இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 30 April 2015

Message of the Day : அருள் கர்மத்தை கரைக்கும் - Divine Grace completely contradicts Karma

Question : You have said here that we are “tied to the chain of Karma”, but then sometimes when the Divine Grace acts, that contradicts...

Mother says: Completely, the Divine Grace completely contradicts Karma; you know, It makes it melt away like butter that’s put in the sun.

An example may be given that is
extremely limited, very small, but which  makes you understand things very well: a stone falls quite mechanically; say, a tile falls; if it gets loose, it will fall, won’t it? But if there comes,
for example, a vital or mental determinism from someone who passes by and does not want it to fall and puts his hand out, it will fall on his hand, but it will not fall on the ground. So he has changed the destiny of this stone or tile. It is another determinism that has come in, and instead of the stone falling on the head of someone, it falls upon the hand and it will not
kill anybody. This is an intervention from another plane, from a conscious will that enters into the more or less unconscious mechanism.

Image Courtesy :www.mirapuri-enterprises.com



-Words of the Mother - The Mother

‘தலைவிதி மாற்ற முடியாத ஒன்றன்று; கர்மவினையை விட்டு ஒழிக்கலாம். அதன் பிடியிலிருந்து தப்ப முடியும்’ என்று அன்னை கூறுகின்றார்.
அன்னை என்பது பேரொளி; இறைவனின் சக்தி; சக்தி மிக்க ஒளி. ஒருவர் அன்னையை மனத்தில் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொண்டவுடன், அப்பேரொளியின் ஒரு பொறி அவருடைய ஆன்மாவை வந்தடைந்து, அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றது. இதை அன்னையே சொல்லி இருக்கின்றார்.

கர்மப் பலனை அனுபவித்தே தீர வேண்டும் என்பது முக்காலும் உண்மை. அன்னையின் அருள் அக்கருமப் பலனை முழுவதுமாகக் கரைத்துவிடும் என்பது அன்னையின் அன்பர்களுக்குக் கிடைத்திருக்கும் அனுபவபூர்வமான புதிய உண்மை. அன்னையைத் தெய்வமாக உணர்ந்து ஏற்றுக்கொள்பவன், கடவுள்களை எல்லாம் சிருஷ்டித்த பரம்பொருளை தன் ஆத்மாவில் பிரதிஷ்டை செய்கின்றான். பரம்பொருளான இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன். காலத்தால் ஏற்பட்ட கர்மாவுக்கும் அப்பாற்பட்டவன். பரம்பொருளின் ஆதீனத்தில் கர்மம் கரைந்து போய்விடுகின்றது

பாவத்தைச் செய்த பின்பு நாம் அதை விட்டாலும், அதன் பலன் நம்மைத் தண்டிக்காமல் விடாது. அதுவே ‘கர்ம வினை’எனப்படுவது. நாம் பாவத்தை விட்ட பின்பு, பாவத்தால் தொடரும் வினையை அழிக்க வல்லது அன்னையின் அருள். அவ்வகையில் துறவறத்தின் சிறப்பை இல்லறத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பது அன்னையின் வழி. இப்பெருமையும், திறமையும், கனிவும் நம் மரபில் இல்லாத சிறப்புகளின் பிறப்புகளாகும்.

-கர்மயோகி அவர்களின் . விதிக்கு விதி செய்யும் அன்னை என்ற கட்டுரையில் இருந்து ..

Tuesday, 28 April 2015

Message of the Day: Devotion - பக்தி




"Sincere devotion is much more effective than the Ganges water."

 Devotion: modest and fragrant, it gives itself without seeking for anything in return.

Image Courtesy :www.mirapuri-enterprises.com



A devotion that keeps concentrated and silent in the depths of the heart but manifests in acts of service and obedience, is more powerful, more true, more divine, than any shouting and weeping devotion.

-Words of the Mother - The Mother





அன்பர்களுக்குத் தேவையானவை மூன்று. அவை: (1) நம்பிக்கை, (2) பக்தி, (3) இடையறாத தெய்வச் சிந்தனை. ‘நாம் வேண்டும் என்று கேட்டதைத் தவறாமல் கொடுக்கும் ஆற்றலுடையது அன்னையின் அருள்’ என உறுதியாக நம்புவது நம்பிக்கை. எந்தக் காரியத்தைச் செய்தாலும் அன்னையை மனத்தால் பணிந்து செய்வது பக்தி. மனத்தை எப்பொழுதும் அன்னையிடம் பதித்து வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை.


உதாரணமாக ‘திருமணம் செய்ய வேண்டும்’ என முடிவெடுக்கும்போது, ‘இந்தத் திருமணம் எவ்விதத் தடையுமின்றி இனிதே முடிய வேண்டும்’என்று அன்னையிடம் பிரார்த்தனை செய்து, ‘இந்தக் கோரிக்கையை அன்னை ஏற்றுக் கொண்டு, அதனை நிச்சயம் நிறைவேற்றிவைப்பார்’ என்ற உறுதிப்பாட்டை அடைவது நம்பிக்கையாகும். இந்த உறுதிப்பாட்டைக் குலைக்கும் விதத்தில் அவ்வப்போது சந்தேகங்கள் எழும். அந்தச் சந்தேகங்களுக்கு இடம் கொடாமல், ‘அவை ஏன் ஏற்பட்டன?’ என்பதற்கான காரணங்களை அறிந்து, அவற்றை அறவே நீக்கிவிட வேண்டும். அவற்றை ஒவ்வொரு தடவையும் நெஞ்சை விட்டு நீக்கும்போது, அந்த உறுதிப்பாடு மேலும் மேலும் வளர்ந்து நம்பிக்கையை முழுமையாக்கிவிடுகின்றது.

முதல் கட்டத்தைத் தொடர்ந்து பல கட்டங்கள் வருகின்றன என்பதைப் பார்த்தோம். ஒவ்வொரு கட்டத்தையும் தொடங்கும்போதும், முடிக்கும்போதும் அன்னையின் திருவருளைத் துணையாகக் கொண்டு செயல்படுவது பக்தியாகும். ‘பஜ்’ என்ற சொல்லிலிருந்து வந்தது ‘பக்தி'. ‘பஜ்’ என்பது ‘பணிதல்’ எனப் பொருள்படும். ஆகவே ‘பக்தி’ எனப்படுவது ‘பணிந்து செயல்படுதல்’ என்பதைக் குறிக்கும். அன்னையைப் பணிந்து செய்யப்படுகின்ற செயல்கள் அனைத்தும் பக்தியை வளர்க்கும் செயல்களாகும்.

ஒவ்வொரு கட்டத்திலும் தடைகளோ அல்லது சிக்கல்களோ ஏற்படலாம். ஏதாவது ஒரு கட்டத்தில் திருவருளின் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே அவை ஏற்படுவதற்குக் காரணமாகும். இந்தக் காரணத்தை உணர்ந்தவுடன், ‘நான் செய்தது தவறு’ என்று மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்து அழிந்துபோகும் நிலை ஏற்படும். அதற்கு மாறாக, மேற்கூறிய முறைப்படி சிக்கல்களை விலக்கிக் கொண்டால், சந்தேகமும் எழாது; நம்பிக்கையும் தொடர்ந்து உறுதிப்பட்டுவிடும்.

பக்தியினால் நம்பிக்கை மேன்மேலும் வலுவடைந்து, முழுமையாகிவிடுகின்றது. ஆகவே, நம்பிக்கையும், பக்தியும் ஒன்றுக்கொன்று இணை பிரியாதவை என்பதை நாம் உணர வேண்டும். 

-கர்மயோகி அவர்களின்  நம்பிக்கை, பக்தி, தெய்வச் சிந்தனை என்ற கட்டுரையில் இருந்து ..

Thursday, 23 April 2015

Message of the Day - Experience the Divine presence - செய்யும் செயல்களில் அன்னை வெளிப்படுவது எவ்வாறு?




Is there an experience which proves that one is living in
the presence of the Divine?

Once one begins to live in the presence of the Divine, one does not question any longer. It carries its own certitude—one feels, one knows, and it becomes impossible to question. One lives in the presence of the Divine and it is for you an absolute fact. Till then you ask, because you do not have the experience, but once you have the experience, it has such an authority that it is
indisputable.
Image Courtesy :www.mirapuri-enterprises.com

One who says, “I think I live in the presence of the Divine but I am not sure”, has not had the true experience, for as soon as one has the inner shock of this experience, no more questioning is possible. It is like those who ask, “What is the divine Will?” As long as you have not glimpsed this Will, you cannot know. One may have an idea of it through deduction, inference, etc., but once you have felt the precise contact with the divine Will, this too is not disputable any longer—you know.

-Questions and Answers - The Mother


நாம் செய்யும் செயலில் அன்னை வெளிப்படும் விதம் பற்றி கர்மயோகி அவர்கள் .....

ஒருவர் அன்னையை நாள் முழுவதும் நினைவுகூர்ந்தால் அவர் அகவாழ்வு ஒளி பெறும்; சிறக்கும். ஆனால் இக்காரணத்தாலேயே அன்னை செயல்பட ஆரம்பித்துவிடமாட்டார். ஏராளமாகப் படிக்கும் பையனுக்கு அறிவு அதிகமாகும். ஆனால் அப்படிப்பட்ட படிப்பால் ஒரு பட்டத்தை எடுத்துவிட முடியாது. பட்டம் பெற அதற்குரிய புத்தகங்களை ஆழ்ந்து பயில வேண்டும். அதே போல் அன்னையை இடைவிடாது நினைத்தால் மனநிலையை உயர்த்துமே தவிர, எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் அன்னையை வெளிப்படுத்த உதவாது.

ஒரு செயலில் அன்னை வெளிப்பட வேண்டுமானால், அச்செயல் அன்னையின் சக்தியால் நிரம்பி வழிய வேண்டும். நம் வாழ்வு பல தரப்பட்டது. ஆபீஸ் வேலை, வீட்டு வேலை, சொந்த வேலை என பல வகைகளாகப் பிரிந்து, ஒவ்வொன்றும் தனித்தனியானது போல் தோன்றும் அளவுக்கு அமைந்துள்ளன. ஒவ்வொரு வேலையிலும் பல பகுதிகள் உள்ளன. கடிதம் எழுதுவது என்பது சொந்த வேலையில் ஒரு பகுதியானாலும், அதுவே ஒரு தனித்தன்மையுடைய முழு வேலை போலிருக்கிறது. குளிப்பது என்பதை ஒரு குறிப்பிட்ட சிறு வேலை எனலாம். அன்றாட வாழ்வில் அதுபோன்ற பல்வேறு வேலைகள் உள்ளன. சாப்பிடுதல், குளித்தல், தூங்குதல், படித்தல், விருந்தினரை வரவேற்றல், நட்பு, உறவு, வேலையிடுதல், கடைக்குப் போவது, பொழுதுபோக்கு, புதிய துணி வாங்குவது, விசேஷம், பயணம் ஆகியவை அத்தன்மையானவை.

நாம் எடுத்துக்கொண்ட செயலின் எல்லாச் சிறு பகுதிகளிலும் அன்னையை நினைவுகூர்ந்தால் அன்னை அச்செயலில் வெளிப்படுவார். கடைக்குப் போவதை ஒரு முழுக் காரியமாகக் கொண்டு இந்தச் சோதனையைச் செய்யலாம். கடைக்குப் போவதுடன் தொடர்புள்ள எல்லாச் சிறு செயல்களிலும் அன்னையை நினைத்துச் செயல்பட்டால், போய் வந்தவுடன் அன்னை அச்செயல் முழுவதுமாகப் புதுமையை நிரப்பித் தம் முத்திரையிட்டது தெரியும்.
 

-கர்மயோகி அவர்களின் பக்தனின் வாழ்வில் அன்னையின் பிரத்யட்சப் பலன் என்ற கட்டுரையில் இருந்து ..

Tuesday, 21 April 2015

Message of the Day: Ignorance is not an excuse - நம் அறியாமை எப்படியெல்லாம் வெளிப்படுகிறது?




For, as I have said, there is not a single person who can stand before the Lord and tell him: “I have never made a mistake.”


And when I speak of making a mistake, ignorance is not an excuse; for whether you touch the fire through ignorance or knowing it, the difference is rather in favour of the stupidity of touching it when one knows, for one can take precautions. But when one touches the fire through ignorance, without knowing, one burns oneself completely. And then one can’t tell Nature: “Oh! I should not have been burnt, for I did not know that it burnt.” It burns, nobody will listen to you!
-Questions and Answers - The Mother

சத்தியஜீவியம் அறியாமையை விலக்காது. அதனுள் ஊடுருவிச் சென்று அறியாமையை அறிவாக மாற்ற முயலும்.
நாம் அடிக்கடி அறியாமையால் செயல்படுகிறோம் என்ற தெளிவே உயர்ந்த அறிவுடைமை.
அறிவுடைமையை விளக்கியது போல் அறியாமையையும் விளக்கலாம். 

அறியாமை:
1. ஒரு பொருளின் தன்மை என்ன என்று தெரியாமல் அதை வேறொன்றாகக் கருதி அதை நம்புவது.
2. தனக்குத் திறமையில்லாத விஷயத்தில் ஒரு காரியத்தைச் செய்ய முற்படுதல்.
3. ஒரு வேலைக்குரியதில் முக்கியமான ஒன்றிரண்டு குறையாக இருக்கும்பொழுது, அவ்வேலையை ஆரம்பிப்பது.
4. தன் உடலின் திறமையை அறியாதது.
5. தன் திறமையின் வரையறையை அறியாதது.
6. இரு விஷயங்களிடையே இல்லாத தொடர்பை இருப்பதாகக் கொள்வது.
7. இரு விஷயங்களிடையே உள்ள தொடர்பை அறியாமல் செயல்படுவது.
8. தான் வெற்றி பெறாத விஷயத்தில் மற்றவருக்குப் புத்திமதி சொல்வது.
9. பொதுவிதி குறிப்பான இடத்தில் செல்லும் என நினைப்பது.
10. ஒரு இடத்தில் பலித்ததால், எல்லா இடத்திலும் பலிக்கும் எனக் கருதுவது.
11. தோற்றத்தை விஷயமாகக் கருதுவது.
12. தோற்றத்திலுள்ள அறிவைக் கொண்டு விஷயத்தைப், பூர்த்தி செய்ய முனைவது.
13. மற்றவருக்கு நாம் செய்யப் பிரியப்படாததை அடுத்தவர் நமக்குச் செய்வார் என நினைப்பது.
14. பெரிய இரகஸ்யத்தை சிறிய உறவை நம்பிக் கொடுப்பது.
15. எதிரி தன் உயர்வுக்குப் பாடுபடுவான் என்று எதிர்பார்ப்பது.
16. ஸ்தாபனத்தை இலட்சியத்திற்குப் பதிலாகப் போற்றுவது.
17. மனிதன் மாறுவான் என எதிர்பார்ப்பது.
18. வாழ்வில் நியாயம் கிடைக்கும் என்ற நினைவு.
19. நன்றியறிதலை எதிர்பார்ப்பது.
20. அறிவுடையவன் என்பதால், தான் நஷ்டப்படும்படி நடப்பான் என்று கருதுவது.
21. அதிர்ஷ்டம் வரும் எனக் காத்திருப்பது.
22. எப்படியாவது விஷயம் கூடிவரும் என்ற நம்பிக்கை.
23. அனுபவிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை மனிதன் விட்டு விடுவான் என்ற நம்பிக்கை.
24. சிரமப்பட்டுச் சாதிக்கவேண்டிய வாய்ப்பை மனிதன் வரவேற்பான் என்ற எண்ணம்.
25. தனக்கு அதிகாரமில்லாத இடத்தில் தன் கீழிருப்பவர்கள் விஸ்வாசமாக இருப்பார்கள் என்ற நினைவு.
26. பணம்,பதவியைத் தாண்டி பண்பு செயல்படும் என்ற அறிவு.
27. நம் குறையை பிறரறியார் என்ற கற்பனை.
28. விஷயம் என்று எழுந்தால் நண்பரும் எதிரியாவார், அனைவரும் எதிரியே என்று புரியாதது.
 

-கர்மயோகி அவர்களின் அறிவுடைமை என்ற கட்டுரையில் இருந்து ..

Monday, 20 April 2015

Message of the Day - Faith first, knowledge afterwards - அறிவு பெரியதா? நம்பிக்கை பெரியதா?




  • Faith is a certitude which is not necessarily based on experience and knowledge.
  • True faith does not depend on circumstances.

  • Faith in spiritual power must not depend on circumstances.

    A faith based on material proofs is not faith—it is a bargaining.

  • Faith first, knowledge afterwards.

- Words from the Mother

இன்றைய செய்தியை திரு. கர்மயோகி அவர்களின், உதாரணத்துடன் கூடிய விளக்க்கத்தின் மூலம் நாம் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஆன்மீக ஞானம் புத்தியில் பிரதிபலிப்பதால் ஏற்படும் உணர்வை நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என்கிறார் பகவான். புத்தியில் தெளிவாக இல்லாத ஒன்று, ஆன்மாவில் இருந்து அதன் பிரதிபலிப்பு புத்தியில் ஏற்பட்டால், அதன் விளைவான உணர்வை நம்பிக்கை என்று குறிப்பிடுகிறார்.

ஓர் உத்தியோகத்திற்கு விண்ணப்பம் செய்கிறார் ஒருவர். 12 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். M.A. பட்டத்தில் I Class வாங்கி விண்ணப்பித்துள்ளார். இன்டர்வியூவுக்குச் சென்றபொழுது 12 பேரைப் பார்க்கிறார். அவர்களில் M.A I Class பலர், II Class சிலர், M.Litt. ஒருவர், Ph.D. ஒருவர்.

இந்த உத்தியோகம் தனக்கில்லை என்று அறிவு தெளிவாகச் சொல்கிறது. ஆனால் உணர்வு மாறாக இருக்கிறது.

இன்டர்வியூ முடிந்தபொழுது Ph.D. வாங்கியவரைத் தேர்ந்தெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. அறிவு தான் பெற்ற ஜெயத்தைப் பறைசாற்றுகிறது. எனினும் உணர்வு அசையாமல் அறிவிக்கப்பட்டது முடிவானதில்லை என்று நினைக்கிறது. உணர்வின் நிலையை வெளியே சொல்லக் கூச்சமாயிருக்கிறது.

கல்லூரி வாயிலைக் கடக்கும்பொழுதும் உணர்வு தெளிவாக பழைய நிலையையே வற்புறுத்துகிறது. அறிவு அதை மூடநம்பிக்கை எனக் கேலி செய்கிறது.

 வெளியே வரும்பொழுது தன் பெயரைச் சொல்லி அழைப்பதைக் கேட்டுத் திரும்பினால் புரொபஸர் கூப்பிடுவதாகச் சொல்கிறார். அங்குச் சென்றால், "ஒருவரே தேவை. Ph.D. உள்ளவரை நியமித்துவிட்டோம். உங்கள் பதில் சிறப்பானதால் வேறோர் இடத்தை ஏற்படுத்தி உங்களையும் நியமிக்க முடிவு செய்திருக்கிறேன்'' என்று புரொபஸர் சொல்வதை அறிவு நம்புவதில்லை; உணர்வு பலித்து விட்டது. இதுவே நம்பிக்கை எனப்படுவது.

அறிவுக்குப் புலப்படாத ஒன்றை (தெளிவாக இல்லை என்று அறிவுக்குப் புலப்படுவதை) ஆன்ம ஞானம் புரிந்துகொண்டு, புத்தியின் வழியாக அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு என்று சொல்வதை நம்பிக்கை உணர்வு என்கிறோம். நம்பினோர் கைவிடப்படார் என்பதும் இதுவே.


-கர்மயோகி அவர்களின் தெய்வ நம்பிக்கை என்ற கட்டுரையில் இருந்து ..

Monday, 13 April 2015

Message of the Day: Real Happiness - உண்மையான மகிழ்ச்சி




What is real happiness and when does it come?

When one no longer feels any attraction for the other, false
happiness.

Real happiness is of divine origin; it is pure and unconditioned.

Ordinary happiness is of vital origin; it is impure and
depends on circumstances.

- More Answers from the Mother

  • அதிகமாகும் மகிழ்ச்சி யோகத்தில் முடியும். 
  • உடல் பெறும் மகிழ்ச்சி நன்றியறிதல். 

Thursday, 9 April 2015

Message of the Day: இப்பிறவியில் ஸ்ரீ அன்னை, அரவிந்தரின் அறிமுகம் ஏன் கிடைத்தது? What has brought me to the Mother’s feet?




ஸ்ரீஅரவிந்தர், இந்தப் பிறவியில் நமக்கு அன்னையின் அறிமுகமும் பக்தியும் கிடைத்ததற்கான காரணங்களை தனது நூலில் குறிப்பிடுகிறார். உங்களது ஆன்மாவின் விருப்பமும், அழைப்புமே அதற்கு காரணம் என்கிறார் பகவான். அன்பரின் கேள்விகளுக்கு அவர் கூறும் விளக்கத்தினை இங்கு காணுங்கள்.

(நாங்கள் செய்த எந்த புண்ணியம், இப்போது  இறைவனிடம் எங்களைக் கொண்டு சேர்த்தது?)
அன்பரின் கேள்வி : By what punya of ours has the Grace granted to us, mere humans, this rare privilege of coming here at the Divine’s Feet?
   ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:It is the call of your soul that brought you here and also some aspiration or connection with the Mother and myself in past lives.
 (முற்பிறவியில் நாங்கள் கொண்ட எந்த வகையான பக்தி, இந்தப் பிறவியில் அன்னையின் காலடிகளில் எங்களைக் கொண்டு சேர்த்தது?)
அன்பரின் கேள்வி :What sort of bhakti in my past lives has brought me to the
Mother’s feet?
ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:The aspiration for union with the Divine and perhaps also forthe descent of the Divine on the earth.
(இறைவனை அடைய வேண்டும், இறை ஒளி பூமிக்கு வர வேண்டும் என்ற உங்களின் விருப்பமே என்று பதிலளிக்கிறார் பகவான்.)
அடுத்ததாக, இறைவனை தரிசிக்க மக்கள் பிரயத்தனம் செய்கிறார்கள். அழுது புலம்புகிறார்கள். ஆனால், பெரு முயற்சிகள் இல்லாமல், நாங்கள் எவ்விதம் உங்களிடம் வந்தோம்? எது அழைத்து வந்தது என்று கேட்கிறார் ஒரு அன்பர்.
அன்பரின் கேள்வி : People make all sorts of effort to have God’s darshan; some
even weep and weep, yet they fail to obtain it.We don’t seem to have done very much, and yet we are here with
you. What has brought this about?

ஸ்ரீ அரவிந்தர் கூறும் விளக்கம்:There are many things that have brought it about—a connection in past lives with the Mother and myself, the development
of your nature in former births which made it possible for you to seek the Divine, bhakti in those lives bearing its fruit now— finally, the Divine Grace.
- Letters on the Mother - Book by Sri Bhagavan

Monday, 6 April 2015

Message of the Day : Psychic being - சைத்தியப்புருஷன்




Mother, what does “a well-developed psychic being”
mean exactly?

......Yes, I said how psychic beings develop slowly from the first divine spark to the formation of a completely constituted being, absolutely conscious and independent. So when we speak of a  well-developed being, a
well-developed psychic, we speak of a psychic being that has nearly reached the maximum point of its formation.
 மனம் சைத்தியப்புருஷனின்  வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்........
....if the psychic guides the mind, the mind will act in a psychic
way. Then it will be a remarkable mind, absolutely harmonious and doing the right thing in the right way.
உணர்வு சைத்தியப்புருஷனின்  வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்........
But the vital—it is the same thing, exactly the same phenomenon for the vital. The vital as it is at present is said to
be the cause of all the troubles and all the difficulties, the seat of the desires, passions, impulses, revolts, etc., etc. But if the vital is entirely surrendered to the psychic, it becomes a wonderful
instrument, full of enthusiasm, power, force of realisation, impetus, courage.
உடல் சைத்தியப்புருஷனின் வழிகாட்டுதலின் படி செயல்பட்டால்........
And then there remains the poor physical... The poor physical
being has been accused of all the misdeeds. In the days of old
it was always said that it was impossible, one could do nothing with something so inert, so obscure, so little receptive. But if it too was surrendered to the psychic it also would do the right thing in the right way, and then it would have a stability, a
quietude, an exactness in its movements which the other parts of the being don’t have, a precision in the execution which one can’t have without a body.
 - Questions and Answers 1955

ஆன்மா (soul) வளரும்பொழுது (soul) பரமாத்மாவின் துணையை நாடுகிறது.இதிலும் இரு பகுதிகளுண்டு. (Immutable and involved souls) அழியாத ஆத்மா, வளரும் ஆத்மா என அவை இரண்டாக இருக்கின்றன. ஆத்மாவுக்கும் இரு பகுதிகள் உண்டு.அழியாத ஆன்மா, வளரும் ஆன்மா என இரண்டாகும். 
 
படிப்பு அறிவை வளர்க்கிறது.ஆனால் திறமையைத் தருவதில்லை.அனுபவம் திறமையைத் தருகிறது.ஜீவாத்மா ஒளியையுடையது.சாட்சியாக இருப்பது, சைத்தியப் புருஷன் நம் உடலும், உணர்விலும், மனத்திலும் வெüப்பட்டு நம் எண்ணம், செயல்மூலமாக அனுபவம் பெற்று வளருகிறது. 

எண்ணமும், உணர்வும், செயலும் பிரகிருதி.பிரகிருதியின் ஆன்மா சைத்தியப்புருஷன்.எண்ணம்மூலம் மனத்தின் அறிவு வளர்கிறது.எண்ணத்திலுள்ள ஆன்மா சைத்தியப் புருஷன்.மனம் எண்ணத்தின் மூலம் அறிவு பெறும்பொழுது, மனத்திலுள்ள சைத்தியப்புருஷன் எண்ணத்தின் மூலம் ஆன்மீக அனுபவம் பெற்று வளர்கிறது.இந்த வளர்ந்த ஆத்மா அடுத்த பிறவியில் வளர்ச்சியைத் தொடர்கிறது
********
குழந்தை வளரும்பொழுது உடல், மனம் என இருபகுதிகள் உள்ளன.ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதாகவே தெரியவில்லை. அதேபோல் ஆத்மாவில் இருபகுதிகள் உள்ளன.அவை.

வளராத ஆன்மா - ஜீவாத்மா
வளரும் ஆன்மா - சைத்தியப் புருஷன்.

நாம் நல்லவர் என்றொருவரைச் சொன்னால், அவருடைய சைத்தியப்புருஷன் விழிப்பாக இருக்கிறது எனப் பொருள்.கவி, கலைஞன், எழுத்தாளர் போன்றவர்கட்கு சைத்தியப் புருஷன் முனைப்பாக இருக்கும்.ஜீவாத்மா நம் சொத்து போன்றது.சைத்தியப் புருஷன் அதனினின்று வரும் வருமானம் போன்றது.
சைத்தியப் புருஷனை அனைவரும் அறிவார்கள் என்றாலும், அதற்கு பகவான் வரும்வரை எவரும் முக்கியத்துவம் தரவில்லை. முதல் முதலில் ஜீவாத்மாவையும், சைத்தியப்புருஷனையும் பிரித்து உலகிற்கு எடுத்துக் கூறியது ஸ்ரீ அரவிந்தராகும்.அவரும் Life Divine எழுதும் பொழுது psychic என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் soul என்றே குறிப்பிட்டார்.அன்னை வந்தபிறகு soul என்ற சொல் Life Divineஇல் psychic என மாற்றப்பட்டது.

ஜீவாத்மா விடுதலை பெற்றால் அது மோட்சத்தை நாடும். சைத்தியப்புருஷன் விழிப்புற்றால் அது பூலோகச் சொர்க்கத்தை விழையும்.


  Article :  யோக வாழ்க்கை விளக்கம் IV -  Karmayogi Avl.

Thursday, 2 April 2015

Message of the Day: Yoga - யோகம்









There are three principal paths of yoga: the path of knowledge, the path of love and the path of works. So Sri Aurobindo says
that it depends on each case and person. Some people follow more easily the path of knowledge, others follow more easily
the path of love, of devotion, and others follow the path of works. He says that for the integral yoga the three must be
combined and with them something else, but that everybody can’t do everything at the same time and that there are people
who need to be exclusive and to choose one of the three paths first in order to be able to combine them all later.

 - The Mother, Questions and Answers 1953
ஸ்ரீ அரவிந்தரின் யோகம் ‘பூரண யோகம்’ எனப்படும். இதன் இலட்சியம் இறைவனின் பணியை உலகில் பூர்த்தி செய்வதாகும். அவ்வேலையைச் செய்வதற்கு விடுதலை அடைந்த ஆத்மா, உடலிலேயே தங்கியிருக்க வேண்டும். ஆகையால் இந்த யோகத்தில் ஆத்மாவுக்கு விடுதலை கொடுப்பதற்குமுன்பு, உடலுக்கும் மனத்துக்கும் பொய்ம்மையிலிருந்து பூரண விடுதலை அளிக்க வேண்டும். உடலையும் மனத்தையும் தூய்மைப் படுத்துவதன் வாயிலாக ஆத்மாவுக்குப் பிரகிருதியிலிருந்து விடுதலை கிடைக்க முயல்வது இந்த யோக நெறியின் நோக்கமாகும்.
- Karmayogi Avl.

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.