If you have the philosophic mind, you will ask yourself: “What do I call ‘myself’? Is it my body?—it changes all the time, it is never the same thing. "நான்" என்பது மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடலா ? இல்லை. Is it my feelings?—they change so often. "நான்" என்பது இடைவிடாமல் மாறும் நமது உணர்வுகளா? இல்லை. Is it my thoughts? —they are built and destroyed continuously. That is "நான்" என்பது இப்போழுது தோன்றி, உடனே அழியும் தன்மை கொண்ட நமது எண்ணங்களா? இல்லை. Where is the self? What is it that gives me this sense of continuity?” If you continue sincerely, you go back a few அப்படிஎன்றால் "நான்"என்பது என்ன? You continue to observe, you tell yourself: “It is my memory.” But even if one loses one’s memory, one would be oneself. நீங்கள் இன்னும் ஆழ்ந்து சிந்தித்தால், "நான்" என்பது எனது நினைவுகள் என்று கூறலாம். ஆனால் ஒருவருக்கு நினைவுகள் மறந்தாலும், அவர் அவரே. அப்படி என்றால் "நான்" என்பது எதைக் குறிக்கிறது. If one sincerely continues this profound search, there comes a moment when everything disappears and one single thing exists, that is the Divine, the divine Presence. உங்கள் தேடலை நீங்கள் தொடர்ந்தால், ஒரு சமயத்தில், இவை எல்லாம் மறைந்து, ஒன்று மட்டுமே இங்கு நிரந்தரமாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள், இறைவன் இருப்பதை அப்போதுதான் உணர்வீர்கள்.அப்போது சூரிய ஒளி பட்ட வெண்ணையைப் போல, எல்லாமே மறைந்து விடும், கரைந்து விடும். Everything disappears, dissolves, everything melts away like butter in the sunlight.... When one has made this discovery, one becomes aware that one was nothing but a bundle of habits. நீங்கள் இதைக் கண்டு தெளியும் போது, ஒன்றை புரிந்து கொள்வீர்கள், நாம் வெறும் பழக்கங்களால் ஆன ஒரு மூட்டைதான்என்று. உங்கள் ஒவ்வொருவரிலும் இதைப் போல நூற்றுக் கணக்கனான "நான்" கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் நூறு விதமாகப் பேசும் தன்மை உடையன. இன்று "நான் இப்படித்தான்" என்று நீங்கள் கூறுவது நாளை மாறிவிடும். நீங்கள் கூறும் "நான்" நிரந்தரமானது இல்லை. In everyone there are these hundreds and hundreds of “selves” who speak and in hundreds of completely different ways—“selves” unconscious, changing, fluid. The self which speaks today is not the same as yesterday’s; and if you look further, the self has disappeared. There is only one who remains. That is the Divine. இவ்வுலகில் ஒன்று மட்டுமே நிரந்தமானது, அதுவே இறை சக்தி. - The Mother, Questions and Answers 1953It is the only one that may be seen always the same. And unless you have gone so far... அன்னைக்குத் தோல்வியில்லை. அன்னையை வாழ்வில் ஏற்றுக் கொண்டவருக்குத் தோல்வி என்பதே கிடையாது என்பது ஒருவர் தன் வாழ்வில் கண்டவுடன், அன்னைக்குத் தோல்வியில்லை என்பதை மாற்றி, என் பிரார்த்தனைக்குத் தோல்வியில்லை, எனவே எனக்குத் தோல்வியில்லை என்கிறார். இதனால் நான்' முன்வருகிறது. அதன்பின் தோல்வி ஆரம்பமாகும். நான்' விலகிய இடங்களில் பிரச்னை வாராது. பிரார்த்தனை தேவையில்லை. Article : நான் என்ற கட்டுரையில்- Karmayogi Avl.நான்' என் வாழ்வில் நிரம்பியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்வதே உயர்ந்த அடக்க மனப்பான்மை. அது அன்னை போற்றும் மனப்பாங்கு. |
Labels
- Audio (2)
- Audio: Prayer and Meditation (1)
- Flowers and Messages (24)
- Message of the Day (214)
- Mother's View (4)
- video (1)
இன்றைய சிந்தனை
To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.
- The Mother
Get this widget
Tuesday, 31 March 2015
Message of the Day : "நான்" என்பது எது? - What do you call ‘myself’?
Thursday, 26 March 2015
Message of the Day: Prayer
O LOVE, divine Love, Thou fillest my whole being and over flowest on every side. I am Thyself even as Thou art I, and I see Thee in each being, each thing, from the soft breath of the passing breeze to the glorious sun which gives us light and is a symbol of Thee. O Thou whom I cannot understand, in the silence of the purest devotion I adore Thee. - The Mother, Questions and Answers |
Tuesday, 24 March 2015
Message of the Day : பணத்தாசை பிரச்சனை தரும்
It is a catastrophe to have money. It makes you stupid, it It is one of the greatest calamities in the world. Money is something one ought not to have until one no longer has desires. When one no longer has any desires, any attachments, when one has a consciousness vast as the earth, then one may have as much money as there is on the earth; it would be very good for everyone. But if one is not like that, all the money one has is like a curse upon him. This I could tell anyone at all to his face, even to the man who thinks that it is a merit to have become rich. It is a calamity and perhaps it is a disgrace, that is, it is an expression of a divine displeasure. - The Mother, Questions and Answers அன்னையை நாடுபவர்கட்கு மனத்தில் பணம் உட்பட எதுவுமிருக்காது.
தம்பி - அன்னைமூலமாக பணம் பெற விரும்பினால்...?
அண்ணன் - சுருக்கமாகச் சிலவற்றைக் கூறலாம்.
1. சமர்ப்பணத்தை முழுவதும் மனம் ஏற்கவேண்டும்.
2. நினைவு அன்னையிலும், செயல் உடலிலும் இருக்க வேண்டும்.
3. அன்னை விரும்பியவை எழும்பொழுது தவறாது செய்யவேண்டும்.
4. அன்னைக்குப் பிடிக்காததை எதுவானாலும் செய்யக் கூடாது.
5. பொய் மனதிலும் எழக்கூடாது.
6. பணத்தை மனம் நாடக்கூடாது.
தம்பி - பணத்தை மறந்தால், அது நம்மை மறந்துவிடுமே!
அண்ணன் - அது ஆசையிருக்கும்போது உண்மை. "பணத்தை மனம் நாடக்கூடாது' என்பதை பணத்தாசை மனதில் இருக்கக்கூடாது என்று கூறவேண்டும்.
Article : பிரார்த்தனை பலிக்க வேண்டும்- Karmayogi Avl. |
Thursday, 19 March 2015
Message of the Day: அகந்தையை அழிக்க வேண்டும்
இன்றைய செய்தியில் அகந்தை(ego) எதனால் எழுகிறது, எது அகந்தை, அதனை அழிக்க நாம் செய்ய வேண்டியது ஆகிய பற்றிய சில செய்திகளை அன்னையின் எழுத்துக்களின் வாயிலாகக் காணலாம்.உண்மையான முன்னேற்றம் என்ன என்பதற்கும் அன்னை இங்கு பதில் கூறுகிறார். அகந்தை என்பது நாம் செய்யும் செயல்களில் இல்லை. ஆனால் அச்செயலை என்ன attitude உடன், எந்த மனப்பன்மையுடம் செய்கிறோம் என்பதிலேயே ego அடங்கியுள்ளது என்கிறார் அன்னை. Question: Sweet Mother, you have said: “Give up all personal seeking for comfort, satisfaction, enjoyment or happiness. Be only a burning fire for progress, take whatever comes to you as an aid to your progress and immediately make whatever progress is required.” Mother answers: Yes, that’s quite simple! It is very clear! Question: Yes, but if I want to progress in sports, for instance, then that would be a personal progress, wouldn’t it? Mother answers: What? In sports? No, the value of the will depends on your aim. If it is in order to be successful and earn a reputation for yourself and be better than others—all sorts of ideas like that —then that becomes something very egoistic, very personal and you won’t be able to progress—yes, you will make progress but Physical things are not necessarily more egoistic than mental or emotional ones. Far from it. They are often much less so. Egoism does not lie in that, egoism lies in the inner attitude. It does not depend on the field in which you are concentrated, it depends on the attitude you have. It does not depend on what you do, it depends on the way you do it.- The Mother, Questions and Answers அகந்தையை அழிக்க வேண்டும் என மனிதன் பேசலாம். அகந்தையெனில் என்ன, அதை அழிப்பது என்றால் என்ன என்று விவரமாகத் தெரிந்த பின் "இது எனக்கு வேண்டும்'' என்பது வழக்கம். விவரம் தெரியாதவர்கள் விருப்பமாகப் பேசலாம். கீழ்க்கண்ட மனநிலைகளைப் பார்ப்போம்.
எனக்குச் சப்பாத்தி பிடிக்கும் என்பது குணம். ஆனால் பிடிக்கும் என்றால், பிடிக்காது என்பது எழும். அவை நம் குணத்தை ஒரு அளவுக்குட்படுத்துவதால் ஆண்டவனைப் பிரதிபலிக்க முடியாது என்பதால் மறைமுகமாகக் குணம் அகந்தைக்குத் துணை செய்யும். அகந்தையைக் களைய முற்படும்பொழுது குணத்தைக் களைய வேண்டும். இந்நோக்கில் குணம் ஒரு வகையில் அகந்தையைச் சார்ந்ததாகும். நாம் அகந்தையை அழிக்க முற்பட்டால் நானே "அதைச் செய்கிறேன்' என அகந்தை முன் வந்து ஏற்றுக் கொள்கிறது. அதனால் நாம் ஏமாந்து போகிறோம். அகந்தையை அழிக்க நாம் முற்படும்பொழுது நாம் நம்மையறியாமல் அகந்தையை வலுப்படுத்துகிறோம். காலம் காலமாக நம்மை அகந்தை இதுபோல் ஏமாற்றுகிறது என்பது ஆன்மீக வரலாறு. இதற்கு என்ன வழி? ஸ்ரீ அரவிந்தம் ஒரு வழியைக் காட்டுகிறது. நம்முடைய பெரு முயற்சி தோல்வியடைந்தால் நாமே சரியில்லை எனப் பொருள் என்பதால், நம்மை நம்புவதைவிட அன்னைக்குச் சரணம் செய்து அன்னையை நம்புவது வழிவிடும் என்பது ஸ்ரீ அரவிந்த சித்தாந்தமாகும். நமக்கு வழி புலப்படாத பொழுது அன்னை கொடுப்பதை மட்டும் ஏற்கும் மனப்பான்மை சரணாகதியாகும். இது கடினம் என்கிறார் பகவான். Article : அகந்தை விரிவடைந்தால் - வாழ்க்கை சுருங்கும் ஆன்மா மலர்ந்தால் - வாழ்க்கை விரிவடையும் - Karmayogi Avl. |
Tuesday, 17 March 2015
Message of the Day - முடிவில்லாத முன்னேற்றம் மற்றும் உழைப்பு
இன்றைய செய்தியில்அன்னை நம் வாழ்வு, சாதாரண மனித வாழ்வில் இருந்து , எப்படி வேறுபட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மனித இயல்புகளான மகிழ்ச்சி மற்றும் திருப்திக்காக நாம் செய்யும் செயல்கள், சஞ்சலம் , சோம்பல், அனைத்து முயற்சி எதிரான விரோதப் போக்கு என அனைத்திற்கும் எதிராக நாம் போராட வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீ அரவிந்தர் உணர்த்துகிறார். All that Sri Aurobindo says here is aimed at fighting against human nature with its inertia, its heaviness, laziness, easy satisfactions, hostility to all effort. How many times in life does one meet people who become pacifists because they are afraid to fight, who long for rest before they have earned it, who are satisfied with a little progress and in their imagination and desires In ordinary life, already, this happens so much. Indeed, The minute one stops going forward, one falls back. The Life is movement, it is effort, it is a march forward, the scaling of a mountain, the climb towards new revelations, towards future realisations. Nothing is more dangerous than wanting to rest. It is in action, in effort, in the march forward that repose must be found, the true repose of complete trust in the divine Grace, of the absence of desires, of victory over egoism. - The Mother, Questions and Answers |
Thursday, 12 March 2015
Tuesday, 10 March 2015
Message of the Day - அன்னை அரவிந்தர் புத்தகங்களைப் படிப்பதன் பலன்கள்
What Sri Aurobindos' represents in the worlds' history is not a teaching, not even a revelation; it is a decisive action direct from the Supreme . - The Mother அன்னை அரவிந்தர் நூல்களும் ஒருவகையில் “அன்னை”யேயாகும். நம் வீட்டில் அவை இருப்பது அன்னையிருப்பது போலாகும். போட்டோவில், “நான் உயிருடன் இருக்கின்றேன்” என்று அன்னை கூறுவது போல், இந்த நூல்களில் அன்னை உயிருடன் இருக்கின்றார். படிப்பவர்க்கு அவர்கள் படிக்கும் முறைக்கேற்ப அன்னை தம்மை அளிக்கின்றார். எதுவும் முடியாதவரும் இந்நூல்களை வாங்கி வந்துவிட்டால், அடிக்கடி அவற்றை எடுத்து இரண்டு நிமிஷம் பார்ப்பதால் அதனுடன் ஒரு ஜீவனுள்ள தொடர்பேற்படும். மனதில் ஓர் எண்ணம் ஏற்பட்டால், உடனே ஒரு புத்தகத்தை எடுத்துத் திறந்து பார்த்தால், நம் கருத்துக்குரிய விளக்கமோ, தெளிவோ ஏற்படும். ஒரு செல்வர் மனை வாங்கினார். அதைத் தொடர்ந்து மற்றொரு மனை விலைக்கு வந்தது. புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். முதல் சொல் “Go ahead”, “ஏற்றுக்கொள்” என்ற கருத்தில் இருந்தது; ஏற்றுக்கொண்டார்; பெரும் பலன் விளைந்தது. தினமும் 4, 5 முறை இப்பழக்கத்தைக் கைக்கொண்டால் புத்தகத்துடன் ஏற்படும் தொடர்பு அன்னையுடன் ஏற்படும் தொடர்பாக மாறும். வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒட்டியும், மனதில் எழும் எண்ணங்களை ஒட்டியும் புத்தகத்தைப் பார்க்கும் பழக்கம், நமக்கும் புத்தகத்திற்கும் தொடர்பேற்படுத்தி, ஒரு வகையில் படிக்கும் பலனை அளிக்கும். .....ஸ்ரீ அரவிந்தர் சம்பந்தப்பட்ட அனைத்துக்கும் குறிப்பான சிறப்பு உண்டு. (Blessing Packet) அன்னையின் பிரசாதம் சக்தி வாய்ந்தது. மகளுக்குப் பிரசவ நேரம். ஆஸ்பத்திரியில் ஆப்பரேஷன் தியேட்டரில் சிக்கலான நேரம். டாக்டர்கள் முயன்று பார்த்து, “இனி முடியாது. பிரசவம் தானே நடைபெறாது. ஆப்பரேஷன் செய்ய வேண்டும்” என்று முடிவு செய்தபொழுது, பெண்ணின் தாயார் கையில் பிரசாதமில்லாமல் தவித்துப்போனார். பிரசாதம் இல்லாவிட்டாலும் அன்னையைப் பற்றிய புத்தகம் வைத்திருந்தார். பெண்ணின் மார்பில் புத்தகத்தை வைத்துப் பிரார்த்தனை செய்தார். வெளியில் போய் ஆப்பரேஷனுக்குத் தயாராக டாக்டர்கள் திரும்பி வருவதற்குள் பிரசவம் ஆகிவிட்டது. ஸ்ரீ அரவிந்தர், அன்னை சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு.- - கர்மயோகி அவர்களின் கட்டுரைகளில் இருந்து |
Monday, 9 March 2015
Message of the Day: செயலற்று இருக்கும் நேரம் என்ன செய்ய வேண்டும்?
Mother's Prayer to the Divine:
When you have nothing to do, you become restless, you run about, you meet friends, you take a walk, to speak only of the best; I am not referring to things that are obviously not to be done. Instead of that, sit down quietly before the sky, before the sea or under trees, whatever is possible and try to realise one of these things—to understand why you live, to learn how you must live, to ponder over what you want to do and what should be done, what is the best way of escaping from the ignorance and falsehood and pain in which you live. - Sri Mother On the Dhammapada நமக்கு முடியாத நேரம், தெரியாத நேரம் இயலாமையால் சும்மா இருக்கிறோம். அப்படிச் சும்மா இருக்கும்பொழுது அன்னை அபரிமிதமாகச் செயல்படும் நிகழ்ச்சிகள் ஏராளம். முடியாதபொழுது சும்மா இருப்பதைப் போல் முடிந்த பொழுதும் சும்மா இருப்பது கட்டுப்பாடு. அது முடிவான கட்டுப்பாடு. அது சரணாகதிக்குச் சமம். நாள் முழுவதும் நாம் வேலை செய்யாமலிருக்கும் நேரங்களில் மனம் அலைபாய்வதும், சலனம் அடைவதும், கவலைகளை ஊன்றிப் பார்த்து வளர்ப்பதும் போன்ற காரியங்களில் ஈடுபடும். வேறு வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கும் பொழுது, சுமார் 2, 3 நிமிஷம் மனம் நிலைத்து ஜெபம் செய்யப் பழகி, அது பலித்தால், நாம் சும்மா இருக்கும் நேரம் முழுவதையும் ஜெபத்தின் பிடியில் நாளாவட்டத்தில் கொண்டு வந்துவிடலாம். பொறுமையாக நாம் இதைச் செய்து வெற்றி பெற்று, 7 அல்லது 10 நாள் பலித்துவிட்டால், பின்னர் காலை, மாலை அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ஜெபம் செய்தால் போதும். நாள் முழுவதும் மற்ற நேரங்களில் ஜெபம் உயிருடன் மனத்தின் அடியில் இருக்கும். முடிந்தவரை ஜெபித்தால் நல்லது. முடியாவிட்டால் மனம் தானே ஜெபிக்கும். நாம ஜெபத்தால் பெரும்பலன் அடைய இது உதவும். மனம் மௌனமாக (silent repetition) ஜெபத்தை ஏற்றுக்கொண்டால் நாமஜெபத்தின் உச்சியை நாம் அடைவோம். - கர்மயோகி அவர்களின் யோக வாழ்க்கை விளக்கம், அன்பர்கள் வழிபாடு ஆகிய கட்டுரைகளில் இருந்து |
Thursday, 5 March 2015
Tuesday, 3 March 2015
Message of the Day - Calm - அமைதி
- The first step is perfect calm and equanimity.
- You must learn to be calm and quiet even in the midst of
Can “calm” give a solution to all problems?
- Yes, but for this the calm must be perfect, in all the parts of the
- So that the experience does not become dangerously distorted
- It is only in peace and calm that the Divine Force expresses
- Words of the Mother
சக்தி, அழகு, அன்பு, சந்தோஷம், மௌனம், சாந்தி ஆகியவை ஆத்மாவின் அம்சங்கள்.
நாம் மனத்தால் அல்லது உணர்வால் அல்லது உடலால் செயல்படுகிறோம்.
ஆத்மாவால் செயல்படுவது சிறப்பு.
எப்படி ஆத்மாவால் செயல்படுவது?
ஒருவரைச் சந்தித்தால், அவரைப் பற்றிச் சிந்தித்தால் அவர் புரிவார்.
இவர் உயரமானவர், நல்லவர், அடக்கமானவர், அந்தஸ்துள்ளவர் எனப் புரிவது மனத்தால் அவரை அறிவதாகும்.
அவரைக் கண்டவுடன் பிடித்துவிட்டால் உணர்வால் செயல்படுவதாகும்.
சிந்திக்காமல், உணராமலிருந்தால் மௌனம் எழும். அவர் முகம் பிரகாசமாகத் தெரியும். அவர் உள்ளத்தில் ஆத்மாவின் அம்சம் ஒன்று தெரியும். மௌனமாகப் பார்த்தால் அவரிடம் உள்ள மௌனம் தெரியும்.
பார்த்தவுடன் சிரிக்கிறோம், விசாரிக்கிறோம், சந்தோஷப்படுகிறோம் என்றால் அது உறவு. உறவில் நாம் மௌனத்தை மறந்துவிடுகிறோம்.
மீண்டும் அவரைச் சந்திக்கும் பொழுது மௌனமாக இருந்தால் அவரிடம் மௌனம் உண்டு, இல்லைஎனத் தெரியும்.
அல்லது அவர் போனபின் அவரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்தால் நம்
சந்திப்பின் பின்னால் உள்ள மௌனம் தெரியும்.
யோகத்தை மேற்கொள்ள தீவிரம், நீடித்த தீவிரம், (sincerity) உண்மை, ஆழ்ந்த
ஈடுபாடு, ஜீவன் ஆழத்தில் நல்ல எண்ணம், மௌனம், அமைதி, இயல்பான ஆனந்தமான
குதூகலம், பொறுப்புணர்ச்சி, நம்மைச் சேர்ந்தவர் அனைவர் செயலுக்கும் ஏற்கும்
பொறுப்புணர்ச்சி, இனிமை, இதம், பதம், பக்குவம், பவித்திரம், இங்கிதம்
ஆகியவை பயன்படும். இவையனைத்தும் ஒன்றே. ஒன்று போன்றவையே எனினும், கூர்ந்து
பார்க்கும் பொழுது பெரும் வித்தியாசம் தெரியும். வித்தியாசம் விபரமானது.
யோகம் செய்ய எந்தத் தகுதியும் தேவையில்லை என்பதும் உண்மை.
- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்,நெஞ்சுக்குரிய நினைவுகள் - சமர்ப்பணம்
கர்மயோகி
Subscribe to:
Posts (Atom)
About this Blog
- Sathya Jeeviyam
- A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.