இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Wednesday, 14 January 2015

இயற்கை சக்திகளுக்கு நமது நன்றிகளை தெரிவிப்போம்

Pongal.jpg

அனைவருக்கும் இனிய பொங்கல் / உழவர் / மகரசங்கராந்தி / அறுவடைத்  திருநாள் வாழ்த்துக்கள். அனைவரது வாழ்வும், அன்னை ஒளியுடன் உயர்வடைய பிரார்த்திப்போம்.






இந்த நாளில், இயற்கை சக்திகளுக்கு நமது நன்றிகளையும், வாழ்த்துகளையும் மகிழ்வுடன் தெரிவிப்போம். நம் அனைவரது வாழ்வும், இந்நாளில் பொங்கும் பொங்கலைப் போன்று, இறை உணர்வால் நிறைந்து விளங்கிட பிரார்த்திப்போம்!

அன்னை எழுதிய ஒரு பிராத்தனையை இங்கே வழங்குகின்றோம்.

 Prayer to the Sun - By Sri Mother

O Sun! our friend,

Disperse the clouds,

Absorb the rain.

We want your rays,

We want your light,

O Sun! our friend.

Monday, 12 January 2015

Message of the Day:எதிர்மறை சக்திகளிடம் இருந்து விழிப்பாக இருப்பது எவ்வாறு?

Mother's says:



There are as many of them as there
are elements in the world. Only, unless they express themselves physically, we do not see them. So we are not aware of them. But
I told you the other day that the atmosphere is full of countless formations which are usually made up of thoughts, desires, impulses, wills, and which are as mixed as men’s thoughts. There
are good ones, there are bad ones; and behind that there are all the formations of the vital world, a world essentially hostile to the Divine. Only the vital in man, under the psychic influence, can change and become a collaborator in the divine work.

Otherwise, the vital world is essentially formed of beings hostile to the divine work, and those who open themselves to these forces without any control are naturally under the influence of
the adverse forces. So, one can’t say what these adverse forces are. It would be easier to say what they are not.

And so, as these adverse forces are countless—these entities exist in thousands and thousands, you see, they are there swarming around people, only waiting for an opportunity to be able to
rush into someone—immediately one reabsorbs one’s dose and becomes once again what one was before, sometimes worse. And so the comedy begins all over again.

-From Question and Answers by Annai




பெரிய அதிர்ஷ்டம் திடீரென வந்தவர்களைக் கேட்டால், அதிர்ஷ்டத்துடன் ஆயிரம் அசந்தர்ப்பங்கள் வருவதை அவர்கள் அனுபவப்பூர்வமாகச் சொல்வார்கள். அன்னையை அழைத்து, பெரிய நல்ல காரியங்கள் நடக்க இருக்கும் நேரத்தில் க்ஷண நேரத்தில் மாற்று நடந்து காரியம் கெட்டு விடும்.

பத்து லக்ஷம் தொழில் நடத்தியவருக்கு 4 கோடி வியாபாரம் கூடி வந்தது. தானே வந்தது. அவர்கள் சந்தித்துப் பேசும் நேரம், அவருடைய பார்ட்னர் சமாதிக்குப் போய் காரியம் முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வந்தார். அந்த நேரம் வலிப்பு வந்த ஒருவர் சமாதியருகே விழுந்துவிட்டதாகவும், அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் கார் உதவி தேவை என்று ஒருவர் வந்து கேட்டார். கேட்டவர் தம் கார் ஷெட்டில் 6 கார்கள் வைத்திருக்கிறார். ஷெட் எதிரேயிருக்கிறது. பார்ட்னருக்குத் தயக்கம். எப்படி உதவியில்லை என்பது தயக்கம். கொடுத்தால் வலிப்புள்ளவன் காரில் உட்கார்ந்தால், தீயசக்திகள் நுழைய வழி ஏற்படும். இன்னும் 1 மணி நேரத்தில் வலிய வந்த பெரிய ஆர்டர் கையெழுத்தாக இருக்கிறது. காரைக் கொடுத்தார். ஆர்டர் ரத்தாகிவிட்டது. இது தீய சக்திகள் செய்யும் சோதனை என்றறிந்தும், இல்லை என்று சொல்லத் தயக்கப்பட்டதால் வந்த விளைவு இது.

இந்தச் சோதனைகள் எந்த உருவத்தில் வந்தாலும் அவற்றின் அடிப்படை ஒன்று தான். உன்னால் விலக்க முடியாத மனிதர்கள், நிகழ்ச்சிகள் மூலம் வரும். தீய சக்திகள்ஏராளமாக உலவுவதுபோல் அன்னைக்குச் சேவை செய்ய (good being) நல்ல சக்திகளும் உலவுகின்றன. அவையும் இதேபோல் நமக்கு நல்ல சந்தர்ப்பங்களை முக்கியமான நேரங்களில் அளித்தபடியிருக்கும். அவற்றை ஏற்றுக்கொள்ளுதலோ, விலக்குவதோ, நம் பங்கு, நம் மனநிலையைப் பொருத்தது.
நமக்குக் கோபம் வருமென்றால், நல்ல சந்தர்ப்பத்தில் தீய சக்திகள் கோபத்தைக் கிளப்பும். மானஸ்தனானால்
மானப்பிரச்னையைக் கிளப்பும், பேராசைக்காரனானால், ஆசையைக் கிளப்பும், எதை நம்மால் மறுக்க இயலாதோ அதை நம் முன் தீயசக்திகள் வைக்கும். நம் குணத்தைக் கருதாது, ஏன் இந்நிகழ்ச்சி நடக்கிறது என்று நாம் யோசனை செய்தால், அன்னையை மட்டும் நினைத்தால், தீய சக்திகள் விலகும். நம் குணத்திற்கு இடம் கொடுத்தால் அவை வெற்றி பெறும்.
நல்ல காரியங்கள் நடக்கும்பொழுதும், நம்மால் மறுக்க முடியாதவை குறுக்கிடும். அந்த நேரம் நாம் விழிப்பாக இருந்து, ஏன் இந்த நல்ல காரியம் நடக்கிறது என்று சிந்தித்தால், தவறுதல் வாராது.

கர்மயோகி அவர்களின் யோக வாழ்க்கை விளக்கம்  என்ற கட்டுரையில் இருந்து....

 

 

 














Thursday, 8 January 2015

Message of the Day: Prayer - பிரார்த்தனை

Mother's Prayer to the Divine:


Teach us always more,
Give us more light,
Dispel our ignorance,
Illumine our minds,
Transfigure our hearts,
And give us the Love that never runs dry,
and makes Thy sweet law flower in every being.
We are Thine for all Eternity.

-From Prayers and Meditations by Annai




அன்னையிடம் இரு முக்கியமான மாற்றங்களுண்டு. வலுவான பிரார்த்தனைக்கு அதிகப் பலனுண்டு என்பது அன்னையிடமும் உண்மை என்றாலும், அன்னை பிரார்த்தனையின் வலிமையைவிட முக்கியமாக அழைப்பின் ஆர்வத்தைக் கருதுகிறார். ஆர்வமான அழைப்பை அன்னை உடனே ஏற்றுக்கொள்கிறார். நம்பிக்கையிருந்தால், அன்னை மற்றதைப் பொருட்படுத்துவதில்லை. பிரார்த்தனையின் வலிமை, பூஜையின் சிறப்பு ஆகியவற்றைவிடப் பக்தியையும், நம்பிக்கையையும் அன்னை முக்கியமாகக் கருதுகிறார். மேலும் அன்னை மனிதனை நோக்கி வந்தபடியிருக்கின்றார். மனிதன் தன்னை அழைக்கட்டும், பூஜை செய்யட்டும் என இருப்பதில்லை. அவனை நோக்கி வரும் அன்னை, மனிதன் தன்னை நினைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். மனிதன் நினைத்தால் போதும். அன்னை வந்துவிடுவார். நம்மைச் சுற்றி அவரிருப்பதால் நாம் நினைத்தவுடன் அன்னை பலித்து விடுகிறார். அன்னை செயல்பட ஆரம்பித்தால் சூழ்நிலை மூலம் செயல்படுகிறார். சூழ்நிலையைச் சாதகமாக மாற்றி, சூழ்நிலையிலுள்ள மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் நம் பிரச்சினை தீர உதவும்படி செய்கிறார். நம் சாமர்த்தியத்தின் மூலமாகச் செயல்படுவதை விட இது பலமடங்கு அதிக சக்தியை வழங்குகிறது. நம் சூழ்நிலையே நமக்குச் சாதகமாக மாறுவதாலும், நம் அழைப்பிற்காக அன்னை காத்திருப்பதாலும், சிக்கல் தீராமலிருக்க வழியில்லை. 

கர்மயோகி அவர்களின் தீராத பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினையல்ல என்ற கட்டுரையில் இருந்து....

 

 

 














Tuesday, 6 January 2015

Message of the day: திருப்தி செய்ய முயலாதே







........You say that you are often depressed. It is the vital being that gets depressed when its desires are not satisfied.


In ordinary life, one has to struggle to satisfy one’s desires;here one struggles not to do so. Actually, whatever path one
follows, success always comes to those who are strong, courageous,
enduring. And you know that here our force and our help are always available to you; you have only to learn to make use of them.
Love from your mother.


(From Some Answers from the Mother)

கடமையைச் செய்யலாம்; திருப்தி செய்ய முடியாது. எவரையுமே திருப்தி செய்ய முடியாது. திருப்தி செய்ய எடுக்கும் முயற்சி சிறுபிள்ளைத்தனமானது. ஆசை திருப்திபடும் தன்மையுடையதன்று. திருப்தி செய்ய முயன்றால் அதிருப்திதான் வரும்.


நல்ல பிள்ளைகள் பெற்றோரைத் திருப்தி செய்ய முயல்வார்கள். பொதுவாகப் பெற்றோர்கள் அதை அன்போடு ஏற்றுக்கொள்வதைவிட ஒரு சௌகரியமாக ஏற்றுக்கொள்வதே அதிகம். பிள்ளைக்கு மனத்தில் பிணக்கு ஏற்படும்.

திருப்தி செய்வது சரியான கொள்கை என்று வைத்துக் கொள்வோம். தாயாரைத் திருப்தி செய்யும் நிலையில், தாயாருக்கும் தகப்பனாருக்கும் ஒரு விஷயத்தில் மனத்தாபம் வந்துவிட்டால், இப்பொழுது யாரைத் திருப்தி செய்ய முடியும்?


கடமையைச் செய், பொறுப்பை நிறைவேற்று, மனச்சாட்சிக்கு அடங்கி நட, திருப்தி செய்ய முயலாதே.

வாழ்வின் பொது உண்மைகள் – II by karmayogi


Monday, 5 January 2015

அன்னையின் பாதையில் : நாம் செய்யும் ஒரு சிறிய செயல் கூட எப்படி இருக்க வேண்டும்?





செய்யும் செயல் சிறியதானாலும், அதில் DIVINE CONSCIOUSNESS - ஐ  உணர்வது எப்படி  என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு கேள்வியாக இருக்கலாம். அதற்கு அன்னை அளிக்கும் பதிலே இன்றைய செய்தி.

The only thing that matters is the attitude with which they are done. The fact that you do something because that action is present there before you for one reason or another and that you are, so to say, always obliged to act as long as you are in the outer life—all this has a certain importance from the point of view of the management of life if these acts are liable to have far-reaching consequences in life, as for example, getting married or going to live in one place or another or taking up one occupation or another; these things are generally considered
important, and they are so to a certain extent; but even for them, from the point of view of yoga, everything depends much more on the attitude one takes than on the thing itself.


இங்கு அன்னை கூறும் விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், செயல் சிறியதானாலும் பெரியதானாலும்,   அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் அச்செயலைச் செய்யும் பொழுது, நமது ATTITUDE ஆகியவை அச்செயல் நிகழும் விதத்தை நிர்ணயிக்கின்றன அல்லது பாதிக்கின்றன.  இதற்கு ஒரு அன்பர் தன்னிடம் கேட்ட கேள்வியை உதாரணமாக, அன்னை குறிப்பிடுகிறார். விளக்கம் மிகப் பெரிதானாலும், அதன் சுருக்கத்தினை இங்கு காண்போம்.

இறைவனின் எண்ணமே அல்லது விருப்பமே அனைத்திலும் செயல்படுகிறது என்பது  உண்மையானால், நான் அருந்தும் காபியில், எவ்வளவு சர்க்கரை சேர்க்க வேண்டும் , ஒரு ஸ்பூனா அல்லது இரண்டா? இதில் இறைவனின் எண்ணத்தை நான் எப்படி அறிவது என்கிறார்
அந்த அன்பர் . காபி அருந்துவது என்பது மிகச் சிறிய செயல்தான் என்றாலும், அதில் இறைவனின் CONSCIOUSNESS எவ்வாறு வெளிப்படுகிறது என்பது அவர் சந்தேகம். அன்னை இதற்கும் விளக்கம் அளிக்கிறார். இந்த செயலில் சர்க்கரை சேர்த்தல் என்ற செயலினை விட, அத செயலை அவர் எந்த அளவு Spirit உடன் செய்கிறார், எந்த attitude - ல் செய்கிறார், என்பதே மிக முக்கியம் என்கிறார் அன்னை.

There are some scrupulous people who set problems to themselves and find it very difficult to solve them, because they state the problem wrongly. I knew a young woman who was a theosophist and was trying to practise; she told me, “We are taught that the divine Will must prevail in all that we do, but in the morning when I have my breakfast, how can I know whether God wants me to put two lumps of sugar in my coffee or only
one?”... And it was quite touching, you know, and I had some trouble explaining to her that the spirit in which she drank her coffee, the attitude she had towards her food, was much more important than the number of lumps of sugar she put into it.
It is the same with all the little things one does at every moment. The divine Consciousness does not work in the human way, It does not decide how many lumps of sugar you will put in your coffee. It gradually puts you in the right attitude towards actions, things—an attitude of consecration, suppleness, assent, aspiration, goodwill, plasticity, effort for progress—and this is what counts, much more than the small decision you take at every second. One may try to find out what is the truest thing to do, but it is not by a mental discussion or a mental problem that these things can be resolved.

தனது விளக்கத்தின் ஒரு பகுதியாக அவர், நாம் செய்யும் எந்த விதமான செயல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார். Divine Consciousness என்பது மனித அறிவைப் போல செயல்படுவது இல்லை. காபியில் எத்தனை ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும் என்பது அதனுடைய தீர்மானம் இல்லை. அது உங்களை எல்லா விஷயங்களிலும் படிப்படியாக,  சரியான அணுகு முறையுடன், சரியான மனப்பான்மையுடன் செயல்பட வைக்கிறது. சமர்ப்பணத்துடன் கூடிய மனப்பான்மை, ஏற்றுக் கொள்ளும் மனோபாவம், நல்லெண்ணம், இறைவனின் நோக்கத்திற்கு வளைந்து கொடுக்கும் தன்மை, aspiration, ஆன்மீக முன்னேற்றம் என பல வகைகளிலும் ஒவ்வொரு செயலிலும் உங்களை வழிநடத்துகிறது. இதன் மூலம் மிகச் சரியான உண்மையான தீர்வை, ஒவ்வொரு செயலிலும் நீங்கள் எடுக்க முடியும், ஆனால் உங்களது மனம் தீர்மானம் செய்யும் எந்த ஒரு முடிவாலும், இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது இல்லை என்கிறார் அன்னை.(From QUESTIONS AND ANSWERS)

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.