இன்றைய சிந்தனை

To all those who aspire
Open yourself to the new Force (Supramental Force). Let it do in you its work of
Transformation.



- The Mother


Get this widget

Tuesday, 3 December 2013

சுயக்கட்டுப்பாடு ஏன் தேவைப்படுகிறது?


நமது சிந்தனைக்கு:


வெளிப்படுத்தப்படும் உணர்வு, செயல் அல்லது எண்ணங்கள், சிந்தனைகள் என எல்லாவற்றிலும் மனிதனுக்கு கட்டுப்பாடு என்பது தேவைபடுகிறது. ஒருவர் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், அவரைச் சுற்றி உள்ள மற்றவர்களாலோ அல்லது சூழ்நிலையாலோ கட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது. கட்டுப்பாடு என்ற சொல்லே சிலருக்குப் பிடிப்பதில்லை. அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் நினைக்கின்றனர். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப்பாட்டை சுயக்கட்டுப்பாடு என்கிறோம். ஏன் இந்தக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது?

செயல், எண்ணம், பேச்சு, பழக்கம் என எல்லாவற்றிலும் கட்டுப்பாடு என்பது ஒருவருக்கு தேவைபடுகிறது. உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தன்னிலையை மறப்பவர்கள் சிலர். கோபம் கொண்ட ஒருவர் வன்முறையை நாடுவது அவரது சுயக்கட்டுபாடின்மையைக் காட்டுகிறது. பேச்சைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் வம்பை வளர்கிறார்கள். எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள். இது போல சுயக்கட்டுப்பாடு இன்மையால், நம்மாலும் பிறராலும் ஏற்படுத்தப்படும் எத்தனையோ பாதிப்புகளைக்  கூறலாம்.

மனிதனின் பெரும்பாலான குணங்கள் யாவும் ஒரு காட்டுக் குதிரையினை பழக்கப்படுத்துவது போல கட்டுபடுத்தக் கூடியதுதான் என்கிறார் அன்னை. மிகவும் அரிதாக, சில குணங்கள் அல்லது பழக்கங்கள் மட்டுமே புலியின் வன்மையான குணத்தைப் போல கட்டுப்படுத்த முடியாது என்கிறார். குதிரையின் கடிவாளத்தைப் போல நாம், நமது செயல்கள் அல்லது எண்ணங்களை அடக்க போட்டுக் கொள்ளும் கடிவாளம், சுயக்கட்டுப்பாடு என்கிறார் அன்னை.

நமது இயற்கையான குணத்தை மாற்றிக் கொள்ளும்படி , பெரியவர்களோ நண்பர்களோ கூறினால், அவர்கள் நம்மை கட்டுபடுத்த எண்ணுகிறார்கள் என எண்ணாமல், அதன் உண்மையை அறிய முயல்வது நன்மை பயக்கும் என்றும் கூறுகிறார் அன்னை.

................A WILD horse can be tamed but one never puts a bridle on a tiger. Why is that? Because in the tiger there is a wicked, cruel and incorrigible force, so that we cannot expect anything good from him and have to destroy him to prevent him from doing harm. But the wild horse, on the other hand, however unmanageable and skittish he may be to begin with, can be controlled with a little effort and patience.

.................In men too there are rebellious and unmanageable desires and impulses, but these things are rarely uncontrollable like the tiger. They are more often like the wild horse: to be broken in they need a bridle; and the best bridle is the one you put on them yourself, the one called self-control.
- The Mother. 


அன்னை கூறும் ஒரு கதையைக் காண்போம். மிகவும் திறமை வாய்ந்த ஒரு பிரம்மச்சாரி, பிறர் தன்னை புகழ வேண்டும் என பெருமைக்காக தனது பல திறமைகளை வளர்த்துக் கொள்கிறான். பதினாறு நாடுகளைச் சுற்றிய பின், பல கலைகள் கற்று, திறமைசாலியாக வரும் அவன், "என்னை விட திறமைசாலிகள் இவ்வுலகில் உள்ளனரா?" என்கிறான். பகவான் புத்தர், அவன் கற்காத ஒரு கலையை அவனுக்கு உணர்த்த நினைக்கிறார். "நீங்கள் யார்? "என்று அவன் கேட்ட கேள்விக்கு, "தனது சொந்த உடலைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன்", என்கிறார். அது அறிவாளியால் மட்டுமே முடியும் என்கிறார்.

"அது எப்படி முடியும்? "  என்கிறான் அவன்.

"புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன்னிலை மாறாத கட்டுப்பாடு உள்ள மனத்தைக் கொண்டவன்தான் தலைசிறந்த அறிவாளி "என்று கூறி முடிக்கிறார் பகவான்.

A young Brahmacharin was clever and knew it. He wished to add to his talents more and more so that everyone would admire him. So he travelled from land to land. With an arrow-maker he learned to make arrows. Further on he learnt how to build and sail ships. In another place he learnt how to build houses. And in other places he acquired various other skills. In this way he visited sixteen different countries. Then he returned home and proudly declared, “What man on earth is as skilful as I?” The Lord Buddha saw him and wanted to teach him a nobler art than any he had learnt before. Assuming the appearance of an old Shramana he presented himself before the young man with a begging bowl in his hand. “Who are you?” asked the Brahmacharin. “I am a man who is able to control his own body.” “What do you mean?” “The archer can aim his arrows,” the Buddha replied. “The pilot guides the ship, the architect supervises the construction of buildings, but the wise man controls himself.” “In what way?” “If he is praised his mind remains unmoved, if he is blamed his mind remains equally unmoved. He loves to follow the Right Law and he lives in peace.” 
- The Mother.

ஆகையால், எத்தனையோ திறமை கலை பெற்றாலும், வாழ்வில் வளங்களைப் பெற்றாலும், சுயக்கட்டுப்பாடு என்ற கடிவாளம் நமக்கு மிகவும் மிகவும் முக்கியம் என்றாகிறது.

Tags:

Annai, Aravindar, Aurobindo, சிந்தனை, Divine, Integral psychology (Sri Aurobindo)X Religion & Spirituality, life, Mother, Peace, Philosophy, Philosophy of Logic, Pondicherry, problem solving, SINTHANAIKAL, Spirituality, Tamil Blog, Thoughts of mother, Truth Definitions, views of Aurobindo, views of mother, words of aurobindo, words of mother சிந்தனைகள், அன்னை அரவிந்தர், ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், அன்னை அரவிந்தர், சிந்தனைகள், தமிழ், தமிழ் சிந்தனைகள், கட்டுரைகள், ஆன்மிகம், பூரண யோகம், பாண்டிச்சேரி அன்னை, அருளுரைகள், ஆன்மீக சிந்தனைகள்,Message of the Day - Sri Aurobindo, Service, divine, Service to divine



No comments:

Post a Comment

About this Blog

My photo
A blog that shares the views of Sri Mother and Bhagavan Sri Auriobindo. This blog is not related to any Spiritual Organisation. This is a non commercial website intended to share information and spread the Divine consciousness.