நம் சிந்தனைக்கு:
வழி வழியாக வந்த மரபில், ஆன்மீக ஈடுபாடு அல்லது தீவிரமான இறை நம்பிக்கை என்பது முதுமை அடைந்தவர்களுக்கானது என்ற எண்ணமும் உள்ளது. "பரபரப்பாக இயந்திரம் போன்று சுழன்று கொண்டிருக்கிறோம், இதில் தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் ஏது நேரம்?", என்பவர்களும் உண்டு. நான் வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பின்தான் ஆன்மீகத்தில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன் என்பவர்களும் உண்டு. "எனது குழந்தைகள் ஒரு நிலையை அடைந்து விட்ட பிறகுதான், எனக்கு நிம்மதி. அதன் பிறகுதான் ஆன்மிகம்", என்பவரும் உண்டு. இப்படியாக, இறைவனை தீவிரமாகச் சிந்திப்பது என்பது அன்றாட வாழ்வில் நடவாத காரியம் என்றும் எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர். இதனை வைத்துப் பார்த்தால் ஆன்மிகம் வேறு, அன்றாட வாழ்வு வேறு என்றும் நினைப்பவர்கள் உள்ளனர்தானே? பெறற்கரிய, மனிதப பிறவியைப் பெற்ற நாம், இறைவனின் கருவியாகச் செயல்படுவதற்கும், அவனால் நாம் பெரும் பேரானந்தத்தைப் பெறுவதற்கும் நாம் முதுமைப் பருவம் வரை காத்திருக்க வேண்டுமா?
இதே போல், குழந்தைகளுக்கு ஆன்மீகக் கருத்துக்களை கூறுவதும், சிறு வயதிலேயே அவர்களை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்வதும், சில சமயங்களில், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் சிலரின் கருத்து. இதற்கும் அன்னையின் பதில்களை இக்கட்டுரையில் காணலாம்.
அன்னையின் பார்வையில்:
இந்த விஷயத்தில், ஸ்ரீ அன்னை, சாதாரண வாழ்கை, ஆன்மீக வாழ்க்கை என்று பிரிப்பது மிகவும் பழமையான முறை என்கிறார். அவர் கூறுவது போல், நம் வாழ்வில் நாம் அறிந்தோ அல்லது அறியாமலோ, நாம் சந்திக்கும் எல்லா நிகழ்விலும் ஆன்மிகம் என்பது பிரிக்க முடியாததாக உள்ளது என்றே கூற வேண்டும். ,
If you need to make an effort to go into meditation, you are still very far from being able to live the spiritual life. When it takes an effort to come out of it, then indeed your meditation can be an indication that you are in the spiritual life.- The Mother
அன்னை கூறும் ஆன்மீக வாழ்வு என்பது இறை சிந்தனையுடன் - Divine Consciousness உடன் நாம் வாழும் வாழ்வு ஆகும். அதற்கு நேரமோ காலமோ தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார். உதாரணமாக, இறைவனின் சிந்தனையுடன், தியானம் என்பதை நாம் மேற்கொள்ள மிகுந்த பிரயத்தனப்பட வேண்டும் என்று கொண்டால், நாம் ஆன்மீக வாழ்வில் இருந்து மிகத் தொலைவில் உள்ளோம் என்று கொள்ளலாம்.மாறாக, தியானத்தில் இருந்து வெளியே வருவதற்கு, பெரிய முயற்சி வேண்டியுள்ளது எனில், உங்களது தியானம், நீங்கள் ஆன்மீக வாழ்வில் உள்ளீர்கள் என்பதனைக் குறிக்கும் என்று அழகுற விளக்குகிறார் ஸ்ரீ அன்னை.
The division between ‘ordinary life’ and ‘spiritual life’ is an outdated antiquity.”
- The Mother
குழந்தைகளுக்கு ஆன்மிகம் சிறு வயதிலேயே தேவையா என்று அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஸ்ரீ அன்னை, நாம் பயிலும் அறிவியலிலும், வரலாற்றிலும் ஆன்மா உள்ளது, உண்மை உள்ளது. எவற்றில் இருந்தும், எந்தச் செயலில் அல்லது நிகழ்வில் இருந்தும் ஆன்மீகத்தைப் பிரித்துப் பார்க்க முடியாது - அது முட்டாள்தனமானது என்றும் கூறுகிறார். குழந்தைகளுக்கு ஆன்மீகத்துடன் உண்மையையும் போதிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
Question : ......At that point I said that in my opinion, to speak to the children of spiritual things often has the opposite result, and that these words lose all their value.”
Mother's Answer:
Spiritual things... They are taught history or spiritual things, they are taught science or spiritual things. That is the stupidity. In history, the Spirit is there; in science, the Spirit is there—the Truth is everywhere. And what is needed is not to teach it in a false way, but to teach it in a true way. They cannot get that into their heads.
Do not divide what is one. Both science and spirituality have the same goal—the Supreme Divinity. The only difference between them is that the latter knows it and the other not. (On Education)
- The Mother, COLLECTED WORKS OF THE MOTHER
சந்நியாசம் ஏற்று, உலக வாழ்வில் இருந்து பிரிந்து வாழ்பவர்கள்தான் ஆன்மீகவாதிகள், மற்றவர்கள் எல்லாம் சாதாரண வாழ்வில் உழலுபவர்கள் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையன்று என்றும் கூறுகிறார். அவ்வாறு பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப்பார்க்க வேண்டும் என நாம் விரும்பினால், சத்தியத்துடன் வாழ்பவர்கள், உண்மையில்லாமல் வாழ்பவர்கள் என்று வேண்டுமானால் மனிதர்களைப் பிரிக்கலாம் என்கிறார். நீங்கள் கூறும் ஆன்மீக வாழ்வோ அல்லது சாதாரண வாழ்வோ எல்லா இடங்களிலும், உண்மையும் பொய்யும் கலந்தே உள்ளன. ஆன்மீகவாதிகள் என்று கூறும் அனைவரிடமும், பொய் இல்லை என்பதும் இல்லை என்கிறார் அன்னை.
There is no“spiritual life”! It is still the old idea, still the old idea of the sage, the sannyasin, the... who represents spiritual life, while all the others represent ordinary life—and it is not true, it is not true, it is not true at all. If they still need an opposition between two things—for the poor mind doesn’t work if you don’t give it an opposition — if they need an opposition, let them take the opposition between Truth and Falsehood, it is a little better; I don’t say it is perfect, but it is a little better. So, in all things, Falsehood and Truth are mixed every where in the so-called“spiritual life”,in sannyasins, in swamis, in those who think they represent the life divine on earth, all that —there also, there is a mixture of Falsehood and Truth. It would be better not to make any division.
- From COLLECTED WORKS OF THE MOTHER
இன்றைய பகுதியில் அன்னை கூறும் ஆன்மீக உண்மைகளை உணர்ந்து, அன்னை கூறும் ஆன்மீக வாழ்வில் இன்றே, இப்பொழுதே இணைவோம். அன்னையின் பாதையில் செல்வோம்.
No comments:
Post a Comment