இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 18 September 2014

மலரும், அது கூறும் செய்தியும் - வாழ்வில் அற்புதங்கள் நிகழ உதவும் மலர்


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெறும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            


இன்றைய மலர்   :
Common name: Delek air tree, Ironwood tree • Hindi: Anjan अंजन, Kaya • Marathi: Anjan • Telugu: Mandi, Lakhonde • Malayalam: Kanjavu • Oriya: Neymaru
Botanical name: Memecylon umbellatum
மலரின் பலன் :  Miracle Marvellous, strange, unexpected  - 
நம் வாழ்வில் அற்புதங்கள் நடக்க உதவும் மலர்.



Ironwood Tree
Image Courtesy :  flowersofindia.net                                             Photo: Radhika Vatsan


இன்றைய செய்தி/ Message of the Day :

Miracle என்பதனைப் பற்றி ஸ்ரீ அன்னை கூறிய சில கருத்துக்கள்:

The Grace, the Grace alone can act. That alone can open the way, that alone can do the miracle.

உண்மையான அன்பினால் அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்கிறார் அன்னை.

True love can achieve extraordinary things, but it is rare.
All kinds of miracles can be done out of love for the person one loves—not for everyone, but for the people or the person one loves. But it has to be a love free from all vital mixture, an absolutely pure and selfless love which demands nothing in return, which expects nothing in return.


ஸ்ரீ அன்னை அரவிந்தரின் அற்புதங்களை தொகுத்து திரு. கர்மயோகி அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து சில செய்திகள்
  1. ஸ்ரீ  அரவிந்தர்  பரிச்சயமில்லாத எளிய  பக்தரின்  கடிதத்திற்காக ஆவலாகக்  காத்திருந்தது.
  2. அன்னையைத் தரிசித்து மெய்மறந்து கையில் இருந்தகாணிக்கையைக் கொடுக்க மறந்த  பக்தரின்  கையிலிருந்து அன்னையே   காணிக்கையை எடுத்துக்  கொண்டது.
  3. தம்  வீட்டில் கல் விழ மந்திரம் செய்தவன் அதனால் உயிர் பிரிய வேண்டிய நேரத்தில் பகவான் அவன் உயிரைக் காப்பாற்றியது.
  4. சோகமே உருவானவர் மனத்தில் முதல் தரிசனம் சோகம் ஆனந்தமாக  மாறி மனம் துள்ளியது.
  5. எளிய  பக்தனின் தேவைக்காக நாட்டு சட்டம் மாறியது.
  6. போகுமிடமெல்லாம் அன்னை நல்லவர் உருவத்தில் நம்மை எதிர்கொண்டது.
  7.  பாஷை தெரியாத இமயமலை அடிவாரத்தில் வழிதவறிய தமிழ்ப்   பெண்மணிக்கு பிரார்த்தனைகள்  அனைத்தும்  தவறிய பொழுது, "அன்னை   என்கிறார்களே, அவராவது என்னைக் காப்பாற்றக்கூடாதா?'' என்றவருக்கு   தமிழ் குரல் கேட்டு அவரைக் காப்பாற்றி தம் மக்களுடன்  சேர்த்தது.
  8. பக்தருக்கு ஆபத்து ஏற்படுத்தியவர்கட்கு பக்தருக்கு எதுவும் தெரியாமல்,   ஆபத்து கொடுத்தவர்  மீது  திரும்பியது.
  9. பிரார்த்தனையால் அக்னி நட்சத்திரத்தில் பெருமழை பெய்து பயிரைக்   காப்பாற்றியது.
  10. வியாபார நிமித்தமாக 8000/-  ரூபாய்க்கு  செய்த  வேலையை சேவை என    அறியாதவர் தொழில் 28லட்சத்திலிருந்து 1200  கோடியானது.
  11. அறிவுடைய உழைப்புக்கு தொழில் 365 மடங்கு பெருகியது.
  12. பொற்கிழியை எவரும் அறியாமல் ஏற்பாடு செய்த பொழுது, 24 மடங்கு பெருகியது.
  13. மார்க்கெட் நம்மை நாடி வருவது.
  14. பணம் நம்மைத் தேடி வருவது.
  15. அறிவில்லாத   காரியங்களை ஆர்வமாகச் செய்யும் சுபாவமுடையவர்  தம்  கை  முதலை அதுபோல்  இழந்தபொழுது  3 முறை  காப்பாற்றியது.
  16. தன்னை அறியாமல்  செய்த சேவையால் விலை போகாத பொருள் 8   மடங்கு விலை போனது.
  17. தான் செய்வது  சேவை என உணராதவர் உணர்ந்து பிரார்த்தனை   செய்தபொழுது 20 ஆண்டுகட்கு  முன்  இழந்த சொத்து  திரும்பி  வந்தது. 
  18. அன்னை  நிழலின் சாயல் தற்செயலாய் வந்தவர்க்கு   25 ஆண்டுகட்கு    முன் செய்த சேவைக்கு  விருது  வந்தது.
  19. மந்திரி   முயன்று   கிடைக்காத வேலை   சேவையை   கசப்பாக ஏற்றவர்க்குக்  கிடைத்தது.
  20. தாயார்   தர   மறுத்த   அன்பை குழந்தைக்கு அபரிமிதமாக ஆசிரியர்கள்  தந்தது.
  21. கருத்த  விகாரமான  முகம்  Life Divine படிப்பதால் கருமை நீங்கி, அழகு பெற்று   சிறந்த அழகெனக் கொண்டாடப்பட்டது.
  22. கடலில் மூழ்கும் அன்பர் அன்னையை அழைக்க மறந்தபொழுது,   அன்னையே உள்ளிருந்து   குரல்   கொடுத்து உயிரைக்  காப்பாற்றியது.
  23. ஆபத்தில் அன்னையை மறந்து  அலறியவர்  குரலுக்கு பதிலாக உயிரைக்   காப்பாற்றியது.
  24. அன்னையை அறியாதவர் பென்சிலின் ஷாக் பெற்று உயிர் போனபின் அவர் மன உறுதிக்கு பலன்தர  அன்னை  சக்தி  அவர் உயிரைக்  காப்பாற்றியது.
  25. சர்க்காருக்கு  தபால்  எழுதிய விண்ணப்பத்திற்கு பதிலாக தந்தி மூலம்   சர்க்கார் சொத்தைக் காப்பாற்றியது.
  26. பாஸ் செய்தால் 70 ரூபாய் சம்பளத்தில் வேலைத் தருவதாகக்   கூறிய   பிரமுகர் பையன்  பெயிலானபின் தரிசனத்தால்  ரூ.250/-இல் வேலைப்  பெற்றுத்  தந்தது.
  27. அடாவடிக்காரன் பணத்தை தானே  திருப்பிக்  கொடுத்தது.
  28. வீட்டிற்கு வந்த அமீனா  ஜப்தி செய்யாமல்  போனது.
  29. ஓராண்டில் தொழில் 15 மடங்கு  பெருகியது.
  30. 6 மாதத்தில் இலாபம் 10 மடங்கானது


REF : -Words of the Mother -II, 

                 
 --------






 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை






No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.