"Sincere devotion is much more effective than the Ganges water."
A devotion that keeps concentrated and silent in the depths of the heart but manifests in acts of service and obedience, is more powerful, more true, more divine, than any shouting and weeping devotion. -Words of the Mother - The Mother அன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை: (1) நம்பிக்கை, (2) பக்தி, (3) இடையறாத தெய்வச் சிந்தனை. ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை. உதாரணமாக ‘திருமணம் செய்ய வேண்டும்’ என முடிவெடுக்கும்போது, ‘இந்தத் திருமணம் எவ்விதத் தடையுமின்றி இனிதே முடிய வேண்டும்’என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து, ‘இந்தக் கோரிக்கையை அன்னை ஏற்றுக் கொண்டு, அதனை நிச்சயம் நிறைவேற்றிவைப்பார்’ என்ற உறுதிப்பாட்டை அடைவது நம்பிக்கையாகும். இந்த உறுதிப்பாட்டைக் குலைக்கும் விதத்தில் அவ்வப்போது சந்தேகங்கள் எழும். அந்தச் சந்தேகங்களுக்கு இடம் கொடாமல், ‘அவை ஏன் ஏற்பட்டன?’ என்பதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை அறவே நீக்கிவிட வேண்டும். அவற்றை ஒவ்வொரு தடவையும் நெஞ்சை விட்டு நீக்கும்போது, அந்த உறுதிப்பாடு மேலும் மேலும் வளர்ந்து நம்பிக்கையை முழுமையாக்கிவிடுகின்றது. முதல் கட்டத்தைத் தொடர்ந்து பல கட்டங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு கட்டத்தையும் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அன்னையின் திருவருளைத் துணையாகக் கொண்டு செயல்படுவது பக்தியாகும். ‘பஜ்’ என்ற சொல்லிலிருந்து வந்தது ‘பக்தி'. ‘பஜ்’ என்பது ‘பணிதல்’ எனப் பொருள்படும். ஆகவே ‘பக்தி’ எனப்படுவது ‘பணிந்து செயல்படுதல்’ என்பதைக் குறிக்கும். அன்னையைப் பணிந்து செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பக்தியை வளர்க்கும் செயல்களாகும். ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் திருவருளின் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே அவை ஏற்படுவதற்குக் காரணமாகும். இந்தக் காரணத்தை உணர்ந்தவுடன், ‘நான் செய்தது தவறு’ என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்து அழிந்துபோகும் நிலை ஏற்படும். அதற்கு மாறாக, மேற்கூறிய முறைப்படி சிக்கல்களை விலக்கிக் கொண்டால், சந்தேகமும் எழாது; நம்பிக்கையும் தொடர்ந்து உறுதிப்பட்டுவிடும். பக்தியினால் நம்பிக்கை மேன்மேலும் வலுவடைந்து, முழுமையாகிவிடுகின்றது. ஆகவே, நம்பிக்கையும், பக்தியும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை என்பதை நாம் உணர வேண்டும். -கர்மயோகி அவர்களின் நம்பிக்கை, பக்தி, தெய்வச் சிந்தனை என்ற கட்டுரையில் இருந்து .. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 28 April 2015
Message of the Day: Devotion - பக்தி
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog

- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment