இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 16 October 2014

கதையும் சிந்தனையும் : இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார்

கதையும் சிந்தனையும்  :

இறைவன் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்ற சிந்தனையே இன்று நாம் எடுத்துக் கொண்ட கருத்து.  இதன் அடிப்படையில் ஒரு கதையும் உண்டு. எங்கேயோ எப்போதோ படித்த கதைதான் இது.

ஒரு குருகுலத்தில் ஒரு முனிவரிடம் நிறைய மாணவர்கள் பயின்று வந்தனர். ஒரு நாள் தனது மாணவர்களின் இறை சிந்தனையை பரிட்சித்துப் பார்க்க விரும்பிய அந்த குரு, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கொரு மாங்கனியைக் கொடுத்து, "நீங்கள் ஒவ்வொருவரும், இந்தப் பழத்தை யாருமே இல்லாத இடத்திற்கு சென்று உண்ண வேண்டும். சிறிது நேரத்தில் நான் மீண்டும் வந்து பார்க்கிறேன்", என்று கூறிச் சென்று விட்டார். மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையை நோக்கி சென்றனர். அனைவரும், வேறு யாரும் பார்க்க முடியாத இடங்களைத் தேடிச் சென்றனர்.

நேரம் கடந்தது. குருவும் அங்கு வந்தார். மாணவர்கள் தாங்கள் எவ்வாறு யாருமே இல்லாத இடங்களுக்குச் சென்று அக்கனியினை உண்டோம் என்ற விஷயத்தை குருவுக்கு கூறினார். குருவும் ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டே வந்த போது ஒரு மாணவன் மட்டும் கவலை தோய்ந்த முகத்துடன்
இருந்ததைக் கண்டார். அது மட்டும் அல்ல. அவன் கையில் அவர் கொடுத்த பழமும் இருந்தது. குருவிற்கு ஒரே ஆச்சர்யம். அம்மாணவனைப் பார்த்து மற்ற மாணவர்களும் நகைத்தனர்.

"எனது அன்புக் குழந்தாய்! நீ மட்டும் ஏன் இக்கனியினை இன்னும் உண்ணவில்லை? "என்று கேட்டார் குரு. அதற்கு அந்த மாணவன் கூறிய பதிலைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்து "நான் கற்பித்த ஞானத்தினை சரியாகப் புரிந்து கொண்டவன் நீ ஒருவனே! உன்னை மாணவனாக பெற்றதில் எனக்குப் பெருமையே!" என்று கூறி அவனைப் புகழ்ந்தார்.

அப்படி அந்த மாணவன் என்ன கூறினான் தெரியுமா?

"குருவே! நான் எங்கு சென்றாலும் இறைவன் என்னுடனேயே இருக்கிறான். யாரும் இல்லாத இடம் தேடிய நான், இறைவன் இல்லாத இடத்தினை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்கள் நிபந்தனையை நிறைவேற்ற முடியாததால் இக்கனியை உண்ண முடியவில்லை" என்பதே அப்பதிலாகும்.

இந்த மாணவன் பெற்ற சிந்தனையை நாம் அனைவரும் பெற வேண்டியது அவசியமாகும்.



"Always behave as if the Mother was looking at you, because she is, indeed, always present. "
 -Words of the Mother II

இது ஸ்ரீ அரவிந்தர் கூறியதாகும். அன்னை எப்போதும் உங்களைக் கவனித்துக் கொண்டிருப்பது போலவே நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அன்னை நம்  சுற்றி எப்போதும் இருக்கிறார் என்கிறார் பகவான்.
 

Never forget that you are not alone. The Divine is with you helping and guiding you. He is the companion who never fails,the friend whose love comforts and strengthens. Have faith and
He will do everything for you.

The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence. 
  -Words of the Mother II
 நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒருபோதும் மறவாதீர். இறைவன் உங்களுக்கு உதவவும், வழிநடத்தவும் எப்போதும் உங்களுடன் உள்ளார். இறைவன் உங்களைப் பிரிவதும் இல்லை. இறைவனின் அன்பு உங்களை பலப்படுத்துகிறது. அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், அவன் உங்களுக்காக அனைத்தையும் செய்வான் என்று நமக்கு இறைவன் நமது இணைபிரியாத நண்பன் என்று கூறுகிறார் அன்னை.


  • Let the Divine Consciousness be the leading power in your life.
  • Let the Divine Presence be always with you.
  • Whatever you do, always remember the Divine.
  •  The Divine manifests upon earth whenever and wherever it is possible.
  • All our strength is with the Divine. With Him we can surmount all the obstacles.

  -Words of the Mother II

 உங்கள் வாழ்வை இறை உணர்வே வழிநடத்தும் படிச் செய்யுங்கள். எப்போது எதை செய்தாலும், இறைவனின் நினைவைக் கொள்ளுங்கள். நமது மொத்த பலமும், வலிமையையும் இறைவனே. அவன் துணையுடன் நாம் தடைகளை எளிதாகக் கடக்கலாம் என்கிறார் ஸ்ரீ அன்னை.

இங்கு அன்னை கூறியபடி, ஒவ்வொரு செயலிலும் இறைவனின் துணையுடன் செயல்படும் விழிப்புணர்வை நாம் பெற்றால், நம் வாழ்வு முன்னேற்றமடைவதுடன், இறைவனின் நோக்கம் இப்புவியில் நிறைவேறும்.

ஓம் நமோ பகவதே!


நன்றி.











No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.