Once one begins to live in the presence of the Divine, one does not question any longer. It carries its own certitude—one feels, one knows, and it becomes impossible to question. One lives in the presence of the Divine and it is for you an absolute fact. Till then you ask, because you do not have the experience, but once you have the experience, it has such an authority that it is
One who says, “I think I live in the presence of the Divine but I am not sure”, has not had the true experience, for as soon as one has the inner shock of this experience, no more questioning is possible. It is like those who ask, “What is the divine Will?” As long as you have not glimpsed this Will, you cannot know. One may have an idea of it through deduction, inference, etc., but once you have felt the precise contact with the divine Will, this too is not disputable any longer—you know. -Questions and Answers - The Mother நாம் செய்யும் செயலில் அன்னை வெளிப்படும் விதம் பற்றி கர்மயோகி அவர்கள் ..... ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது. ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பல தரப்பட்டது. ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை என பல வகைகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் தனித்தனியானது போல் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. கடிதம் எழுதுவது என்பது சொந்த வேலையில் ஒரு பகுதியானாலும், அதுவே ஒரு தனித்தன்மையுடைய முழு வேலை போலிருக்கிறது. குளிப்பது என்பதை ஒரு குறிப்பிட்ட சிறு வேலை எனலாம். அன்றாட வாழ்வில் அதுபோன்ற பல்வேறு வேலைகள் உள்ளன. சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலையிடுதல், கடைக்குப் போவது, பொழுதுபோக்கு, புதிய துணி வாங்குவது, விசேஷம், பயணம் ஆகியவை அத்தன்மையானவை. நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும். -கர்மயோகி அவர்களின் பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் என்ற கட்டுரையில் இருந்து .. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Thursday, 23 April 2015
Message of the Day - Experience the Divine presence - செய்யும் செயல்களில் அன்னை வெளிப்படுவது எவ்வாறு?
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment