இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 20 March 2014

அன்னையின் பாதையில்: இறைவன் எப்பொழுதும் நம்மோடு இருக்கிறார்

நமது சிந்தனைக்கு:

அகங்காரம் அல்லது ego நம்மை சூழ்ந்திருக்கும் போது நாம், வாழ்வில் துன்பங்கள் நேரும்போது, அது நமது அகந்தையால் நாமே ஏற்படுத்திக் கொண்ட ஒன்று என்பதை உணராமல், இறைவன் நம்மை கைவிட்டுவிட்டார் என்று வருந்துகிறோம். அதே சமயத்தில், நாமே எதிர்பாராமல், அதிர்ஷ்டம் அல்லது பெறற்கரிய வாய்ப்பு நம்மை தேடி வரும்போது, சந்தோஷத்தில் திளைக்கும் நம்மில் எத்தனை பேர், அதனை இறைவனின் அருள் என்பதை உணர்ந்து அதற்கு நன்றி கூறுகிறோம்? உண்மை எதுவெனில் நம்முடைய இன்பத்திலும், துன்பத்திலும் இறைவன் நம்மை மறப்பதே இல்லை. நாம்தான்,   நமது இன்ப, துன்ப உணர்வுகளில் சிக்கி இறைவனை மறந்துவிடுகிறோம்.

அன்னையின் பாதையில் :

நமக்கு நெருக்கடியான காலகட்டத்திலும் இறைவன் நம்மோடு இருக்கிறார். நம்மால்தான்  உணர முடிவதில்லை. நாம் இறைவனை பற்றி அறிய முயலும் போது, நம்மால் அவனை உணரவும் முடியும். ஸ்ரீ அன்னை, அரவிந்தர் எழுதிய புத்தகங்களின் மூலம் நாம் நம் மனதில் இறைவனைப் பற்றி எழும் பல சந்தேகங்களுக்கு விடை காண முடியும், இறைவனின் முழு ரூபத்தையும் அறிய முடியும், அவனது Presence ஐ வாழ்வில் உணர முடியும்.

நீங்கள் தனியாக இல்லை என்பதை எப்போதும் மறக்காதீர்கள். இறைவனின்  உதவியும், வழிகாட்டுதலும் எப்போதும் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு ஆறுதலாக, துணையாக உங்களுடன் இருக்கும் ஒரே நண்பன் இறைவனே என்கிறார் ஸ்ரீ அன்னை. இறைவனின் மீது நம்பிக்கை வைத்தால், அவன் உங்களுக்கு எதையும் செய்யக் காத்திருக்கிறான் என்கிறான் ஸ்ரீ அன்னை.

Never forget that you are not alone. The Divine is with you helping and guiding you. He is the companion who never fails, the friend whose love comforts and strengthens. Have faith and He will do everything for you. The more you feel lonely, the more you are ready to perceive His luminous Presence. Have faith and He will do everything for you.
-The Mother

ஸ்ரீ அன்னை இறைவனை பற்றிக் கூறிய மற்றும் சில கருத்துக்கள் -
  • Whatever you do, always remember the Divine. 
  • The Divine manifests upon earth whenever and wherever it is possible. 
  • In each heart, the Divine’s Presence is the promise of future and possible perfections.
  •  It is only in the Divine that we can find perfect peace and total satisfaction.
  -The Mother

கடவுள் நம்மிடம் கோபம் கொள்வாரா? நாம் துன்பப்படும் போது நமக்காக கண்ணீர் சிந்துவாரா, கடவுள் நம்மை தண்டிப்பாரா என்று அன்னையிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அன்னையின் பதில்களைக் காணுங்கள்.

Q:  Does God ever become angry with us? If yes, when? 
Mother's Answer : When you believe He is angry. 

Q: If we shed tears for God, does He ever shed a tear for us?
Mother's Answer: Surely He has deep compassion for you, but His eyes are not of the kind that shed tears.

Q: Mother, Does the Divine punish injustice? Is it possible at all for Him to punish anybody?

Mother's Answer: The Divine does not see things as men do and has no need to punish or reward. Each and every action carries in itself its fruit and its consequences. According to the nature of the action, it brings you near to the Divine or takes you away from Him, and that is the supreme consequence.
                   (இறைவன் உலகில் நடக்கும் எந்தச்  செயலையும், மனிதனின் செயலாக பார்ப்பதில்லை, அதனால், மனிதனை அவர் தண்டிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு செயலும் அதற்கான பலனையும், விளைவுகளையும் கொண்டுள்ளது. அந்த செயலின் இயல்பிற்கேற்ப, அது உங்களை இறைவனின் அருகிலோ அல்லது இறைவனைனிடம் இருந்து உங்களை விலகியோ உங்களை அழைத்துச் செல்கிறது என்கிறார் அன்னை.)

இறைவனை நாம், எவ்வளவு தூரம் அறிய முயல்கிறோமோ, அவ்வளவு தூரம் அவனது அருகாமையையும், நம்முடன் அவன் இருப்பதையும் (presence) உணர முடியும்.





No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.