நமது சிந்தனைக்கு...
நமது இந்தப் பிறவிக்கு காரணம் நமது கர்ம பலனே. நமது கர்ம பலன்களால் தான் நாம் வாழ்வில் ஏற்ற, இறக்கங்களைக் காண்கிறோம். இது நாம் அனைவரும் அறிந்ததே. கர்ம பலன்களை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்பது சாதாரண வாழ்வின் விதி. இந்தப் பிறவியிலும், நல்லவர்கள் நல்ல கர்மங்களையும், தீயவர்கள் தீய கர்மங்களையும் சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒரு செயலை செய்யும் போது, அது நல்லதோ, கெட்டதோ, எதுவானாலும், அது ஒரு கர்மமே என்ற எண்ணம், Consciousness நாம் ஒவ்வொருவருக்கும் இருந்து, அதனை சமர்ப்பணம் அல்லது சரணாகதி வழியில் கையாண்டால் மட்டுமே நாம் கர்மத்தில் இருந்து விலக முடியும். இல்லையெனில், நல்ல அல்லது தீய கர்ம பலன் நம் வாழ்வில் பலிக்கிறது. இந்த சட்டங்கள் எல்லாமே, சாதாரண வாழ்வை ஏற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அன்னையின் ஆன்மீக வாழ்வை நாம் பின்பற்ற தொடங்கும் போது, கர்மம் தனது வலுவை இழக்கிறது. அன்னையை ஏற்றவர்களின் வாழ்வில் ஜாதகம் பலிப்பதில்லை என்று கர்மயோகி அவர்கள் குறிப்பிட்டுளார். பல அன்பர்களும் இதனை தம் வாழ்வில் கண்டுள்ளனர். கர்மபலனின் அடிப்படையில் உள்ள எவையும் அன்னையை ஏற்றபின் பலிப்பதில்லை என்பது அன்பர்கள் வாழ்வில் நிகழும் உண்மை. அது எப்படி என்பதைக் காண்போம்.
(Ref: From Questions and Answers 1957-58)
In 1961 when this talk was first published, Mother commented on this phrase:
The past may be completely purified, cleansed, to the point of having no effect on the future, but on condition that one doesn’t change it again into a perpetual present; you yourself must stop the bad vibration in yourself, you must not go on reproducing the same vibration indefinitely.”
அன்னை இங்கு கூறியுள்ளபடி, நமது கடந்தகாலம், அன்னையை ஏற்றபின் முழுமையாக சுத்தி அடைகிறது, தவறுகள் அற்றதாகிறது, தூய்மை அடைகிறது. கடந்தகாலக் கர்மங்களின் பாதிப்பு, நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ, இல்லை. ஆனால் ஒரு நிபந்தனையைக் கூறுகிறார். கர்மத்தில் இருந்து விடுபட, நாம் நமது தவறான எண்ணங்களையும், குணங்களையும் விட்டுவிடுதல் முக்கியமானது. மீண்டும், நாம் கடந்த காலத்தில் செய்த தவறை செய்யும் போது, பழைய கர்மங்கள் எதுவுமே அழிக்க முடியாதது ஆகிவிடும் என்கிறார் ஸ்ரீ அன்னை.
தவறை செய்யும் ஒருவர், அதற்கான கர்ம பலன்களையும், தனது தவறினால் ஏற்படும் பின்விளைவுகளையும் எதிர் கொள்கிறார். அதாவது "கர்மபலனை" சேர்த்துக் கொள்கிறார். அதனை அவர் அனுபவித்துத் தீர்க்க வேண்டியதாகிறது.
ஆனால் அன்னையை நோக்கி அவருடைய வாழ்வு திரும்பும் பொழுது, அன்னையின் இறைசக்திக்கு அவருடைய தவறான கர்ம பலன்களை அழிக்கும் சக்தி இருப்பதால், அவற்றின் எல்லா பாதிப்புகளும் அழிக்கப்படுகின்றன. அவர் தனது கர்மபலனில் இருந்து விடுதலை பெறுகிறார்.
ஆனால், அவர் தான் வாழ்வில் செய்த, அத்தனை தவறான செயல்களையும், முட்டாள்தனமான செயல்களையும், தனது வாழ்வு முழுவதும், மீண்டும் செய்யாமல் இருந்தால் மட்டுமே, இறை சக்தி தொடர்ந்து செயல்பட்டு அத்துணை கர்ம பலன்களையும் அழிக்க முடியும் என்கிறார் அன்னை.
“So long as one repeats one’s mistakes, nothing can be abolished, for one recreates them every minute. When someone makes a mistake, serious or not, this mistake has consequences
in his life, a ‘Karma’ which must be exhausted, but the Divine Grace, if one turns to It, has the power of cutting off the consequences; but for this the fault must not be repeated.
One shouldn’t think one can continue to commit the same stupidities indefinitely and that indefinitely the Grace will cancel all the consequences, it does not happen like that!
திரு. கர்மயோகி அவர்கள் தனது ஆன்மீக ஒளியும் கர்மப் பலனும்என்ற கட்டுரையில் கூறியுள்ள சில கருத்துக்களைக் காண்போம்.
அன்னையை ஏற்ற அனைத்து அன்பர்களும், கர்ம பலன்களில் இருந்து விடுபட்டு, இறைவனின் குறிக்கோள் நிறைவேற, நமது வாழ்கையை செயல்படுத்த வேண்டும். அன்னையின் பாதையில் செல்வோம். கர்மத்தில் இருந்து விடுதலை அடைவோம். அன்னையின் பாதங்களே சரணம்.
"அன்னை, இறைவனின் சக்தி. அன்னை, இறைவனின் திருவுள்ளத்தை மனிதனுடைய பிறவியில் இட்டு நிரப்புவதற்காக ஆர்வத்துடன் செயல்படுகின்றார். அன்னையை ஏற்றுக்கொண்டவர்களின் வாழ்க்கையில் நடக்கும் செயல்களுக்கு மேற்சொன்ன பெரிய தத்துவங்களின் சாயல் உண்டு. அதாவது, மனிதனுடைய கர்மம் கரைந்துபோகின்றது. நெடுநாள் முயன்று பெற வேண்டியவை ஒரே நாளில் கிடைக்கின்றன. கேட்டது கிடைக்கின்றது; கேட்டதற்கு அதிகமாகவும் கிடைக்கின்றது; கேளாதவையும் கிடைக்கின்றன. மனிதன் உப்பு, புளி, மிளகாய், துணி, பணம் என்று மட்டுமே கேட்கப் பழகிக்கொண்டு இருக்கின்றான். மீதி அவனுக்குத் தெரியாது; தோன்றாது. ஸ்ரீ அரவிந்தர் அவனை நோக்கி, ‘இது உயர்ந்த யோகச் சக்தி. நீ எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், ‘எனக்கு இறைவன் மட்டுமே தேவை’ என்று கேட்பது ஒன்றுதான் சிறந்தது’ என்கிறார். "
நன்றி.
No comments:
Post a Comment