தெரியும். ஒரு பொது விஷயத்தை விவாதமாகக் கொண்டால், தன் அபிப்பிராயத்தை முன்னிலைப்படுத்த அவரவர் மனம் நினைக்கிறது. அதில் எந்தனை பேர், அதில் பொதிந்துள்ள உண்மையை நிலை நிறுத்துவார்கள் என்பது கேள்விக்குறியான ஒன்று. இவ்வாறு அபிப்பிராயம் கூறுவதில் நாம் எவ்வளவு தூரம் சத்தியத்தை, உண்மையை நிலை நிறுத்துகிறோம் என்பது சிந்திக்க வேண்டிய முக்கியாமான விஷயம். நமது அபிப்பிராயங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

அன்னை இது பற்றிக் கூறும் போது, அறியாமையின் பிடியிலுள்ள மனத்தில் இருந்து எழும் அபிப்பிராயங்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கின்றன என்கிறார். மனம் அடங்கி, எண்ணங்களில் இருந்து விடுபட்டால் உண்மை எது என்பதை நாம் அறிய முடியும் என்றும் கூறுகிறார். இவ்வாறு விவாதங்களில் ஈடுபடுவதை நேரத்தை வீணடிக்கும் செயல் என்கிறார் அவர்.
அபிப்பிராயம் பற்றிய அன்னையின் சில வார்த்தைகள்.....


MOTHERS WORDS ON OPINION AND TRUTH

In the Ignorance mental opinions always oppose one another. In the Truth they are complementary aspects of a higher knowledge.

Naturally, all these discussions (or exchanges of opinion) are purely mental and have no value from the viewpoint of the Truth. Each mind has its way of seeing and understanding things, and even if you could unite and bring together all these ways of seeing, you would still be very far from attaining the Truth. It is only when, in the silence of the mind, you can lift yourself above thought, that you are ready to know by identity.

... when you have an opinion and express it, to remember that it is only an opinion, a way of seeing and feeling, and that other people’s opinions, and ways of seeing and feeling are as legitimate as your own, and that instead of opposing them you should total them up and try to find a more comprehensive synthesis. On the whole the discussions are always pretty futile and seem to me to be a waste of time.

....In all opinions there is something true and something false. It is indeed a great and useful thing to be able to listen to the opinions of others without losing one’s temper.


 சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட அன்னையின் சத்திய ஜீவியப் பாதையில் நாம் பயணிக்க எண்ணினால் முதலில், அர்த்தமற்ற அபிப்பிராயங்களை நாம் மனதில் கொள்வதை முடிந்த அளவு தவிர்ப்போம். முயற்சிப்போம்.அன்னை வழி வாழ்வோம்.

ஸ்ரீ அன்னையின் திருபாதங்களே சரணம்!



Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள், இறைவன், மனதில் எழும் அபிப்பிராயங்கள் எல்லாம் உண்மைதானா?


Friday, 25 October 2013

Sonnets by Sri Aurobindo

ஸ்ரீ அரவிந்தர், சத்திய ஜீவிய உலகின் இறை அவதாரம் (Supramental Avatar) மட்டும் இல்லை. சுதந்திரப் போராட்ட வீரர், கவி, யோகி என பல முகங்களைக் கொண்டவர் அவர். ஆரம்ப கால வாழ்கையை சுதந்திர போராட்டத்திற்கு அர்பணித்த அவர், பிற்காலத்தில் இறைவனின் சக்தியாகிய, சத்திய ஜீவியம் இந்த உலகத்தை அடைய தனது உயிரை தியாகம் செய்து, அச்சக்தி தனது உடலின் மூலமாக இவ்வுலகில் வர காரணமாக இருந்தார்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர், உலகமே புகழும் அளவிற்கு மிகச் சிறந்த கவிதை படைப்புகளையும் அவர் இவ்வுலகிற்கு அளித்துள்ளார். 1910 - களில் அவர் அளித்தத் பெரிய படைப்புகள் புத்தகங்களாக வெளியிடப்பட்டு உள்ளன. Sonnet என்று அழைக்கப்படும் ஒரு கவிதை உருவில் The Cosmic Dance  என்ற அவருடைய ஒரு கவிதையை இன்று தங்களுக்காகத் தருகிறோம்.

 The Cosmic Dance
(Dance of Krishna, Dance of Kali)

Two measures are there of the cosmic dance.
Always we hear the tread of Kali’s feet 
Measuring in rhythms of pain and grief and chance
Life’s game of hazard terrible and sweet.
The ordeal of the veiled Initiate,
The hero soul at play with Death’s embrace, 
Wrestler in the dread gymnasium of Fate 
And sacrifice a lonely path to Grace,
Man’s sorrows made a key to the Mysteries, 
Truth’s narrow road out of Time’s wastes of dream, 
The soul’s seven doors from Matter’s tomb to rise, 
Are the common motives of her tragic theme.
But when shall Krishna’s dance through Nature move, 
His mask of sweetness, laughter, rapture, love?

- Bhagavan Sri Aurobindo


Thursday, 24 October 2013

அகங்காரத்தை (Ego) விட செய்ய வேண்டியது என்ன ?


நாம் நமது, அகங்காரத்தை விடும் வரை நமது வாழ்வில் இன்பங்களையும் துன்பங்களையும் உணர்கிறோம். என்று நம் மனம் "நான்"என்ற எண்ணத்தை விட்டு அகல்கிறதோ அன்று நம் வாழ்வு அன்னையிடம் சரணடைகிறது. நம் சரணாகதி பலித்தால், வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவரே பொறுப்பாகிறார். ஆனால் அது அவ்வளவு எளிதன்று.

நீங்கள் "நான் அகந்தையை விட்டு விட்டேன்" என்று உறுதியாக இருக்கும் பொது கூட புறச் செயல்கள் இவ்வளவு நாள் மறைந்திருந்த அகந்தையை வெளியே கொண்டு வரலாம். ஆகையால் நமக்குள் ஒளிந்திருக்கும் அகந்தையை விட மிகுந்த உறுதிப்பாடும், அன்னையின் மீது அசையாத நம்பிக்கையும், Practice ம் வேண்டும். அப்படிஎன்றால் அகந்தையில்  இருந்து விடுபட என்ன வழி? அன்னையே அதற்கு வழியையும் கூறுகிறார்.

 .... one gives oneself simply, totally, unconditionally, if one surrendersto the Supreme Reality, to the Supreme Will, to the Supreme Being, putting oneself entirely in His hands, in an upsurge of the whole being and all the elements of the being, without calculating, that would be the swiftest and the most radical way to get rid of the ego. People will say that it is difficult to do it,but at least a warmth is there, an ardour, an enthusiasm, alight,a beauty,an ardent and creative life. 

... you are advised to open only to the Divine and to receive only the divine force to the exclusion of everything else. This diminishes all difficulties almost entirely.

- The Mother


துன்பத்தை நினைத்து வருந்தாமல், அதற்குக் காரணமான அகந்தையை விட்டு, அன்னை கூறும் இந்த வார்த்தைகளை நம்பிக்கையாகக் கொண்டு வாழ்வில் அன்னையை கொண்டு வருவோம். வளமோடு வாழ்வோம்.

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள், இறைவன், அகங்காரத்தை (Ego) விட செய்ய வேண்டியது என்ன ?


Wednesday, 23 October 2013

இறைவன் நாம் விரும்புவதை சில நேரங்களில் கொடுப்பதில்லையா?

ஸ்ரீ அன்னையின் விளக்கங்கள்


நமது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறுகிறதா? நமது பிரார்த்தனைகளில் சிலவற்றை ஏன் இறைவன் நிறைவேற்றுவதில்லை ? நமது வாழ்வில் நிகழும் பல நிகழ்வுகளை இதற்கு உதாரணமாகக் காணலாம். நமது எண்ணம் அல்லது பிரார்த்தனைகள் நிறைவேறுவது அல்லது நிறைவேறாமல் போவதற்குப் பின்னால் இறைவனின் எண்ணம் நிச்சயமாக உண்டு. நமக்குத் தேவை பொறுமையும், அமைதியான மனமும் என்கிறார் அன்னை. அன்னையின் அருள் எப்போதும் நமது உண்மையான பிரார்த்தனைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறது. அந்த அருள் நமக்கு கிடைக்க, தடைகளை உண்டாக்குவதும் நாமே,  நமது எண்ணங்களே.

உதாரணமாக, வேலை தேடும் ஒருவர் பல இடங்களில் விண்ணப்பம் செய்கிறார்.  ஆனால் அவர் தம் மனதில் ஒரு குறிப்பிட்ட கம்பெனியில்தான் தனக்கு வேலை வேண்டும், அதுவும் இந்தப் பதவிதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், அன்னையோ அவருக்கு அதைவிட ஒரு பெரிய கம்பெனியில், ஒரு மிகப் பெரிய பதவியை அளிக்க  விரும்பினால், இறைவனின் அந்த எண்ணத்திற்கு, அருளுக்கு இங்கு பெரும் தடையாக இருப்பவர் யார், அந்த அன்பரேதான். அவருடைய பிடிவாதமான மனமும்தான். தனக்கு வரும் அருளை தாமதப்படுத்திவதும் அவரது மனம்தான். ஆனால் வெளியில், கடவுளின் அருள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை என்று விரக்தியாகக் கூறிக்கொண்டு இருப்பார். இறைவனிடம் பிரார்த்தனை செய்து விட்டு, நமது விருப்பங்களில் இருந்து விலகுவதுதான், இறைஅருளைப் பெற சிறந்த வழி என்று நாம் இங்கு கொள்ளலாம்.

இறைவன் நாம் விரும்புவதை சில நேரங்களில் கொடுப்பதில்லையா?  என்று அன்னையிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு,  அவர் ஒரு சிறிய நிகழ்ச்சியை உதாரணமாகக் கொண்டு அதன் மூலம் கூறும் அழகான பதிலை கீழே காணலாம்.

Question : Does not the Divine sometimes give what you desire?

Mother's Answer:


Certainly. There was a young man who wanted to do Yoga. But he had a mean and cruel father who troubled him very much and tried to prevent him from doing it. He wished ardently to be free from the father’s interference. Soon the father fell ill and very seriously; he was about to die. Whereupon the other side of the boy’s nature rose up and he loudly bewailed the misfortune and cried, “Oh, my poor father is so ill! It is such a sad thing. Alas, what shall I do?” The father got well. The young man rejoiced and turned once more to Yoga. And the father also began again to oppose and torment him with redoubled violence. The son tore his hair in despair and cried, “Now my father stands in my way more than ever.” The whole thing is to know exactly what one wants. The Divine always brings with it perfect calm and peace. A certain class of Bhaktas, it is true, present generally a very different picture; they jump about and cry and laugh and sing, in a fit of devotion, as they say. But in reality such people do not live in the Divine. They live largely in the vital world. You say that even Ramakrishna had periods of emotional excitement and would go about with hands uplifted, singing and dancing? The truth of the matter is this. The movement in the inner being may be perfect; but it puts you in a certain condition of receptivity to forces that fill you with intense emotional excitement, if your external being is weak or untransformed. Where the external being offers resistance to the inner being or cannot hold the entirety of the Ananda, there is this confusion and anarchy in expression. You must have a strong body and strong nerves. You must have a strong basis of equanimity in your external being. If you have this basis, you can contain a world of emotion and yet not have to scream it out. This does not mean that you cannot express your emotion, but you can express it in a beautiful harmonious way. To weep or scream or dance about is always a proof of weakness, either of the vital or the mental or the physical nature; for on all these levels the activity is for self- satisfaction. One who dances and jumps and screams has the feeling that he is somehow very unusual in his excitement; and his vital nature takes great pleasure in that. If you have to bear the pressure of the Divine Descent, you must be very strong and powerful, otherwise you would be shaken to pieces. Some persons ask, “Why has not the Divine come yet?” Because you are not ready. If a little drop makes you sing and dance and scream, what would happen if the whole thing came down? Therefore do we say to people who have not a strong and firm and capacious basis in the body and the vital and the mind, “Do not pull”, meaning “Do not try to pull at the forces of the Divine, but wait in peace and calmness.” For they would not be able to bear the descent. But to those who possess the necessary basis and foundation we say, on the contrary, “Aspire and draw.” For they would be able to receive and yet not be upset by the forces descending from the Divine.

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்

Tuesday, 22 October 2013

கற்பனைகள் பலிக்கும்

நம்மில் பலர், "இது எனது சிறு வயது முதலான கனவு. இன்றுதான் பலித்தது " என்று கூறக் கேட்டுள்ளோம். அன்னை கூட தனது குழந்தைப் பருவத்தில்  கற்பனை செய்யும் பழக்கம் தனக்கு இருந்ததாகக் கூறுகிறார். "எனக்கு நானே கதை கூறிக் கொள்வேன்" என்கிறார் அன்னை. ஆனால் இவைகள் யாவும் வெறும் கற்பனைகள் இல்லை என்பதுதான் உண்மை. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு சூட்சும உலகத்தைக் காட்டுகிறார் அவர். இந்த உண்மையான உலகத்தில் நடப்பவையாவும் சூட்சும உலகத்தில் நடந்த பின்னரே இங்கு நடப்பதாக கூறுகிறார் அன்னை. இந்த உலகத்தில் நாமும் தங்கி நம் கற்பனையினால் புதியவற்றை சிருஷ்டிக்கலாம்.

The imagination is really the power of mental formation. When this power is put at the service of the Divine, it is not only formative but also creative. There is, however, no such thing as an unreal formation, because every image is a reality on the mental plane.

-The Mother


சரி. இந்த உலகத்தில் நாம் எப்படி நுழைவது? கற்பனையின் மூலமாக நுழையலாம். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அல்லது எப்படி மாற வேண்டும் நினைக்கிறோமோ அவற்றுக்கு கற்பனையின் மூலம் உருவம் கொடுத்து, அவற்றை அன்னையின் அருளுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமது Positive Attitude - நேர்மறை சிந்தனை, ஆக்கபூர்வமான செயல்களை சிந்திக்க நம்மை வழிநடத்தும். ஸ்ரீ அன்னையின் அருள் அதனை இந்த நனவுலகில் நிறைவு பெற வழி வகை செய்யும். அன்னையின் அருள் கர்மத்தினை விலக்கும் சக்தி வாய்ந்ததன் காரணமாக, நமது கர்மபலன் நாம் வெற்றி பெறுவதை தடுக்க முற்பட்டாலும், அன்னையின் அருளால் தடைகள் விலகி, நாம் சூட்சும உலகில் கண்ட வெற்றியை இப்பூவுலகில் பெறலாம்.

இதைப்  பற்றி Power of Imagination என்ற கட்டுரையில் அன்னை கூறியுள்ள கருத்துக்களைக் காண்போம்.வாழ்வில் நமது யோகத்திற்கும் இந்த கற்பனாசக்தியின் உதவியை நாடலாம். இந்த சக்தியை பயன்படுத்துவது என்பது , கத்தியை பயன்படுத்துவதைப் போல என்பதால் அதனை கவனமாக இறைவனின் துணையுடன் கையாள வேண்டும் என்று கூறுகிறார் அன்னை.

The power of mental formation is most useful in Yoga also; when the mind is put in communication with the Divine Will, the supramental Truth begins to descend through the layers intervening between the mind and the highest Light and if, on reaching the mind, it finds there the power of making forms it easily becomes embodied and stays as a creative force in you. Therefore I say to you never be dejected and disappointed but let your imagination be always hopeful and joyously plastic to the stress of the higher Truth, so that the latter may find you full of the necessary formations to hold its creative light. The imagination is like a knife which may be used for good or evil purposes. If you always dwell in the idea and feeling that you are going to be transformed, then you will help the process of the Yoga.

-The MOTHER.

நமது நியாயமான பிரார்த்தனைகள் பலிக்கவும் கற்பனாசக்தியின் உதவியை நாடலாம். திரு கர்மயோகி அவர்கள் கூறியுள்ள சில வழிமுறைகளை கீழ்காணும் link-ல் காணலாம்.

 Visualisation Method - கற்பனை சக்தியினால் பிரச்சனைகளைத் தீர்த்தல் 

 

 

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother 

Monday, 21 October 2013

இன்றைய சாவித்திரி

ஸ்ரீ அரவிந்தரின் சாவித்திரியில் இருந்து...

 
As in a mystic and dynamic dance
A priestess of immaculate ecstasies
Inspired and ruled from Truth's revealing vault
Moves in some prophet cavern of the gods,
A heart of silence in the hands of joy
Inhabited with rich creative beats
A body like a parable of dawn
That seemed a niche for veiled divinity
Or golden temple-door to things beyond.
Immortal rhythms swayed in her time-born steps;
Her look, her smile awoke celestial sense
Even in earth-stuff, and their intense delight
Poured a supernal beauty on men's lives.

சத்திய ஜீவிய உலகிற்கு அன்பர்களை வரவேற்கிறோம்

சத்திய ஜீவியம் என்பது என்ன?

சத்தியத்தை முதன்மையாகக் கொண்ட ஸ்ரீ அன்னையின் சக்தியே சத்திய ஜீவிய சக்தி என்பதாகும். ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னையின் பெரும் யோகத்தினால், மனிதனை இயல்பான வாழ்வின் சட்டங்களில் இருந்து விடுவிப்பதற்காக Feb 29, 1956 ஆம் வருடம் இந்த காலத்தைக் கடந்த சத்திய ஜீவிய சக்தி இப்பூவுலகில் இறங்கியது. சத்தியம் எங்கு உள்ளதோ இச்சக்தி அங்கு பலிக்கிறது. இது வாழ்வின் பாவம், புண்ணியம் ஆகிய கர்ம பலன்களையும், முக்காலங்களையும் கடந்து பலிக்கும் அபரிமிதமான சக்தி கொண்டதாகும்.

இந்த வலைப்பூவில் சத்திய ஜீவியத்தை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்களையும், நமது வாழ்வில் அதனை செயல்படுத்த நாம் செய்ய வேன்டுவன பற்றியும் பார்ப்போம்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய:

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.