இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 10 March 2015

Message of the Day - அன்னை அரவிந்தர் புத்தகங்களைப் படிப்பதன் பலன்கள்



Sweet Mother, how should one choose one’s books?

It would be better to ask someone who knows. If you ask someone who, at least, has taste and some knowledge of literature, he won’t make you read badly written books. Now, if you want to read something which helps you from the spiritual point of view, that’s another matter, you must ask someone who has a spiritual realisation to help you.
- Questions and Answers

What Sri Aurobindos' represents in the worlds' history is not a teaching, not even a revelation; it is a decisive action direct from the Supreme .

- The Mother

அன்னை அரவிந்தர் நூல்களும்  ஒருவகையில் “அன்னை”யேயாகும். நம் வீட்டில் அவை இருப்பது அன்னையிருப்பது போலாகும். போட்டோவில், “நான் உயிருடன் இருக்கின்றேன்” என்று அன்னை கூறுவது போல், இந்த நூல்களில் அன்னை உயிருடன் இருக்கின்றார். படிப்பவர்க்கு அவர்கள் படிக்கும் முறைக்கேற்ப அன்னை தம்மை அளிக்கின்றார். எதுவும் முடியாதவரும் இந்நூல்களை வாங்கி வந்துவிட்டால், அடிக்கடி அவற்றை எடுத்து இரண்டு நிமிஷம் பார்ப்பதால் அதனுடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பேற்படும். மனதில் ஓர் எண்ணம் ஏற்பட்டால், உடனே ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்தால், நம் கருத்துக்குரிய விளக்கமோ, தெளிவோ ஏற்படும். ஒரு செல்வர் மனை வாங்கினார். அதைத் தொடர்ந்து மற்றொரு மனை விலைக்கு வந்தது. புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். முதல் சொல் “Go ahead”, “ஏற்றுக்கொள்” என்ற கருத்தில் இருந்தது; ஏற்றுக்கொண்டார்; பெரும் பலன் விளைந்தது. தினமும் 4, 5 முறை இப்பழக்கத்தைக் கைக்கொண்டால் புத்தகத்துடன் ஏற்படும் தொடர்பு அன்னையுடன் ஏற்படும் தொடர்பாக மாறும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒட்டியும், மனதில் எழும் எண்ணங்களை ஒட்டியும் புத்தகத்தைப் பார்க்கும் பழக்கம், நமக்கும் புத்தகத்திற்கும் தொடர்பேற்படுத்தி, ஒரு வகையில் படிக்கும் பலனை அளிக்கும்.
.....ஸ்ரீ அரவிந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் குறிப்பான சிறப்பு உண்டு. (Blessing Packet) அன்னையின் பிரசாதம் சக்தி வாய்ந்தது. மகளுக்குப் பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் ஆப்பரேஷன் தியேட்டரில் சிக்கலான நேரம். டாக்டர்கள் முயன்று பார்த்து, “இனி முடியாது. பிரசவம் தானே நடைபெறாது. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்தபொழுது, பெண்ணின் தாயார் கையில் பிரசாதமில்லாமல் தவித்துப்போனார். பிரசாதம் இல்லாவிட்டாலும் அன்னையைப் பற்றிய புத்தகம் வைத்திருந்தார். பெண்ணின் மார்பில் புத்தகத்தை வைத்துப் பிரார்த்தனை செய்தார். வெளியில் போய் ஆப்பரேஷனுக்குத் தயாராக டாக்டர்கள் திரும்பி வருவதற்குள் பிரசவம் ஆகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தர், அன்னை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.-

- கர்மயோகி அவர்களின்  கட்டுரைகளில் இருந்து










No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.