இன்றைய செய்தியில் அகந்தை(ego) எதனால் எழுகிறது, எது அகந்தை, அதனை அழிக்க நாம் செய்ய வேண்டியது ஆகிய பற்றிய சில செய்திகளை அன்னையின் எழுத்துக்களின் வாயிலாகக் காணலாம்.உண்மையான முன்னேற்றம் என்ன என்பதற்கும் அன்னை இங்கு பதில் கூறுகிறார். அகந்தை என்பது நாம் செய்யும் செயல்களில் இல்லை. ஆனால் அச்செயலை என்ன attitude உடன், எந்த மனப்பன்மையுடம் செய்கிறோம் என்பதிலேயே ego அடங்கியுள்ளது என்கிறார் அன்னை. Question: Sweet Mother, you have said: “Give up all personal seeking for comfort, satisfaction, enjoyment or happiness. Be only a burning fire for progress, take whatever comes to you as an aid to your progress and immediately make whatever progress is required.” Mother answers: Yes, that’s quite simple! It is very clear! Question: Yes, but if I want to progress in sports, for instance, then that would be a personal progress, wouldn’t it? Mother answers: What? In sports? No, the value of the will depends on your aim. If it is in order to be successful and earn a reputation for yourself and be better than others—all sorts of ideas like that —then that becomes something very egoistic, very personal and you won’t be able to progress—yes, you will make progress but Physical things are not necessarily more egoistic than mental or emotional ones. Far from it. They are often much less so. Egoism does not lie in that, egoism lies in the inner attitude. It does not depend on the field in which you are concentrated, it depends on the attitude you have. It does not depend on what you do, it depends on the way you do it.- The Mother, Questions and Answers அகந்தையை அழிக்க வேண்டும் என மனிதன் பேசலாம். அகந்தையெனில் என்ன, அதை அழிப்பது என்றால் என்ன என்று விவரமாகத் தெரிந்த பின் "இது எனக்கு வேண்டும்'' என்பது வழக்கம். விவரம் தெரியாதவர்கள் விருப்பமாகப் பேசலாம். கீழ்க்கண்ட மனநிலைகளைப் பார்ப்போம்.
எனக்குச் சப்பாத்தி பிடிக்கும் என்பது குணம். ஆனால் பிடிக்கும் என்றால், பிடிக்காது என்பது எழும். அவை நம் குணத்தை ஒரு அளவுக்குட்படுத்துவதால் ஆண்டவனைப் பிரதிபலிக்க முடியாது என்பதால் மறைமுகமாகக் குணம் அகந்தைக்குத் துணை செய்யும். அகந்தையைக் களைய முற்படும்பொழுது குணத்தைக் களைய வேண்டும். இந்நோக்கில் குணம் ஒரு வகையில் அகந்தையைச் சார்ந்ததாகும். நாம் அகந்தையை அழிக்க முற்பட்டால் நானே "அதைச் செய்கிறேன்' என அகந்தை முன் வந்து ஏற்றுக் கொள்கிறது. அதனால் நாம் ஏமாந்து போகிறோம். அகந்தையை அழிக்க நாம் முற்படும்பொழுது நாம் நம்மையறியாமல் அகந்தையை வலுப்படுத்துகிறோம். காலம் காலமாக நம்மை அகந்தை இதுபோல் ஏமாற்றுகிறது என்பது ஆன்மீக வரலாறு. இதற்கு என்ன வழி? ஸ்ரீ அரவிந்தம் ஒரு வழியைக் காட்டுகிறது. நம்முடைய பெரு முயற்சி தோல்வியடைந்தால் நாமே சரியில்லை எனப் பொருள் என்பதால், நம்மை நம்புவதைவிட அன்னைக்குச் சரணம் செய்து அன்னையை நம்புவது வழிவிடும் என்பது ஸ்ரீ அரவிந்த சித்தாந்தமாகும். நமக்கு வழி புலப்படாத பொழுது அன்னை கொடுப்பதை மட்டும் ஏற்கும் மனப்பான்மை சரணாகதியாகும். இது கடினம் என்கிறார் பகவான். Article : அகந்தை விரிவடைந்தால் - வாழ்க்கை சுருங்கும் ஆன்மா மலர்ந்தால் - வாழ்க்கை விரிவடையும் - Karmayogi Avl. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Thursday, 19 March 2015
Message of the Day: அகந்தையை அழிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment