Mother's Prayer to the Divine:
When you have nothing to do, you become restless, you run about, you meet friends, you take a walk, to speak only of the best; I am not referring to things that are obviously not to be done. Instead of that, sit down quietly before the sky, before the sea or under trees, whatever is possible and try to realise one of these things—to understand why you live, to learn how you must live, to ponder over what you want to do and what should be done, what is the best way of escaping from the ignorance and falsehood and pain in which you live. - Sri Mother On the Dhammapada நமக்கு முடியாத நேரம், தெரியாத நேரம் இயலாமையால் சும்மா இருக்கிறோம். அப்படிச் சும்மா இருக்கும்பொழுது அன்னை அபரிமிதமாகச் செயல்படும் நிகழ்ச்சிகள் ஏராளம். முடியாதபொழுது சும்மா இருப்பதைப் போல் முடிந்த பொழுதும் சும்மா இருப்பது கட்டுப்பாடு. அது முடிவான கட்டுப்பாடு. அது சரணாகதிக்குச் சமம். நாள் முழுவதும் நாம் வேலை செய்யாமலிருக்கும் நேரங்களில் மனம் அலைபாய்வதும், சலனம் அடைவதும், கவலைகளை ஊன்றிப் பார்த்து வளர்ப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடும். வேறு வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது, சுமார் 2, 3 நிமிஷம் மனம் நிலைத்து ஜெபம் செய்யப் பழகி, அது பலித்தால், நாம் சும்மா இருக்கும் நேரம் முழுவதையும் ஜெபத்தின் பிடியில் நாளாவட்டத்தில் கொண்டு வந்துவிடலாம். பொறுமையாக நாம் இதைச் செய்து வெற்றி பெற்று, 7 அல்லது 10 நாள் பலித்துவிட்டால், பின்னர் காலை, மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்தால் போதும். நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஜெபம் உயிருடன் மனத்தின் அடியில் இருக்கும். முடிந்தவரை ஜெபித்தால் நல்லது. முடியாவிட்டால் மனம் தானே ஜெபிக்கும். நாம ஜெபத்தால் பெரும்பலன் அடைய இது உதவும். மனம் மௌனமாக (silent repetition) ஜெபத்தை ஏற்றுக்கொண்டால் நாமஜெபத்தின் உச்சியை நாம் அடைவோம். - கர்மயோகி அவர்களின் யோக வாழ்க்கை விளக்கம், அன்பர்கள் வழிபாடு ஆகிய கட்டுரைகளில் இருந்து |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Monday, 9 March 2015
Message of the Day: செயலற்று இருக்கும் நேரம் என்ன செய்ய வேண்டும்?
Subscribe to:
Post Comments (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.
No comments:
Post a Comment