நமது சிந்தனைக்கு:
ஒவ்வொரு மனிதருக்கும் மனம் என்பது அவருடைய வாழ்வை அல்லது வாழ்வின் போக்கை நிர்ணயிக்கும் முக்கியமான காரணியாக அமைகிறது. அவருடைய மனதில் எழும் எண்ணங்களின் தன்மையை பொறுத்தே, அவருடைய குணமும் அமைகிறது. மனதில் எழும் சந்தோஷம் அல்லது நல்ல உணர்வுகளுக்கு எது காரணமாக அமைகிறது ? சூழ்நிலைகளா? அல்லது நமது Attitude - மனப்பான்மையா?
உதாரணமாக, அதிகமாக கோபப்படும் குணமுள்ள ஒருவர், நான் என்ன செய்வது, நான் கோபப்படும் படியாக உள்ள செயல்கள் மட்டுமே என்னைச் சுற்றி நடக்கின்றன என்று கூறலாம். என்னைச் சுற்றி நடப்பவை எல்லாமே எனக்குச் சாதகமாக நடந்தால், எனக்கு கோபம் என்பதே வராது என்றும் அவர் கூறலாம். ஆனால், சாதகமான அல்லது நல்ல சூழ்நிலைகளிலும் கூட அவரால் கோபப்படாமல் இருக்க முடியாது. இதில், அவர் தம்மையும், தம்மை சூழ்ந்துள்ளவர்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார் இல்லையா? இங்கு மாற வேண்டியது அவரது குணமா, அல்லது சூழ்நிலையா?
நான் எனது ego விட்டேன் என்று கூறும் ஒருவரும், தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களால், தனது மனக் கட்டுபாட்டை இழந்து தனது தாழ்ந்த குணத்தை வெளிப்படுத்தலாம். அப்படி என்றால் இன்னும் அவர் தனது தாழ்ந்த குணங்களை விடவில்லை என்பதே அதன் அர்த்தம் ஆகும், இல்லையா?
நம்மில் பலரும் சூழ்நிலைகளைப் பொறுத்துதான் நமது மனதில் நிம்மதியும், சந்தோஷமும் வருகிறது என்று நினைக்கிறோம். இந்த இடம் சரியில்லை, வேறு இடம் போனால் எனக்கு மன நிம்மதி வரும் என்று தனது இருப்பிடத்தை அல்லது Environment - ஐ மாற்றுபவரும் உண்டு. வேறு இடத்திற்கு போனால் எனது குணம் மாறும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையான மாற்றம் எங்கு தேவைபடுகிறது என்பதை சிலர் உணரவில்லை. உண்மையான மன முன்னேற்றமும், வாழ்வின் உயர்வும், Environment சூழ்நிலை மாற்றத்தினால் மட்டும் கிடைக்குமா?
அன்னையின் பாதையில்:
ஸ்ரீ அன்னை இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பாப்போம்.
.................People think that their condition depends on circumstances. But that is all false. If somebody is a “nervous wreck”, he thinks that if circumstances are favourable he will improve. But, actually, even if they are favourable he will remain what he is. All think they are feeling weak and tired because people are not nice to them. This is rubbish. It is not the circumstances that have to be changed: what is required is an inner change.- The Mother -Questions and Answers III
புறசூழ்நிலை அல்லது நிகழ்வுகள் மாறினால் நமது மனநிலையும் மாறும் என்பதில் உண்மையில்லை என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை. மற்றவர்களிடம் காணப்படும் முரண்பாடு அல்லது அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறைதான் நமது சோர்வுக்கும் , பலவீனத்திற்கும் காரணம் என்று நினைப்பதும் தவறு என்கிறார். மாற வேண்டியது நம் மனமே என்று விளக்குகிறார் ஸ்ரீ அன்னை.
- The Mother -Questions and Answers III.............If you feel that a change is needed, it can be in the attitude (மனப்பான்மை ), giving importance to what is to be said and realised and using the past as a preparation for the future. This is not a very difficult thing to do—and I am quite sure that you will easily do it.
நம் மனதின் தரம் முன்னேறும் போது அல்லது உயர்ந்த எண்ணங்களைப் பெறும் போது, நாம் எந்த சூழ்நிலையிலும், எந்தப் பிரச்சனைகளும் இன்றி வாழ முடியும்.
...............When one is in need of outward changes, it means that he is not progressing within; for he who progresses within can live always under the same outward conditions: they constantly reveal to him new truths. All outward change should be the spontaneous and inevitable expression of an inner transformation. Normally, all improvement of the conditions of physical life should be the blossoming to the surface of a progress realised within.- The Mother -Questions and Answers III
மன நிம்மதிக்காக, இருப்பிடத்தையோ அல்லது நாம் வாழும் சூழ்நிலையையோ மாற்ற வேண்டியது இல்லை. மாற்ற வேண்டியது பிரச்சனைக்கான நமது குணத்தை அல்லது மனப்போக்கை மட்டுமே என்றும் கூறுகிறார் அன்னை. மனதின் மாற்றமே, நமது வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு அல்லது நிகழ்வுகளுக்கு காரணம் என்று தெளிவுபடுத்துகிறார்.
- The Mother -Questions and Answers III
...........By changing house you cannot change character. If you change your character you need not change your environment.
மனம் மாறுவோம். அன்னையின் பாதையில் முன்னேறுவோம். நன்றி.
No comments:
Post a Comment