இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Thursday, 27 February 2014

அன்னையின் பாதையில்... தாவரங்களுக்கும் உணர்வு உண்டு.

அன்னையின் பாதையில்...  தாவரங்களுக்கும் உணர்வு உண்டு.
File:The Great Banyan Tree, Auroville, Pondicherry.JPG
Img soure Wiki commons - Tapanmajumdar                    The 100+ old tree of Auroville

ஜடப் பொருட்களுக்கும் உணர்வு உண்டு என்பது அன்னையின் ஆன்மீகத்தில் உண்டு. அவற்றை எவ்வளவு கவனத்துடன் கையாள்கிறோம் என்பது முக்கியமான ஒன்று.  அதேபோல் செடி கொடிகளுக்கும், மரங்களுக்கும் உணர்வு உண்டு என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட ஒன்று. சிலவகை இசையினை கேட்பதன் மூலமாக, தாவரங்கள் தங்களுடைய வளர்ச்சியை அதிகமாக பெறுகின்றன. அவைகளுக்கும் சந்தோசம் மற்றும் பய உணர்வு உண்டு எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

ஸ்ரீ அன்னை பாண்டிச்சேரியில் இருந்த போது, ஆரோவில் நகரில் ஒரு மரம் தன்னிடம் புகார் கூறுவதாக தியானத்தில் உணர்ந்தார். அதற்கு என்ன ஆயிற்று என்பதற்காக சிலரை அங்கு அனுப்பிய போது, அந்த மரத்தில் காயங்களை ஏற்படுத்தும் விதமாக கோடாரிகள் கொத்தி வைக்கப் பட்டிருந்தாம். பிரச்னையை உணர்ந்த அவர்களின் உதவியால், அவைகள் உடனே அப்புறப் படுத்தப்பட்டதாம். மரத்தின் உணர்வுடன் அவர் கொண்ட தொடர்பு, அதனை வலியில் இருந்து காப்பாற்றியது என்று இதன் மூலம் அறிகிறோம்.

அன்னை இது பற்றி கூறும் சில விஷயங்களைக் காணலாம்.


Sweet Mother, can a plant grow otherwise than physically?

In plants there is a great vital force. And this vital force has a considerable action. And there is also the genius of the species,which is a consciousness. There is already an active consciousness at work in plants. And in the genius of the species there is a beginning—quite embryonic, but still—there is a beginning of response to the psychic influence, and certain flowers are clearly the expression of a psychic attitude and aspiration in the plant, not very conscious of itself, but existing like a spontaneous impetus. It is quite certain, for instance, that if you have a special affection for a plant, if, in addition to the material care you give it, you love it, if you feel close to it, it feels this; its blossoming is much more harmonious and happy, it grows better, it lives longer.All this means a response in the plant itself. Consequently, there is the presence there of a certain consciousness; and surely the plant has a vital being.

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு. நீங்கள் ஒரு செடி அல்லது மரத்திற்கு, நீர் மற்றும் உரம் அளிப்பது போன்ற சாதாரண பராமரிப்பு வேலைகளை செய்தாலும், அவைகளைத் தாண்டி உங்களின் உணர்வு பூர்வமான அன்பை அவைகள் பெற்றால், சாதாரணமாக தரும் பலனை விட பன்மடங்கு மகிழ்வுடன் பலன் அளிக்கின்றன. அதன் மூலம் தங்களின் அன்பை, உணர்வை வெளிக்காட்டுகின்றன என்கிறார் அன்னை.

Mother, does a plant have its own individuality and does it also reincarnate after death?


This may happen, but it is accidental. There are trees—trees especially—which have lived long and can be the home of a conscious being, a vital being. Generally it is vital entities which take shelter in trees, or else certain beings of the vital plane which live in forests—as certain beings of the vital live in water. There were old legends like that, but they were based on facts. The plant serves as home and shelter, but the being is not created by the plant itself!

மனிதர்களைப் போல சில சமயங்களில், பலநூறு காலம் வாழ்ந்த மரங்களாலும் பிறவி எடுக்க முடியும். Vital Entities அல்லது உணர்வு நிலையில் வாழ்பவை காடுகளிலும், நீரிலும் கூட வாழமுடியும். அவை இதுபோன்ற மரங்களை தங்களது இருப்பிடமாக கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் அன்னை.


Ref: Questions and Answers 1956

Tuesday, 25 February 2014

மலரும், அது கூறும் செய்தியும் -9



Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Globe amaranth - Immortality -
வாடாமல்லி- மரணமிலா பெருவாழ்வு 


File:Gomphrena globosa.jpg
Image Source : Wiki Commons - Prenn



இன்றைய செய்தி/ Message of the Day :

மனிதனின் பகுத்தறிவு, எவ்வாறு சில சமயங்களில் அவனது நம்பிக்கையை  தடை செய்கிறது? மரணமில்லாத பெருவாழ்வு பெறமுடியும் என்பதை அவன் முதலில் நம்ப வேண்டியதன் அவசியம் ஆகிய சில கருத்துக்களை அன்னை அரவிந்தரின் கருத்துக்களில் இருந்து காணலாம்.

We shall see later whether this psychic being has the possibility of transforming its body and itself creating an intermediate species between the animal man and superman—we shall study this later—but still, for the moment, it is an immortal soul which becomes more and more conscious of itself in the body of man.
- ஸ்ரீ அன்னை
....... Nature makes a form capable of expressing more completely the spirit which this form contains. But if it were like this, a form comes, develops, reaches its highest point and is followed by another form; the others do not disappear, but the individual does not progress. The individual dog or monkey, for instance, belongs to a species which has its own peculiar characteristics; when the monkey or the man arrives at the height of its possibilities, that is, when a human individual becomes the best type of humanity, it will be finished; the individual will not be able to progress any farther.He belongs to the human species, he will continue to belong to it. So, from the point of view of terrestrial history there is a progress, for each species represents a progress compared with the preceding species; but from the point of view of the individual, there is no progress: he is born, he follows his development, dies and disappears. Therefore, to ensure the progress of the individual, it was necessary to find another means; this one was not adequate. But within the individual, contained in each form, there is an organisation of consciousness which is closer to and more directly under the influence of the inner divine Presence, and the form which is under this influence—this kind of inner concentration of energy —has a life independent of the physical form—this is what we generally call the “soul” or the “psychic being”—and since it is organised around the divine centre it partakes of the divine nature which is immortal, eternal.
- ஸ்ரீ அரவிந்தர். (Ref: Questions and Answers - 1957)

ஸ்ரீ அரவிந்தர் கூறிய இந்த கருத்தின் அடிப்படையில், திரு கர்மயோகி அளிக்கும் விளக்கத்தைக் காணலாம்.



 சார்லஸ் டார்வின் தம் பரிணாமக் கொள்கையில் குரங்கு மனிதனாயிற்று என்றார். மனிதன் சத்தியஜீவனாகும் பரிணாமத்தைப் பொருத்தவரை நாம் டார்வினுடைய குரங்காக இருக்கிறோம். மனிதக் குரங்கு காட்டிற்குரியது. நாமறிந்த மனிதனாக தான் மாறமுடியும் என குரங்குக்குத் தோன்றமுடியாது. மனிதனுக்குக் குரங்கிற்கில்லாத புதியது ஒன்றுண்டு. அது பகுத்தறிவு. பகுத்தறிவால் மனிதன் உலக விஷயங்களைப் பகுத்துணர்கிறான். தன் உள்ளேயுள்ள உணர்வுகளை அறியவும் பகுத்தறிவை மனிதன் பயன்படுத்துகிறான். பழக்கத்தாலும், விலங்குணர்வாலும் இன்று மனிதன் செயல்படுகிறான். ஆனால் பகுத்தறிவு அவற்றை மிஞ்சக் கூடியது. குரங்காக இருந்தபொழுது இருந்த காட்டுவாழ்வைக் கடந்துவந்த மனிதன், வீடு கட்டுகிறான், கடலை ஆள்கிறான், புயலையும், வெள்ளத்தையும் வெல்கிறான், சட்டமியற்றுகிறான், மனம் வளர்ந்து, ஆன்மவிழிப்பை நாடுகிறான். மனிதக்குரங்கால் இவற்றை நினைக்கமுடியுமா? தீர்க்கதரிசனம் அதற்குண்டா? இவற்றையெல்லாம் குரங்கால் சிந்திக்க முடியும் என்று கொண்டாலும், ஒரு நாள் தானே அந்த மனிதனாகப் போவது அதற்குத் தெரியுமா? மனிதன் பகுத்தறிவு பெற்றான்.கற்பனையும், ஞானமும் அவனுக்குண்டு. மனிதவாழ்வைவிட உயர்ந்த வாழ்வை அவனால்  நினைக்க முடியும். அந்த வாழ்வுக்குத் தன்னை உயர்த்த வேண்டும் எனவும் அவனால் கருத முடியும். பரம்பொருள்  நிலையை மனிதன் அறிவான். அந்நிலை குறையற்றது, விரும்பத்தக்கது எனவும் மனிதனுக்குத் தெரியும். தவறற்ற ஞானமுண்டு என மனிதனுக்குப் புரியும். ஆனந்தம் என்பது வலியற்ற நிலை என்பது அவனுக்கு விளங்கும். தோல்வியற்ற சக்தியை அவனால் கற்பனை செய்யமுடியும். தூய்மையும், பூரணமும் மனிதனுக்கு குறையற்றதாகும், வரையறையற்றதாகும். தெய்வம் அத்தகையது என மனிதன் நினைக்கிறான். அவனறியும் சொர்க்கம் அப்படிப்பட்டதேயாகும். ஆனால் பகுத்தறிவு அவற்றை ஏற்காது. தெய்வம் குறையற்ற நிறைவுள்ளது என மனிதன் நினைப்பது அவன் தன் சிறப்பை அறிவதாகும். "எதிர்காலத்தில் நீயே மனிதனாவாய்'' எனக் குரங்கிடம் கூறியிருந்தால் அது திகைப்புற்றிருக்கும். மனிதனுடைய தெய்வீகக் கனவை உலகில் அடைய முடியும் என்றால் மனிதனுக்கும் திகைப்பேற்படுகிறது.


குழப்பத்தை விலக்கி, ஒழுங்கை ஏற்பது பகுத்தறிவு. இல்லாதவற்றை விலக்கி, பயன்படும் நல்லதை ஏற்க பகுத்தறிவு பயன்படும்.அடிப்படையில் பகுத்தறிவு இறைவனை நாடுகிறது. தவற்றை விலக்கவோ, முடிவாக விலக்கவோ பகுத்தறிவு முயலவில்லை. பெரிய உண்மையையும் அது நாடவில்லை. முடிவான சத்தியமே அதன் இலக்கு. அப்படிப்பட்ட சத்தியம், நித்தியம். இருநிலைகள் என்பனவெல்லாம் முடிவில் அச்சத்தியத்தை நாடுகின்றன. இன்று நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தும் உயர்ந்த முறைகள் அப்படிக் கூறவில்லை. எனினும் அது முடியும். அந்த ஞானம், பகுத்தறிவுக்குச் சொந்தமானது. கலப்பற்ற சந்தோஷத்தை மனிதனால் நினைக்க முடியும் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். துன்பம் அழியாது என மனம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அதுவே துன்பத்திற்குக் காரணம். இதயத்தின் பின்னுள்ள நம்பிக்கையைப் பகுத்தறிவு எட்ட முடியும். அது நம்பிக்கையின் உறைவிடம். அந்த நம்பிக்கையால் குறையை விலக்க முடியும் என்று நம்பமுடியும். இதுவே பகுத்தறிவின் பங்கு. உடலிடம்  வந்தால் இதயம் செயலற்றுப்போவதை பகவான் சுட்டிக் காட்டுகிறார். நம்மால் வலி அழியக்கூடியது என நம்ப முடியாது. அதனால்தான் இதுவரை எவரும் மரணம் அழியக் கூடியது என்று நினைக்கவில்லை.

- திரு. கர்மயோகி அவர்கள்  REF: http://www.karmayogi.net/?q=swaroopamsubhavam1





 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,Globe amaranth, Immortalit, வாடாமல்லி- மரணமிலா பெருவாழ்வு






Thursday, 20 February 2014

அன்னையின் பாதையில்... சத்திய ஜீவிய சக்தி

அன்னையின் பாதையில்...

சத்திய ஜீவிய சக்தி (Supramental Force), இந்தப் பூவுலகில் ஸ்ரீ அரவிந்தரின் யோகத்தினால் வந்தது. ஸ்ரீ அன்னை Feb29 ஐ இறைவனின் நாளாக அறிவித்தார். சத்திய ஜீவிய  சக்தியின் நோக்கம் மற்றும் அது செயல்படும் விதம் பற்றிய பல விஷயங்களை அன்னை தனது நூல்களில் குறிப்பிட்டுளார். அவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அதில் Question and Answers  தலைப்பில் அன்னை கூறிய கருத்துக்கள்  இங்கு இடம் பெற்று உள்ளன.

MESSAGES FOR THE SUPRAMENTAL MANIFESTATION UPON EARTH 29 FEBRUARY

1956 The Golden Day
Henceforth the 29th February will be the day of the Lord. 
- The Mother

(On 1956) During the common meditation on Wednesday This evening the Divine Presence, concrete and material, was there present amongst you. I had a form of living gold, bigger than the universe, and I was facing a huge and massive golden door which separated the world from the Divine. As I looked at the door, I knew and willed, in a single movement of consciousness, that “the time has come,” and lifting with both hands a mighty golden hammer I struck one blow, one single blow on the door and the door was shattered to pieces. Then the supramental Light and Force and Consciousness rushed down upon earth in an uninterrupted flow. 
 Drop all fear, all strife, all quarrels, open your eyes and your hearts—the Supramental Force is there.

 The supramental force has the power to transform even the darkest hate into luminous peace.


..The adverse forces know quite well that in the supramental world they will automatically disappear: having no more use, they will be dissolved without the need to do anything, simply through the presence of the supramental force. That is why they rush about in a rage, negating everything, everything.
 - - The Mother, Question and Answers 

Tuesday, 18 February 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - 8


Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :
Purity - Jasminum Jasmine, Jessamine    தூய்மை

File:മുല്ലപ്പൂവ്.jpg
http://commons.wikimedia.org


இன்றைய செய்தி/ Message of the Day :

...............So long as you are in a state full of strength, full of purity—that is, in a state of invincibility, if anybody does anything against you, that falls back upon him automatically, as when you throw a tennis-ball against the wall, it comes back to you; the thing comes back to them exactly in the same way, sometimes with a greater force, and they are
punished by their own wickedness.
But naturally it all depends on the person against whom the magic is done, on his inner force and purity....

நாம் முழு சக்தியுடனும், முழு தூய்மையுடனும் இருக்கும் போது, வெல்ல முடியாத நிலையில் உள்ள போது, நமக்கு எதிராக செய்யப்படும் செயல்கள் யாவும்,  சுவற்றில் வீசப்பட்ட பந்து, மீண்டும் திரும்புவதைப் போல, தானாகவே அவர்களையே சென்று அடைகின்றன.

Sweet Mother, to be pure means what?
Mother : To be pure, what does it mean? One is truly perfectly pure only when the whole being, in all its elements and all its movements, adheres fully, exclusively, to the divine Will. This indeed is total purity.
         
          நம்மில் உள்ள எல்லாமே, இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செயல்பட்டால் அதுவே தூய்மை என்பதாகும்.

REF : -Questions and Answers 1954,1956, The Mother, 

                                              ---------------------------

"மனம் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே அன்னையின் முறை. தெய்வத்திடம் ஆதாயத்தை எதிர்பார்ப்பது அழகில்லை என்பது அன்னையின் பாங்கு. நம்மால் அன்னையிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. கேட்கலாம், எதையும் கேட்கலாம் என அன்னை கூறியுள்ளார். நம் மனம் தூய்மையாக இல்லை. தூய்மை என்றால் என்ன என்று நமக்குத் தெரியவில்லை. அதனால் அன்னை சக்தி நம்முள் செயல்படுவதில்லை. ஆபத்தான நேரத்தில் ஆழ்ந்த பிரார்த்தனை வேதனையை விலக்குகிறது. மற்றபடி வாய்ப்பு வருவதில்லை. வந்தால் பலிப்பதில்லை. அதுவே நம் நிலை.     "
- திரு. கர்மயோகி அவர்கள்  REF: http://www.karmayogi.net/?q=swaroopamsubhavam1





 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,தூய்மை






Thursday, 13 February 2014

அன்னையின் பாதையில் : சூழ்நிலைகளும், நம் மனதின் மாற்றமும்


நமது சிந்தனைக்கு:

ஒவ்வொரு மனிதருக்கும் மனம் என்பது அவருடைய வாழ்வை அல்லது வாழ்வின் போக்கை நிர்ணயிக்கும் முக்கியமான காரணியாக அமைகிறது.  அவருடைய மனதில் எழும் எண்ணங்களின் தன்மையை பொறுத்தே, அவருடைய குணமும் அமைகிறது. மனதில் எழும் சந்தோஷம் அல்லது நல்ல உணர்வுகளுக்கு எது காரணமாக அமைகிறது ? சூழ்நிலைகளா? அல்லது நமது Attitude - மனப்பான்மையா?


உதாரணமாக, அதிகமாக கோபப்படும் குணமுள்ள ஒருவர், நான் என்ன செய்வது, நான் கோபப்படும் படியாக உள்ள செயல்கள் மட்டுமே என்னைச் சுற்றி நடக்கின்றன என்று கூறலாம். என்னைச் சுற்றி நடப்பவை எல்லாமே எனக்குச் சாதகமாக நடந்தால், எனக்கு கோபம் என்பதே வராது என்றும் அவர் கூறலாம். ஆனால், சாதகமான அல்லது நல்ல சூழ்நிலைகளிலும் கூட அவரால் கோபப்படாமல் இருக்க முடியாது. இதில், அவர் தம்மையும், தம்மை சூழ்ந்துள்ளவர்களையும் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார் இல்லையா? இங்கு மாற வேண்டியது அவரது குணமா, அல்லது சூழ்நிலையா?

நான் எனது ego  விட்டேன் என்று கூறும் ஒருவரும், தன்னைச் சுற்றி நடக்கும் செயல்களால், தனது மனக் கட்டுபாட்டை இழந்து தனது தாழ்ந்த குணத்தை வெளிப்படுத்தலாம். அப்படி என்றால் இன்னும் அவர் தனது தாழ்ந்த குணங்களை விடவில்லை என்பதே அதன் அர்த்தம் ஆகும், இல்லையா?

நம்மில் பலரும் சூழ்நிலைகளைப் பொறுத்துதான் நமது மனதில் நிம்மதியும், சந்தோஷமும் வருகிறது என்று நினைக்கிறோம். இந்த இடம் சரியில்லை, வேறு இடம் போனால் எனக்கு மன நிம்மதி வரும் என்று தனது இருப்பிடத்தை  அல்லது Environment - ஐ மாற்றுபவரும் உண்டு. வேறு இடத்திற்கு போனால் எனது குணம் மாறும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையான மாற்றம் எங்கு தேவைபடுகிறது என்பதை சிலர் உணரவில்லை. உண்மையான மன முன்னேற்றமும், வாழ்வின் உயர்வும், Environment  சூழ்நிலை மாற்றத்தினால் மட்டும் கிடைக்குமா?

அன்னையின் பாதையில்:

ஸ்ரீ அன்னை இதுபற்றி என்ன கூறுகிறார் என்று பாப்போம்.
 .................People think that their condition depends on circumstances. But that is all false. If somebody is a “nervous wreck”, he thinks that if circumstances are favourable he will improve. But, actually, even if they are favourable he will remain what he is. All think they are feeling weak and tired because people are not nice to them. This is rubbish. It is not the circumstances that have to be changed: what is required is an inner change.
- The Mother -Questions and Answers III
 
புறசூழ்நிலை அல்லது நிகழ்வுகள் மாறினால் நமது மனநிலையும் மாறும் என்பதில் உண்மையில்லை என்று கூறுகிறார் ஸ்ரீ அன்னை. மற்றவர்களிடம் காணப்படும் முரண்பாடு அல்லது அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறைதான் நமது சோர்வுக்கும் , பலவீனத்திற்கும் காரணம் என்று நினைப்பதும் தவறு என்கிறார். மாற வேண்டியது நம் மனமே என்று விளக்குகிறார் ஸ்ரீ அன்னை.

.............If you feel that a change is needed, it can be in the attitude (மனப்பான்மை ), giving importance to what is to be said and realised and using the past as a preparation for the future. This is not a very difficult thing to do—and I am quite sure that you will easily do it.
- The Mother -Questions and Answers III
 
நம் மனதின் தரம் முன்னேறும் போது அல்லது உயர்ந்த எண்ணங்களைப் பெறும் போது, நாம் எந்த சூழ்நிலையிலும், எந்தப் பிரச்சனைகளும் இன்றி வாழ முடியும்.

...............When one is in need of outward changes, it means that he is not progressing within; for he who progresses within can live always under the same outward conditions: they constantly reveal to him new truths. All outward change should be the spontaneous and inevitable expression of an inner transformation. Normally, all improvement of the conditions of physical life should be the blossoming to the surface of a progress realised within.
- The Mother -Questions and Answers III
 
மன நிம்மதிக்காக, இருப்பிடத்தையோ அல்லது நாம் வாழும் சூழ்நிலையையோ மாற்ற வேண்டியது இல்லை. மாற்ற வேண்டியது பிரச்சனைக்கான நமது குணத்தை அல்லது மனப்போக்கை மட்டுமே என்றும்  கூறுகிறார் அன்னை. மனதின் மாற்றமே, நமது வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளுக்கு அல்லது நிகழ்வுகளுக்கு காரணம் என்று தெளிவுபடுத்துகிறார்.

...........By changing house you cannot change character. If you change your character you need not change your environment.
- The Mother -Questions and Answers III

மனம் மாறுவோம். அன்னையின் பாதையில் முன்னேறுவோம். நன்றி.

Tuesday, 11 February 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - 7



Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :

Absolute Truthfulness:
Solandra_maxima

File:Solandra maxima C.jpg
Source : http://commons.wikimedia.org/wiki/File:Solandra_maxima_C.jpg


Power of Truth in the Subconscient
Tecomaria capensis



File:Tecomariacapensis.jpg
Source : http://en.wikipedia.org/wiki/File:Tecomariacapensis.jpg


இன்றைய செய்தி/ Message of the Day :



Truth alone can give to the world the power of receiving and manifesting the Divine’s Love.

 உண்மை ஒன்றுதான், இறைவனின் அன்பை இந்த உலகிற்குக் பெற்றுத் தரும்.
-------------------------------------------------------------------------------------------------

The mind must be silenced and replaced by the Truth-Consciousness (உண்மை அல்லது சத்தியம் என்ற உணர்வால்)—a consciousness of the whole harmonised with a consciousness of detail.

-------------------------------------------------------------------------------------------------
The Truth-Consciousness can manifest only in those who are rid of the ego.
        தனது அகங்காரத்தை விட்டவர்களால் மட்டுமே உண்மை, சத்தியம் என்ற Consciousness-ஐ வெளிக்கொணர முடியும்.
         -------------------------------------------------------------------------------------------------
        The Mother says:
Somebody asked me, —
“In the work of Transformation, who is the slowest to do
his part, man or God?”
I replied, —
Man finds that God is too slow to answer his prayers.
God finds that man is too slow to receive His influence.
But for the Truth-Consciousness all is going on as it ought
to go.
      -------------------------------------------------------------------------------------------------
  
Truth is supreme harmony and supreme delight.
All disorder, all suffering is falsehood.
Thus it can be said that illnesses are falsehoods of the body
and, consequently, doctors are soldiers of the great and noble army fighting in the world for the conquest of Truth.

-Questions and Answers , The Mother, 




 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,கர்மபலன்களில் இருந்து விடுதலை






Thursday, 6 February 2014

அன்னையின் பாதையில்... பிறருடைய அபிப்பிராயங்களுக்காக மட்டுமே நாம் நம்மை நல்லவராக காட்டிக் கொள்ளலாமா ?

அன்னையின் பாதையில்...

பிறருடைய அபிப்பிராயங்களுக்காக மட்டுமே நாம் நம்மை நல்லவராக காட்டிக் கொள்ளலாமா ?

நமது சிந்தனைக்கு:

நாம் நல்லவர்தானா? அல்லது பிறர் குறை கூறுவார்கள் என்பதற்காக நல்லவர்கள் போல காட்டிக்கொள்ளும் செயல்களைச் செய்கிறோமா? அன்னையை ஏற்ற ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி இது. முதலாளியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று மட்டுமே ஒரு தொழிலாளி தரும் கூடுதல் உழைப்பு, தனக்குப் பிடித்த ஆசிரியரிடம் நல்ல பெயர் வாங்க மட்டுமே முயற்சி செய்யும் ஒரு மாணவன், இனிக்க இனிக்கப் பேசும் மனிதர்கள் என சில உதாரணங்களைக் கூறலாம். அந்தத தொழிலாளி இயல்பாக, வீட்டில் சோம்பேறித்தனம் உள்ளவராக இருக்கலாம். அந்த மாணவன் படிப்பில் ஈடுபாடு இல்லாதவனாக கூட இருக்கலாம். பிறரிடம் நல்ல பெயர் வாங்க மட்டுமே இனிமையாக பேசுபவர்கள், வீட்டில் கடுமையை காட்டலாம். இல்லையா? இவ்வாறு நாம் செய்யும் பல செயல்களில் போலித்தனம், பொய்யும்  நாம் அறிந்தோ, அறியாமலோ கலந்து விடுகிறது.

நமக்கு பிடிக்கிறதோ அல்லது பிடிக்கவில்லையோ, பிறரை திருப்தி செய்யும் பொருட்டோ அல்லது நாம் நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ளும் பொருட்டோ, நாம் சில நல்ல செயல்களைச் செய்கிறோம். எப்படி பார்த்தாலும், நமது இயற்கையான குணத்திற்கு அல்லது மனநிலைக்கு மாறாக போலித்தனமாக நாம் செய்யும் எந்த செயலும் உண்மைக்கு புறம்பானதுதானே?

அன்னையின் வாழ்வில் செல்வோருக்கு, பொய்யும் போலித்தனமும் என்றும் உதவாது என்பதை நாம் அறிவோம். மேற்கூறியது போல், பிறரின் நல்ல அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக மட்டுமே நாம் செய்யும் செயல்கள், நமது Weakness ஐ பலவீனத்தைக் குறிக்கிறது. அன்னை இதுபற்றி என்ன கூறுகிறார் என்று காண்போம்.

....................Oh, Lord!... To appear good in others’ eyes, to have public approval? Is that it?

First, the best way is to ask oneself why one values others’ approval. For what particular reason, because there are many reasons.... If you have a career and your career depends on the good opinion others have of you, then that’s a utilitarian reason. If you have a little, or much, vanity and like compliments, that’s another reason. If you attach great value to others’ opinion of you because you feel they are wiser or more enlightened or have more knowledge, that’s yet another reason. There are many others still, but these are the three chief reasons: utility, vanity —usually this is the strongest—and progress....................
.............

Finally, if one is sincere one desires no other approval except that of one’s teacher or one’s guru or of the Divine Himself. And that’s the first step towards a total cure of this little weakness of wishing to make a good impression on people........

............Indeed, it is better not to care at all about what others think of you, whether it is good or bad.
நம்முடைய, இந்த சிறுமையில் இருந்து நாம் அகல, நம்முடைய குரு அல்லது இறைவனின் நல்ல அபிப்பிராயங்களைப் பெறுவது மட்டுமே,  ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கவேண்டும். இறைவன் நம் மேல் வைத்திருக்கும் அபிப்பிராயமும், அவன் தரும் அங்கீகாரமும் மட்டுமே நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும் . மற்றவர்களின் அபிப்பிராயங்களை, அவை நல்லதோ கெட்டதோ, அவைகளை சட்டை செயாமல் இருப்பதே நல்லது என்றும் கூறுகிறார். 
But in any case, before reaching this stage, it would be less ridiculous to try to find out the impression you make on others simply by taking them as a mirror in which you see your reflection more exactly than in your own consciousness which is always over-indulgent to all your weakness, blindness, passions, ignorance.
ஆனால், இந்தக் கட்டத்தை அடைவது எளிதல்ல. மற்றவர்களை, நமது குணங்களைக் காட்டும் கண்ணாடியாகக் கொள்வது, இந்த மனநிலையை அடைய உதவி செய்யும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் நமது அறியாமை, Weakness அல்லது பலவீனங்கள், நம்முடைய விருப்பு வெறுப்பு என எல்லாவற்றையும் அவர்களது செயல்பாடுகளின் மூலம் அறியலாம் என்கிறார் அன்னை.

.....when you have the chance of getting information that’s a little more trustworthy and reliable about the condition you are in, it is better not to ask the opinion of others, but only to refer all to the vision of the guru.



Tuesday, 4 February 2014

மலரும் மலர் கூறும் செய்தியும் - 6

Flowers are extremely receptive. All the flowers to which I have given a significance receive exactly the force I put into them and transmit it.  
 When I give them, I give you states of consciousness; the flowers are the mediums and it all depends on your receptivity whether they are effective or not.
-  The Mother

 அன்னை பல நூறு மலர்களுக்குரிய சிறப்பு அம்சங்களையும் அவற்றை ஸ்ரீ அன்னை , அரவிந்தருக்குச் சமர்ப்பிப்பதால் நாம் பெரும் பலன்களையும் பற்றிக் கூறியுள்ளார். இன்றைய பகுதியில் மலரின் பலன்களையும், அதனோடு தொடர்புடைய செய்தியையும் காணலாம்.            

இன்றைய மலர்   :

Liberation:
Careya arborea

Physical liberation or liberation from the law of material cause and effect. கர்மபலன்களில் இருந்து விடுதலை 


Wild Guava

Image Courtesy: Flowersofindia.net

Common name: Wild Guava, Ceylon Oak, Patana Oak • Hindi: कुम्भी Kumbhi • Marathi: कुम्भा Kumbha • Tamil: Aima, Karekku, Puta-tanni-maram • Malayalam: Alam, Paer, Peelam, Pela • Telugu: araya, budatadadimma, budatanevadi, buddaburija • Kannada: alagavvele, daddal •  


இன்றைய செய்தி/ Message of the Day :
The Mother says:

.....In summary, austerity in feelings consists then of giving up all emotional attachment, of whatever nature, whether for a person, for the family, for the country or anything else, in order to concentrate on an exclusive attachment for the Divine Reality. This concentration will culminate in an integral identification and will be instrumental to the supramental realisation upon earth. 
 
This leads us quite naturally to the four liberations which will be the concrete forms of this achievement.

The liberation of the feelings will be at the same time the  liberation from suffering, in a total realisation of the supramental oneness. 

The mental liberation or liberation from ignorance will establish in the being the mind of light or gnostic consciousness, whose expression will have the creative power of the Word.

The vital liberation or liberation from desire gives the individual will the power to identify itself perfectly and consciously with the divine will and brings constant peace and serenity as well as the power which results from them. 
 
Finally, crowning all the others, comes the physical liberation or liberation from the law of material cause and effect. By a total self-mastery, one is no longer a slave of Nature's laws which make men act according to subconscious or semi-conscious impulses and maintain them in the rut of ordinary life. With this liberation one can decide in full knowledge the path to be taken, choose the action to be accomplished and free oneself from all blind determinism, so that nothing is allowed to intervene in the course of one's life but the highest will, the truest knowledge, the supramental consciousness.
Emotions - உணர்வுகளில் இருந்து விடுபடுவது, நம்மை துன்பங்களில் இருந்து விடுவித்து, சத்தியஜீவியத்துடன் நம்மை சேர்ந்திருக்கச் செய்கிறது.
உடலானது (Physical)  கர்மங்களில் இருந்து விடுபடுவதன் மூலம், நம் வாழ்வு விதியில் இருந்து விடுபடுகிறது.

உணர்வின் (Vital) பிடியில் இருந்து விடுபடும் பொழுது ஆசைகளில் இருந்து விடுபடுவதால், ஒருவர் இறைவனின் எண்ணத்தை அறிய முடியும்.
மனத்தின் (Mental) பிடியில் இருந்து விடுதலை அடையும் பொழுது, மனம் அறியாமையை விட்டு, அன்னையின் ஒளியாலும், ஞானத்தாலும் நிரம்புகிறது.
Book : On Education, The Mother
  • ஆசையழிந்தால் ஆத்மாவின் பிராணன் (உயிர்) விடுதலை பெறும்.
  • தவறான உணர்வு தன்னையழித்துக்கொண்டால் இதயம் விடுதலை பெறும்.
  • எண்ணம் சிறுமையை இழந்தால் அறிவு விடுதலை பெறும்.
  • ஜடமான அறிவு அழிந்தால் ஞானம் உதயமாகும்.
  • பிராணன், இதயம், அறிவு ஆகியவை கரணங்கள்.
  • கரணங்கள் தூய்மைப்பட்டால், கரணங்கள் விடுதலை பெறும். இது ஆத்ம விடுதலையாகாது.
  • . நிர்வாணம் என்பது அமைதியான பிரம்மம்.
  • நம் இலட்சியத்திற்குத் தேவையான முழு விடுதலை அதனால் கிடைக்காது.
  • பிரம்மத்தினின்று குறைகளை அகற்றும் விடுதலையது (negative freedom).
  • பாடம் படிக்க வேண்டிய பையன் நாள் முழுவதும் T.V/ பார்ப்பது படிக்க உதவாது. T.V.. பார்ப்பதை நிறுத்துவது நல்லது. இனி தவறு தொடராது.
  • T.V. பார்ப்பதை நிறுத்தியதால் பாடம் வாராது. பாடம் வர, படிக்க வேண்டும். வாழ்வின் சிறுமைகளில் உழலும் ஆத்மா அவற்றினின்று விடுதலை பெறுவது பையன் T.V., பார்ப்பதை நிறுத்துவது போன்று. பையன் பள்ளிக்கூடம் போனது படித்துப் பட்டம் பெற. ஆத்மா ஜன்மம் எடுத்தது வாழ்வில் ஆத்மா மலர. வாழ்வின் இருளினின்று விலகியது முதற் கட்டம்.

 
 -------------------------------------------------------------------------------------------------------------------------


Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Careya arborea Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, Pondicherry Mother,  problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine, Flower, Message, Message of the day, flowers, Spiritual Significance of flowers, மலர்கள், ஆன்மீக பலன்கள், மலர்களின் பலன்கள்,கர்மபலன்களில் இருந்து விடுதலை

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.