இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 10 April 2014

அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.

அன்னையில் பாதையில் : உங்களை நீங்கள் முழுமையாக அறிந்து உண்மையின் பாதையில் செல்ல முயலவேண்டும்.

நமது சிந்தனைக்கு:

நாம் எல்லோருமே ஏதோ ஒரு வழியில் இறைவனை பற்றி சிந்திக்கிறோம். ஆன்மீகம் கூறும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் ஒருவர், தம் வாழ்வில் அவற்றை செயல்படுத்த எவ்வளவு தூரம் முயல்கிறார் என்பது கேள்விக்குரியதே. தம்மிடம் உள்ள குறைகளை, பிரச்சனைகளை, குணக்குறைகளால் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தம்மை தாமே சுத்தி செய்து கொள்ள நம்மில் எவ்வளவு பேர் தயாராக உள்ளோம் என்பதும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. நான் அப்படிதான் இருப்பேன், இதுதான் என் குணம் என்று கூறும் கடுமையான குணம் கொண்ட ஒருவர், எத்தனை ஆன்மீக நூல்களைப் படித்தாலும், ஆன்மீக முறைகளை பின்பற்றினாலும், ஆன்மீகத்தின் உண்மையை அவர் புரிந்து கொண்டாரா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

நம்மை நாம் முழுமையாக அறிவது என்பது நமது குறைகளை விலக்கி, பொய்யை அழித்து இறைவனிடம் நம்மை முழுமையாக நெருங்கச் செய்யும் வழியாகும். இது இறைவனை பற்றிய உண்மையை நாம் அறிந்து கொள்ளும் வழியுமாகும்.

" A single day spent in contemplation of the supreme Truth is worth more than a hundred years lived in ignorance of the supreme Truth. "
                               -The Mother



அன்னையின் பாதையில்:

அன்னையின் பாதையில், நமது போலித்தனமான எந்த எண்ணங்களுக்கும் பொய்களுக்கும் இடமில்லை. நம்மை நாம் உணர்ந்து கொள்ள, வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது நமக்கு வழிகாட்டும் என்கிறார் அன்னை. நான் நல்லவன், என்னால் யாருக்கும் தீமை இல்லை என்று நம்புபவர், தனக்கு சாதகமில்லாத சந்தர்பங்களில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைக் கவனித்தால் அவரைப் பற்றிய உண்மை விளங்கும்.


You believe you are so good, so kind, so well disposed and always full of good feelings. You wish no harm to anybody, you wish only good—all that you tell yourself complacently. But if you look at yourself sincerely as you are thinking, you notice that you have in your head a collection of thoughts which are sometimes frightful and of which you were not at all aware.

For example, your reactions when something has not pleased you: how eager you are to send your friends, relatives, acquaintances, everyone, to the devil! How you wish them all kinds of unpleasant things, without even being aware of it! And how you say, “Ah, that will teach him to be like that!” And when you criticise, you say, “He must be made aware of his faults.” And when someone has not acted according to your ideas, you say, “He will be punished for it!” and so on. You do not know it because you do not look at yourself in the act of thinking.
- ஸ்ரீ அன்னை

"நான் நல்லவன், என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். எனது அருமையை அவர்கள் புரிந்து கொள்ளாவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். ஒருநாள் தகுந்த பாடத்தை அவர்கள் பெறுவர் " என்று ஒருவர் நினைக்கிறார் என்றால், அவரை நல்லவர் என்று கூற முடியுமா? அவரும் மற்றவர்களுக்கு தீமை செய்கிறார் இல்லையா? இங்கு அவருடைய EGO தான் செயல்படுகிறது என்பதையும் நாம் கூற முடியும். இவ்வாறு நினைப்பதன் மூலம், அவர் தன்னை பற்றி, தன்னில் இருக்கும் தீய குணத்தைப் பற்றி அறியவில்லை என்பதும் நமக்கு புலப்படுகிறது.

அன்னை இது போல பலவிதமான எண்ணங்களைக் குறிப்பிடுகிறார். "நான் கூறிய புத்திசாலித்தனமான யோசனையை அவர் ஏற்கவில்லை. இதன் பலனை மற்றவர் அனுபவிக்கவேண்டும்" என்று அறிவாளியான ஒருவர் நினைத்தால், அவர் அன்னையின் கூறும் சத்தியப்பாதையில் இல்லை என்றுதானே பொருள்?
 
Sometimes you know it, when it becomes a little too strong. But when the thing simply passes through, you hardly notice it—it comes, it enters, it leaves. Then you find out that if you truly want to be pure and wholly on the side of the Truth, then that requires a vigilance, a sincerity, a selfobservation, a self-control which are not common.

இது போன்ற பல விஷயங்களை நாம் வாழ்வில் சந்திக்கலாம். அப்போது நாம் செயல்படும் முறைகளில் நாம் தெரிந்தோ அல்லது நம்மை அறியாமலோ இது போன்ற தவறுகளை செய்யலாம். இதில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ள என்ன வழி? அன்னையே இது பற்றுக் கூறுகிறார்.

You begin to realise that it is difficult to be truly sincere. You flatter yourself that you have nothing but good feelings and good intentions and that whatever you do, you do for the sake of what is good—yes, so long as you are conscious and have control, but the moment you are not very attentive, all kinds of things happen within you of which you are not at all conscious and which are not very pretty.

ஒவ்வொரு சந்தர்பத்திலும், நாம் உண்மையுடன் செயல்படுகிறோமா என்ற விழிப்புடன் இருக்கவேண்டும். இந்த விழிப்பு இல்லாத போது, நம் செயலின்   விளைவுகளும் நன்றாக இருக்காது என்கிறார் அன்னை.

எப்படி வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள கவனத்துடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டுமோ அது போல, நாம் நம் மனதை, எண்ணங்களை சுத்தமாக, தூய்மையுடன் வைத்துக் கொள்ள விரும்பினால், விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மில் வரும் எண்ணங்களை ஆளுமை செய்யும் திறனைப் பெறவேண்டும். சத்தியத்துடன் மட்டுமே இருப்பேன் என்ற உறுதியும் வேண்டும். தீய மற்றும் குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காமல் செயல்படவேண்டும் என்கிறார் அன்னை.

If you want to clean your house thoroughly, you must be vigilant for a long time, for a very long time and especially not believe that you have reached the goal, like that, at one stroke, because one day you happened to decide that you would be on the right side. That is of course a very essential and important point, but it must be followed by a good many other days when you have to keep a strict guard on yourself so as not to belie your resolution.
Ref:
Questions and Answers1929-31

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.