மலரும் மலர் கூறும் செய்தியும் -19
Visit us at Facebook - https://www.facebook.com/pages/Sathya-Jeeviyam/391301837547664
Flowers are extremely receptive. All
the flowers to which I have given a significance receive exactly the
force I put into them and transmit it.
When
I give them, I give you states of consciousness; the flowers are the
mediums and it all depends on your receptivity whether they are
effective or not.
- The Mother
அன்னை
பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை ,
அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக்
கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய
செய்தியையும் காணலாம்.
இன்றைய மலர் :
Transformation - திருவுருமாற்றம் - The goal of creation Common name: மரமல்லி - Millingtonia hortensis Indian cork tree, Tree jasmine
|
Source : Wikipedia - Photo by - J.M.Garg |
மலரின் பலன் :
திருவுருமாற்றம் - நாம் திருவுருமாற்றம் பெற உதவும் மலர்
ஸ்ரீ அன்னையின் யோகத்தின் குறிக்கோள்களில் ஒன்று திருவுருமாற்றம் எனப்படும் Transformation. அதனைப் பற்றி அன்னையின் கருத்துக்களை அவருடைய WORDS OF THE MOTHER -I என்ற புத்தகத்தில் இருந்து காணலாம்.
இன்றைய செய்தி/ Message of the Day :
Mother says about transformation:
Lord, we are upon earth to accomplish Thy work of transformation.It is our sole will, our sole preoccupation. Grant that it may be also our sole occupation and that all our actions may help us towards this single goal.
- The Mother.
We stand in the Presence of Him who has sacrificed his physical life in order to help more fully his work of transformation. He is always with us, aware of what we are doing, of all our thoughts, of all our feelings and all our actions.
கர்மயோகி அவர்களின் பல்வேறு கட்டுரைகளில் இருந்து..........
தன்னிடம் திருவுருமாற்றத்திற்காகவே பலர் வந்தனர் என்று அன்னை கூறுகிறார்.
தவற்றை விலக்கி, தீமையைப் போக்குவது திருவுருமாற்றம், பல ஜன்மப் பலன் ஒரு
தரிசனத்தில் கிடைக்கும்.
திருவுருமாற்றம் தொடங்கும்வரை கொஞ்சம் கொஞ்சமாகக் கர்மம் கரைகிறது. அதன்
தீவிரம் குறைகிறது என்றாலும் திடீரென முழுவதும் கர்மம் அழியக்கூடியது.
மூன்று திருவுருமாற்றங்கள்:
- 1. சைத்தியத் திருவுருமாற்றம் என்பது அகந்தையினின்று விடுபடுவது.
- 2.
ஆன்மீகத் திருவுருமாற்றம். மனமோ, மனத்தின் சைத்தியப்புருஷனோ செயல்
படுவதற்குப் பதிலாக முனிவர், ரிஷி, யோகி, தெய்வ மனங்களிலுள்ள
சைத்தியப்புருஷன் செயல்படுவது.
- 3. சத்தியஜீவியத் திருவுருமாற்றம்.
- பூரண யோகத்தின் முறை திருவுருமாற்றம். மனம் தன் அறிவை, ஞானமாக மாற்றி
திருவுருமாற்றம் பெற முடியும். உணர்வு நம் ஆசையை அழித்து, பற்றைவிட்டு,
ஆசையை அன்பாக மாற்றி, திருவுருமாற்றமடைய முடியும். உடல் திருவுருமாற்றம்
அடைய அதன் பழக்கங்களை விடவேண்டும்.
- திருவுருமாற்றம் மட்டுமே பழைய செயலை மாற்ற வல்லது. இல்லையெனில் செய்த
காரியம் மாற காலத்திற்குக் காத்திருக்க வேண்டும். அது பல ஆண்டுகளாகலாம்.
அன்னை, ஆயிரமாண்டும் ஆகலாம் என்கிறார். முழு உண்மையில்லாமல் இருக்கலாம்.
உண்மையான வருத்தம் எழலாம். அப்பொழுது பழைய செயலை அருள் மாற்றும். ஆனால்
பெரிய அதிர்ஷ்டம், பெருவெள்ளமாக வாராது. அது நடக்கப் பேரருள் தேவை.
- திரு கர்மயோகி அவர்கள், பூரணயோகம் - முதல் வாயில்கள்
கட்டுரைகளில் இருந்து |
-------------------------------------------------------------------------------------------------------------------------
Tags:
No comments:
Post a Comment