இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 8 December 2014

Message of the Day : விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது





Mother says: You must choose; there is no “force like that” which chooses for you, or chance or luck or fate—this is not true. Your will is free, it is deliberately left free and you have to choose. It is you who decide whether to seek the Light or not, whether to be the servitor of the Truth or not—it is you. Or whether to have an aspiration or not, it is you who choose. And even when you are told, “Make your surrender total and the work will be done for you”, it is quite all right, but to make your surrender total, every day and at every moment you must choose to make your surrender total, otherwise you will not do it, it will not get done by itself. It is you who must want to do it. When it is done, all goes well, when you have the Knowledge also, all goes
well, and when you are identified with the Divine, all goes even better, but till then you must will, choose and decide.

- From Question and Answers by Mother.


தவறு செய்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள், "என்ன செய்வது?  என் நேரம்.  நேரத்திற்கேற்ப புத்தி. அதனால் நான் இந்தத் தவற்றைச்  செய்துவிட்டேன்.
இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்'  என்பார்கள்.

லோக சஞ்சாரம் செய்துகொண்டிருந்த மகாவிஷ்ணுவும்,  மகாலட்சுமியும் தம் பக்தனான ஓர் ஏழைக்கு உதவ முன்வந்து,  அவன் நடந்து வந்துகொண்டிருந்த பாதையில் ஒரு  தங்கக்கட்டியைப்  போட்டார்கள். அந்தச் சமயத்தில் அந்த ஏழைக்கு ஒரு விசித்திர  எண்ணம் தோன்றியது. "குருடன் எப்படி நடப்பான் என்று  பார்க்கலாமா?"என்று எண்ணி, கண்களை மூடிக்கொண்டு நடக்க  ஆரம்பித்தான்.  அதனால் பாதையில் கிடந்த தங்கக்கட்டியை அவனால்  பார்க்க முடியாது போயிற்று.  கடவுள் கொடுக்கத் தயாராக  இருந்தாலும், விதி அவனை அனுபவிக்க விடவில்லை. விதி  வலிது. அவதாரப் புருஷனான இராமனின் முன் மாயமான்  தோன்ற, சீதை அதைப்  பார்த்து ஆசைப்பட, விதி அவர்களைக்  கொண்டே தன் வேலையைச் செய்து முடித்துவிட்டது.


விதியானாலும், கர்மமானாலும் மனிதனுடைய  ஒத்துழைப்பின்றிச் செயல்பட முடியாது. அன்னை அப்படிப்பட்ட  நேரங்களில் தம் பக்தனுக்குத் துணை செய்கின்றார். ஆனால்,  அவனுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அன்னையால் செயல்பட  முடியாது. பக்தன் பண்பட்ட பாத்திரமாக இருந்து, அன்னையின்  அருள் செயல்படுவதற்கு முழுமையாக உதவ வேண்டும்.
- கர்மயோகி அவர்களின் அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்
என்ற கட்டுரையில் இருந்து..

Thursday, 4 December 2014

Message of the Day : ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா?





கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.
ஒருவருடைய நம்பிக்கையால், அவருடைய பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.
  • மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
  • திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
  • சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
  • அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும். இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார்.

மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும். 

திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும். 

சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும். 

அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும்.


  • பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
  • அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
  • பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
  • அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.


- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..









 

























- The Mother

Wednesday, 3 December 2014

Message of the Day : அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன?





அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன? அது எப்பொழுது வெளிப்படும்?

 வாழத் தேவையான சக்தி (energy for survival) நம்முடைய சக்தி. சமூகத்தில் நம் நிலை தொடர்ந்து உயரத் தேவையான சக்தி (social energy) சமூகத்தின் சக்தி.

பொய்யான வாழ்வில் அடிப்படையை நம்பாமல், மெய்யான அன்னை வாழ்வின் அடிப்படையை மட்டும் நம்பி வாழ்ந்து, வளர உதவும் சக்தி அன்னை சக்தி. இதை பரிணாம சக்தி (evolutionary energy) எனவும், சத்திய ஜீவிய சக்தி எனவும், ஆன்மிகச் சக்தி எனவும் கூறினால் ஓரளவு பொருந்தும். பயத்தை, தைரியமாக மாற்றும் சக்தி உலகில் உண்டு என்றால் அது 1956க்குப் பின் பூமியின் சூழலில் வந்துள்ள அன்னை சக்தியேயாகும். மரணத்தை அமரவாழ்வாக மாற்றுவதும் வலியை ஆனந்தமாக மாற்றுவதும், சோர்வைத் தெம்பாக மாற்றுவதும், சந்தேகத்தை நம்பிக்கையாகவும், வேதனையை இன்பமாகவும், இருளை ஒளியாகவும், அறியாமையை அறிவாகவும் அன்னை சக்தி மாற்றவல்லது. நான் சொல்லும் (shift) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது இது.

இந்தச் சக்தியை எப்படி உள்ளே எழுப்புவது? அதனால் இம்மாற்றத்தை எப்படிப் பெற்று நிரந்தரமாக்குவது?

அன்னையை அழைத்தால் அன்னை சக்தி நம்முள் எழும். அன்னையை நினைத்தாலும் இச்சக்தி நம் உள்ளேயிருந்து புறப்படும் என்பது உண்மை. நாம் எப்பொழுதோ ஒரு முறை அன்னையை நினைக்கிறோம். பிரச்சினை வந்தால், அன்னையை அழைக்கிறோம். பிரச்சினை தீருகிறது. அவை ஓரிழை இம்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை.

மாற்றம் நிரந்தரமாக எப்படி ஏற்படும்?

நினைவையும், அழைப்பையும் நிரந்தரமாக்கினால் மாற்றம் நிரந்தரமாக ஏற்படும். .

- கர்மயோகி அவர்களின் நூறு பேர்கள் என்ற கட்டுரையில் இருந்து..




 

























- The Mother

Tuesday, 2 December 2014

Prayers and Meditations by Mother



From Prayers and Meditations

November 3, 1912*

LET Thy Light be in me like a Fire that makes all alive;
let Thy divine Love penetrate me.
I aspire with all my
being for Thy reign as sovereign and master of my mind
and heart and body;
let them be Thy docile instruments
and Thy faithful servitors.




- The Mother

Monday, 1 December 2014

Message of the Day : The path of later-on and the road of tomorrow




“The path of later-on and the road of tomorrow
lead only to the castle of nothing-at-all.”


A young student had a long essay to prepare for the following morning. A little tired by his day’s work, he had said to himself as he arrived home, “I shall work later.” Soon afterwards he thought that if he went to bed early, he could get up early the next morning and quickly finish his task. “Let’s go to bed,” he said to himself, “I shall work better tomorrow; I shall sleep on it.” He did not know how truly he spoke. His sleep was troubled by the terrible nightmare we have described, and his fall awoke him with a start. Thinking over what he had dreamt, he exclaimed, “But it’s quite clear: the path is called the path of ‘later on’, the road is the road of ‘tomorrow’ and the great building the castle of ‘nothing at all’.” Elated at his cleverness, he set to work, vowing to himself that he would never put off until tomorrow what he could do today.




- The Mother

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.