இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Monday, 9 February 2015

ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன?

ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பது என்றால் என்ன? விவேகானந்தர் பசியோடு ரயில்வே ஸ்டேஷனில் தூங்கியபொழுது கிருஷ்ணன், பலகாரக்கடை வியாபாரி பகல் தூங்கும்பொழுது அவன் கனவில் வந்து, என் பக்தன் பசியோடிருக்கிறான், அவனுக்குப் பக்ஷணம் எடுத்துக் கொண்டு ஓடு என்றார். அவனும் ஓடி வந்தான். விவேகானந்தருடைய ஆன்மா செயல்பட்டு உணவை அவரிடம் கொண்டுவந்தது. அதுவே வாழ்க்கை நியதியானால் மனிதவாழ்வு, தெய்வீகவாழ்வாகும். விஷம் சாப்பிட்டால் உடல் இறந்துபோகும் என்ற சட்டம் மீரா விஷயத்தில் பலிக்கவில்லை. மீராவின் பக்திக்குள்ள சக்தி விஷத்தின் சக்தியைவிட அதிகமாகி பக்தி, உடலைக் காப்பாற்றியது. உணர்வு, உடலின் வாழ்வை - விஷத்தை மீறி - நிர்ணயிக்கிறது. மந்திரவாதி உச்சரிக்கும் மந்திரம் பாம்பின் விஷத்தால் இறந்து கொண்டிருப்பவனைத் தடுக்கிறது.

மனத்தின் மந்திரசக்தி உடலின் வாழ்வை - பாம்பின் விஷத்தை மீறி - நிர்ணயிப்பதுபோல் ஆன்மா உடலை (ஜடத்தை) நிர்ணயிக்க வேண்டும். தியானத்தில் ஆன்மாவில் எழும் காட்சிகள் நிஜவாழ்வில் நடந்தால் ஆன்மா செயல்படுவதாக அர்த்தம்.

பிரார்த்தனை பலிப்பதே ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். ஆன்மா ஜடத்தை நிர்ணயிப்பதன்முன், உணர்வை நிர்ணயிக்க வேண்டும், அதற்குமுன் எண்ணத்தை நிர்ணயிக்க வேண்டும். எண்ணம் கட்டுப்படுவது, ஆன்மா எண்ணத்தை நிர்ணயிப்பதாகும்.

- யோகா வாழ்க்கை விளக்கத்தில் கர்மயோகி அவர்களின் கருத்து.

No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.