Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not. இன்றைய மலர் : Globe amaranth - Immortality - வாடாமல்லி- மரணமிலா பெருவாழ்வு
இன்றைய செய்தி/ Message of the Day : மனிதனின் பகுத்தறிவு, எவ்வாறு சில சமயங்களில் அவனது நம்பிக்கையை தடை செய்கிறது? மரணமில்லாத பெருவாழ்வு பெறமுடியும் என்பதை அவன் முதலில் நம்ப வேண்டியதன் அவசியம் ஆகிய சில கருத்துக்களை அன்னை அரவிந்தரின் கருத்துக்களில் இருந்து காணலாம். We shall see later whether this psychic being has the possibility of transforming its body and itself creating an intermediate species between the animal man and superman—we shall study this later—but still, for the moment, it is an immortal soul which becomes more and more conscious of itself in the body of man.- ஸ்ரீ அன்னை ....... Nature makes a form capable of expressing more completely the spirit which this form contains. But if it were like this, a form comes, develops, reaches its highest point and is followed by another form; the others do not disappear, but the individual does not progress. The individual dog or monkey, for instance, belongs to a species which has its own peculiar characteristics; when the monkey or the man arrives at the height of its possibilities, that is, when a human individual becomes the best type of humanity, it will be finished; the individual will not be able to progress any farther.He belongs to the human species, he will continue to belong to it. So, from the point of view of terrestrial history there is a progress, for each species represents a progress compared with the preceding species; but from the point of view of the individual, there is no progress: he is born, he follows his development, dies and disappears. Therefore, to ensure the progress of the individual, it was necessary to find another means; this one was not adequate. But within the individual, contained in each form, there is an organisation of consciousness which is closer to and more directly under the influence of the inner divine Presence, and the form which is under this influence—this kind of inner concentration of energy —has a life independent of the physical form—this is what we generally call the “soul” or the “psychic being”—and since it is organised around the divine centre it partakes of the divine nature which is immortal, eternal.- ஸ்ரீ அரவிந்தர். (Ref: Questions and Answers - 1957) ஸ்ரீ அரவிந்தர் கூறிய இந்த கருத்தின் அடிப்படையில், திரு கர்மயோகி அளிக்கும் விளக்கத்தைக் காணலாம். சார்லஸ் டார்வின் தம் பரிணாமக் கொள்கையில் குரங்கு மனிதனாயிற்று என்றார். மனிதன் சத்தியஜீவனாகும் பரிணாமத்தைப் பொருத்தவரை நாம் டார்வினுடைய குரங்காக இருக்கிறோம். மனிதக் குரங்கு காட்டிற்குரியது. நாமறிந்த மனிதனாக தான் மாறமுடியும் என குரங்குக்குத் தோன்றமுடியாது. மனிதனுக்குக் குரங்கிற்கில்லாத புதியது ஒன்றுண்டு. அது பகுத்தறிவு. பகுத்தறிவால் மனிதன் உலக விஷயங்களைப் பகுத்துணர்கிறான். தன் உள்ளேயுள்ள உணர்வுகளை அறியவும் பகுத்தறிவை மனிதன் பயன்படுத்துகிறான். பழக்கத்தாலும், விலங்குணர்வாலும் இன்று மனிதன் செயல்படுகிறான். ஆனால் பகுத்தறிவு அவற்றை மிஞ்சக் கூடியது. குரங்காக இருந்தபொழுது இருந்த காட்டுவாழ்வைக் கடந்துவந்த மனிதன், வீடு கட்டுகிறான், கடலை ஆள்கிறான், புயலையும், வெள்ளத்தையும் வெல்கிறான், சட்டமியற்றுகிறான், மனம் வளர்ந்து, ஆன்மவிழிப்பை நாடுகிறான். மனிதக்குரங்கால் இவற்றை நினைக்கமுடியுமா? தீர்க்கதரிசனம் அதற்குண்டா? இவற்றையெல்லாம் குரங்கால் சிந்திக்க முடியும் என்று கொண்டாலும், ஒரு நாள் தானே அந்த மனிதனாகப் போவது அதற்குத் தெரியுமா? மனிதன் பகுத்தறிவு பெற்றான்.கற்பனையும், ஞானமும் அவனுக்குண்டு. மனிதவாழ்வைவிட உயர்ந்த வாழ்வை அவனால் நினைக்க முடியும். அந்த வாழ்வுக்குத் தன்னை உயர்த்த வேண்டும் எனவும் அவனால் கருத முடியும். பரம்பொருள் நிலையை மனிதன் அறிவான். அந்நிலை குறையற்றது, விரும்பத்தக்கது எனவும் மனிதனுக்குத் தெரியும். தவறற்ற ஞானமுண்டு என மனிதனுக்குப் புரியும். ஆனந்தம் என்பது வலியற்ற நிலை என்பது அவனுக்கு விளங்கும். தோல்வியற்ற சக்தியை அவனால் கற்பனை செய்யமுடியும். தூய்மையும், பூரணமும் மனிதனுக்கு குறையற்றதாகும், வரையறையற்றதாகும். தெய்வம் அத்தகையது என மனிதன் நினைக்கிறான். அவனறியும் சொர்க்கம் அப்படிப்பட்டதேயாகும். ஆனால் பகுத்தறிவு அவற்றை ஏற்காது. தெய்வம் குறையற்ற நிறைவுள்ளது என மனிதன் நினைப்பது அவன் தன் சிறப்பை அறிவதாகும். "எதிர்காலத்தில் நீயே மனிதனாவாய்'' எனக் குரங்கிடம் கூறியிருந்தால் அது திகைப்புற்றிருக்கும். மனிதனுடைய தெய்வீகக் கனவை உலகில் அடைய முடியும் என்றால் மனிதனுக்கும் திகைப்பேற்படுகிறது. குழப்பத்தை விலக்கி, ஒழுங்கை ஏற்பது பகுத்தறிவு. இல்லாதவற்றை விலக்கி, பயன்படும் நல்லதை ஏற்க பகுத்தறிவு பயன்படும்.அடிப்படையில் பகுத்தறிவு இறைவனை நாடுகிறது. தவற்றை விலக்கவோ, முடிவாக விலக்கவோ பகுத்தறிவு முயலவில்லை. பெரிய உண்மையையும் அது நாடவில்லை. முடிவான சத்தியமே அதன் இலக்கு. அப்படிப்பட்ட சத்தியம், நித்தியம். இருநிலைகள் என்பனவெல்லாம் முடிவில் அச்சத்தியத்தை நாடுகின்றன. இன்று நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் உயர்ந்த முறைகள் அப்படிக் கூறவில்லை. எனினும் அது முடியும். அந்த ஞானம், பகுத்தறிவுக்குச் சொந்தமானது. கலப்பற்ற சந்தோஷத்தை மனிதனால் நினைக்க முடியும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். துன்பம் அழியாது என மனம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அதுவே துன்பத்திற்குக் காரணம். இதயத்தின் பின்னுள்ள நம்பிக்கையைப் பகுத்தறிவு எட்ட முடியும். அது நம்பிக்கையின் உறைவிடம். அந்த நம்பிக்கையால் குறையை விலக்க முடியும் என்று நம்பமுடியும். இதுவே பகுத்தறிவின் பங்கு. உடலிடம் வந்தால் இதயம் செயலற்றுப்போவதை பகவான் சுட்டிக் காட்டுகிறார். நம்மால் வலி அழியக்கூடியது என நம்ப முடியாது. அதனால்தான் இதுவரை எவரும் மரணம் அழியக் கூடியது என்று நினைக்கவில்லை. - திரு. கர்மயோகி அவர்கள் REF: http://www.karmayogi.net/?q=swaroopamsubhavam1 |
-------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment