அன்னையின் பாதையில் :
அன்னை நம் ஒவ்வொருவருக்கும் அறிமுகமான முறைகள் பல்வேறு வகையானதாக இருக்கலாம். அவரைப் பற்றி அறிந்தும், அவருடைய பெருமைகளை உணராதோரும் உள்ளனர். ஏன் அன்னை நமக்கு அறிமுகமானார் என்று நினைத்து பார்க்காதவர்கள் கூட இருகின்றனர். அன்னையை அறிவதே அதிர்ஷ்டம் என்று கர்மயோகி அவர்கள் தனது நூல்களில் குறிப்பிட்டு உள்ளார். நமது எண்ணங்களும், தேவைகளும் பூர்த்தியாக அன்னையை பிரார்த்தனை செய்தால் அவைகள் நிறைவேறுகிறது என்பதனையும் தாண்டி, சத்திய ஜீவியத்தின் உண்மையான குறிக்கோள் என்ன, பூரண யோகத்தின் மகத்துவம் என்ன என்பனவற்றை நாம் அறிய முயல வேண்டும். அன்னையை நாம் அறியும் பொழுது, அன்னையின் சத்தியஜீவிய சக்தியின் குறிக்கோளை அறிய முற்படுவதும், முக்கியமானது ஆகும்.
அன்னை, இந்த உலகிற்கு கிடைக்கவேண்டும் என்று விரும்பிய சில விஷயங்களைக் கூறியுள்ளார். அவற்றைக் காண்போம்.
What I want to bring about in the material world, upon the earth.
- Words of the Mother – I1. Perfect Consciousness.
2. Integral Knowledge, omniscience.
3. Power invincible, irresistible, ineluctable; omnipotence.
4. Health, perfect, constant, unshakable; perpetually renewed energy.
5. Eternal youth, constant growth, uninterrupted progress.
6. Perfect beauty, complex and total harmony.
7. Inexhaustible unparalleled riches, control over all the wealth of this world.
8. The gift of healing and giving happiness.
9. Immunity from all accidents, invulnerability against all adverse attacks.
10. Perfect power of expression in all fields and all activities.
11. The gift of tongues, the power of making oneself understood perfectly by all.
12. And all else necessary for the accomplishment of Thy work.
தூய்மையான இறை உணர்வு, பூரண ஞானம், அளவில்லாத சக்தி, முழுமையான ஆரோக்கியம், இளமை, நல்லிணக்கம், செல்வம், சந்தோஷமான வாழ்வு, ஆபத்துகள் இல்லாத வாழ்வு, முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல், சிறந்த பேச்சுத்திறன், இறைவனின் நோக்கத்தினை நாம் திறம்படச் செய்வதற்கான திறன் ஆகிய அனைத்தையும் இந்தப் பூமியில் உள்ள அனைவரும் பெற அன்னை விரும்புகிறார். சத்திய ஜீவிய சக்தி உலகில் வெற்றி பெற்று, முழுமையாக வெளிப்பட்டு, திருவுருமார்ரத்தைக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம், உலகம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுபட வேண்டும் என்று விரும்புகிறார் அன்னை.
- Words of the Mother – II wish
1. personally to be eternally the perfect expression of the Supreme Divine.
2. that the supramental victory, manifestation and transformation should take place at once.
3. that all suffering should disappear for ever from the worlds present and future.
எந்த ஒரு நிகழ்வையும், உலகத்திற்கான ஒரு நிகழ்வானதாகவே அன்னை காண்கிறார். எனவே, நாம் செய்யும் ஒரு செயல் கூட, அது சிறியதோ அல்லது பெரிதோ எதுவானாலும், அவை உலகத்தின் நிகழ்வுகளில் பிரதிபலிக்கப்படுகின்றன.
O, my Lord, my Lord!
What you want of me, let me be.
What you want me to do, let me do.
இது அன்னையின் பிரார்த்தனை. இதுவே நமது பிரார்த்தனையானால், நாம் இறைவனின் நோக்கத்தை நிறைவேற்றும், இறைவனின் கருவியாவோம்.
No comments:
Post a Comment